🔴 LIVE | முப்பெரும் விழா 2023


இராஜகம்பள மஹாஜன சங்கத்தின் சார்பில் கர்ம வீரர் காமராஜருக்கு மரியாதை!

பனகல் அரசரின் தலைமையிலான நீதிக்கட்சி ஆட்சியில் (1921-26) திறக்கப்பட்ட 12384 தொடக்கப்பள்ளிகளை பின்னர் வந்த இராஜாஜி தலைமையிலான அரசு மூடியதை, 1954-இல் சென்னை மாநில முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டு, மூடப்பட்ட பள்ளிகள் மீண்டும் திறந்து, பள்ளிக்கூடம் இல்லாத ஊரே இல்லை என்ற நிலையை  உருவாக்கி கல்விக்கண் திறந்த காமராஜர் என்று புகழப்பட்ட கர்ம வீரர் காமராஜரின் 120-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது.


தமிழ்நாடு இராஜகம்பள மகாஜன சங்கத்தின் தொடக்ககால தலைவர் அமரர்.வையப்பநாயக்கரின் நெருங்கிய நண்பராக இருந்த காமராஜர், மகாஜன சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று தொட்டிய நாயக்கர் சமுதாயத்தை 1957-இல் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து, கம்பளத்தார் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருந்த கர்மவீரருக்கு, அவரது பூர்வீக மண்ணான விருதுநகர் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள சிலைக்கு இராஜகம்பள மஹாஜன சங்கத்தின் ஒருங்கிணைப்பாளரான வை.மலைராஜன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தென்மாவட்டங்களில் மதுரையில் நடைபெறவுள்ள சமூகநீதி மாநாட்டிற்கான விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டு வரும் விடுதலைக்களம் கட்சியின் நிறுவன தலைவர் கொ.நாகராஜன் தலைமையில் அக்கட்சியினர் கர்மவீரர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved