🔴 LIVE | முப்பெரும் விழா 2023


கோவையில் துளிர் விடும் இராஜ கம்பளத்தார் ஒற்றுமை!

தமிழக அரசியல் களத்தில் சமீப காலங்களாக நடைபெற்று வரும் அரசியல் களோபரங்களின் மூலம் மாநிலத்தில் ஏதோ ஒருசில சாதிகளே இருப்பதுபோலவும், அவர்களை திருப்தி படுத்துவதே தலைமையின் நோக்கமாக இருப்பதை பார்த்துவருகிறோம். மாநிலம் முழுவதும் இருபதுக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 40 லட்சத்திற்கும் அதிகமான கம்பளத்தார்கள், அதுபோல் எண்ணற்ற சாதிகள் பரவி இருந்தாலும், அவர்களையெல்லாம் அரசியல் களத்தில் பொருட்டாகவே நினைப்பதில்லை. ஏற்கனவே தமிழக அரசியலின் போக்கை மாற்றும் வல்லமை மிக்க அளவில் வலுவாக இருந்த நாயுடு சமூதாயமும் தற்பொழுது முக்கியத்துவத்தை இழந்து வருவதையும் பார்க்க முடிகிறது. 


கம்பளத்தார் சமுதாயத்தின் இந்நிலை குறித்தான வருத்தமும், ஆதங்கமும் பல நாட்களாக இளைஞர்கள் மத்தியில் இருந்த நிலையில், முதல்கட்டமாக கோவை மாவட்ட இளைஞர்கள் சமுதாயத்தினரை ஒன்றிணைக்கும் முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒருபகுதியாக இன்று ஈச்சனாரியில் இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், கோவை என்ற பெயரில் அமைப்பை உருவாக்கி நிர்வாகிகளை தேர்ந்தெடுத்துள்ளனர். சமுதாய பெரியோர்களின் வழிகாட்டுதல் மற்றும் ஆதரவோடு கட்சிகள் கடந்து வெற்றிகரமாக இன்று நடத்தி முடித்துள்ளனர். இதேபோல் கோவை மாவட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் கிளையை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

இதற்கான நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக்கிழமை (31.07.2022) காலை மாச்சநாயக்கன்பாளையத்தில் திரு.சிவசாமி அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved