🔴 LIVE | முப்பெரும் விழா 2023


நாமக்கல் லாரி ஓட்டுநரின் நூதன பிரச்சாரம்!

கம்பளத்தார் சமுதாயத்தில் அரசியல், சுயதொழில், கல்வி, அரசு வேலைவாய்ப்பு போன்றவற்றில் முன்னனியில் இருப்பது நாமக்கல் மாவட்டம் என்றால் மிகையல்ல. ஏறக்குறைய 200-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கம்பளத்தார் சமுதாய மக்கள் வசிக்கின்றனர். DNT ஒற்றைச்சான்றிதழ் கேட்டு நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள், வன்னியர் இடஒதுக்கீடுக்கு எதிரான சட்டப்போராட்டம் என ஒட்டுமொத்த சமுதாயத்தின் பிரச்சினைக்கும், நாமக்கல் மாவட்ட உறவுகள் முன்னனியில் இருந்து அரும்பணியாற்றி வருகின்றனர். 

இதன் தொடர்ச்சியாக மதுரையில் நடைபெறும் சமூகநீதி மாநாட்டிற்கான விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஒவ்வொருவரும் வீடுதோறும் கொண்டு சேர்த்து வருகின்றனர். தொட்டிய நாயக்கர் சமுதாய அறக்கட்டளை, விடுதலைக்களம் கட்சியும் முழுமையாக பிரச்சாரத்தை நடத்திவரும் நிலையில், லாரி ஓட்டுநரும், உரிமையாளருமாக உள்ள பாலமுருகன் வெளியூர் செல்லும் தனது லாரியிலும், டாடா ஏஸ் வாகனத்திலும் மாநாட்டு போஸ்டர் ஒட்டி பிரச்சாரத்தை செய்வதோடு, துண்டு பிரசுரங்களையும் வாகனத்தில் வைத்துக்கொண்டு தான் செல்லும் வழியிலுள்ள கம்பளத்தார் சமுதாய கிராமங்களில் பிரச்சாரம் செய்து வருகிறார்.


இதுகுறித்து பேசிய பாலமுருகன், குறு விவசாயியான தன் குடும்பத்திலிருந்து முதல்தலைமுறை பொறியாளர்கள் உருவாக இடஒதுக்கீடே காரணம் என்றும், இன்னும் ஏராளமான குடும்பங்களுக்கு இதன் பயன் சென்று சேர வேண்டியிருப்பதாகவும், அவர்களும் முன்னேறும்வரை அதைப்பாதுகாக்க பயன்பெற்றவர்கள் முன்வருவதே சமுதாயத்திற்கு செய்யும் தொண்டாக இருக்கும் என்றார். எளியவர்களில் அக்கரை மட்டும் தியாகத்தால் மட்டுமே சமுதாயம் இன்னும் உயிர்ப்புடன் உள்ளது.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved