🔴 LIVE | முப்பெரும் விழா 2023


டிஎன்பிசி குரூப்- IV தேர்வு அதிக கேள்விகள் கட்டபொம்மன் பற்றியது!

தமிழக அரசு துறைகளில் உள்ள 7,301 காலி இடங்களை நிரப்புவதற்கான தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வணையமான டி.என்.பி.எஸ்.சி.யின் குரூப் - 4 தேர்வுகள் கடந்த 24.07.2022 (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்பட்டது. டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வுக்கு தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 22 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் 12.67 லட்சம் பேர் பெண்கள், 9.35 லட்சம் பேர் ஆண்கள், 131 பேர் மூன்றாம் பாலினத்தவர். தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 7,689 மையங்களில் இந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு நடைபெற்றது.


காலை 9.30 மணிக்கு துவங்கிய இத்தேர்வுகள் பகல் 12.30 மணிக்கு முடிவடைந்தது. 10ஆம் வகுப்பு தரத்தில் மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு நடைபெறும். கட்டாய தமிழ் மொழி தகுதி மதிப்பீட்டு தாளில் 150 மதிப்பெண்களுக்கு 100 கேள்விகள் இடம்பெற்றிருந்தன. பொது அறிவு பிரிவில் 75 திறனறிதல் பிரிவில் 25 கேள்விகள் என 150 மதிப்பெண்களுக்கு 100 கேள்விகள் இடம் பெற்றிருந்தது. குறைந்தபட்சம் 90 மதிப்பெண்கள் எடுத்தால் தேர்வர்கள் தேர்ச்சி பெறுவார்கள்.


இந்நிலையில் பொதுஅறிவு பிரிவு கேள்விகளில் 4 கேள்விகள் மாவீரன் கட்டபொம்மன் பற்றியதாக இருந்துள்ளது தெரியவந்துள்ளது. தமிழக சுதந்திரப்போராட்ட வீரர்களின் வரலாற்றை டிஎன்பிசி வினாத்தாளில் கேட்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சிக்குறியது. பெரும்பாலான சமுதாய மக்கள் தங்கள் சமுதாய சுதந்திரப்போராட்ட வீரர்களை தெரியாமல் இருக்கும் நிலையில், குரூப் தேர்வில் இடம்பெற்றிருப்பதின் மூலம் பல லட்சம் பேருக்கு கொண்டு சேர்த்துள்ள அதேவேளையில். மாணவ-மாணவியருக்கு வரலாற்றை தெரிந்துகொள்வதின் அவசியத்தையும் தெளிவாக்கியுள்ளது தமிழக அரசு. 


முதல் சுதந்திரப்போராட்ட மாவீரன் கட்டபொம்மன் குறித்து அதிகம் கேள்விகள் இடம்பெறச்செய்திருப்பதிற்கு தேர்வாணையத்திற்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved