🔴 LIVE | முப்பெரும் விழா 2023


வீரமும், தியாகமும் நிறைந்த மாவீரன் கட்டபொம்மன் புகழ் நிலைக்கச் செய்வோம்!

நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை போட்டி நடத்த ஆளுநர் அவர்கள் அறிக்கை வெளியீடு செய்து உள்ளார். அதில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு  "நான் விரும்பும் சுதந்திர போராட்ட தலைவர்" என்ற தலைப்பில் கட்டுரை போட்டி நடைபெறுகிறது.

தமிழக ஆளுநரின் இந்த அறிவிப்பு குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக்கழக மாநில இளைஞரணிச் செயலாளர் சி.பூப்பாண்டி அவர்கள், இந்திய சுதந்திரப்போராட்ட வரலாற்றில் எண்ணற்ற வீரர்களையும், தலைவர்களையும் போர்க்களத்தில் பலிகொடுத்தது கம்பளத்தார் சமுதாயம்.

மறைக்கப்பட்ட அவர்களின் தியாகத்தையும், போராட்ட வலிமையையும் உலகறியச் செய்வது நமது ஒவ்வொருவரின் கடமை. அதற்கான வாய்ப்பாக அமைந்துள்ளது தமிழக ஆளுநரின் இந்த அறிவிப்பு.

எனவே  நமது சமுதாய மாணவர்கள் அதிகளவில் மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் பற்றி கட்டுரை எழுதி அனுப்பிட வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இதற்கு குழந்தை களின் பெற்றோர்கள் மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகத்தின் இளைஞர் அணியினர் தங்களது பகுதியில் உள்ள நம்முடைய மாணவர்களுக்கு உதவி செய்யுமாறு உங்களை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கட்டுரை அனுப்ப வேண்டிய முகவரி: 

இயக்குனர் ,
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்,
செம்மொழி சாலை,
பெரும்பாக்கம் ,
சென்னை 600100
.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved