🔴 LIVE | முப்பெரும் விழா 2023


தொ.நா + வே.க + நா.க + ஊ.க+ இதர = கொங்கு மண்டலம்

கரூர் மாவட்டம், சின்னமநாயக்கன்பட்டியில் தொட்டிய நாயக்கர் சமுதாயத்தினர் பாரம்பரியமாக கொண்டாடி வரும் ஊர்த்திருவிழா கடந்த ஞாயிறன்று (24-07-2022) கொண்டாடப்பட்டது. அப்பொழுது மதுரையில் ஆகஸ்டு 7-இல் நடைபெறும் சமூக நீதி மாநாட்டிற்கான அழைப்பிதழை வேட்டுவக்கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்த தலைவர்களான கரூர் சுந்தர்ராஜன், பரத், சுந்தரமூர்த்தி ஆகியோர் ஊர்நாயக்கர் உள்ளிட்டோரிடம் வழங்கி, கூடியிருந்த கம்பளத்து சமுதாய மக்களிடம் விளக்கிப்பேசினார்.


திருவிழாவிற்கு வந்த வேட்டுவர் சமுதாய தலைவர்களை ஊர்நாயக்கர் பொன்னுச்சாமி,  விக்கி என்கிற விக்ரம், ஹரி,  கார்த்தி, ஹரிஷ் நவீன், அஜித், ஹரிஹரன், சிஆர் பொன்னுச்சாமி மற்றும் சமுதாய உறவுகள் வரவேற்றனர்.

கரூர், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கோவை என கொங்குமண்டலத்தின் அனைத்துப்பகுதியிலும் ஒரே கிராமங்களிலும், அருகருகேயுள்ள கிராமங்களிலும் வசிக்கும் வேட்டுவக்கவுண்டர், நாட்டுக்கவுண்டர், ஊராளிகவுண்டர் சமூகத்தினர் காலம் காலமாக அண்ணன் தம்பிகளாக உறவு முறையில் அழைத்து பழகி வருகின்றனர். 


கொங்கு மண்டலத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்த சாதிகளுடன், தெலுங்கு மொழி பேசும் போயர், ஒட்டர் சமூகங்களும் பெருமளவில் இருந்தும் அரசியல் அதிகாரமற்ற சமூகங்களாக (வாய்ப்பற்ற சமூகங்கள்) இருந்து வருகின்றன. முற்போக்காக சிந்திக்ககூடிய இச்சமுதாய தலைவர்கள் ஒன்றிணைந்து கொங்கு மண்டலத்தில் செயல்பட்டால் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை நிகழ்த்திக்கட்ட முடியும் என்பதற்கு கடந்த சட்டமன்றத்தேர்தலில் நாமக்கல், கரூர் மாவட்டங்கள் நிகழ்த்திக்காட்டியுள்ளதை தேர்தல் முடிவுகள் மூலம் அறியலாம். 


சமூகநீதியை வென்றெடுக்க தொட்டிய நாயக்கர்களை அரவணைத்து போராட்ட களங்களை முன்னெடுக்கும் வேட்டுவர் சமுதாய தலைவர்களுக்கு நன்றியும், வாழ்த்துகளும்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved