🔴 LIVE | முப்பெரும் விழா 2023


பாஜக தலைவருடன் ஒரு சந்திப்பு! - கம்பளத்தாரின் வரலாறு அறிந்து நெகிழ்ச்சி!

கோவை தெற்கு மாவட்ட பாஜக மாவட்ட தலைவர் வசந்தராஜனை சமுதாய தலைவர்கள் கடந்த ஞாயிறன்று சந்தித்து நன்றி தெரிவித்துக்கொண்டர். இது குறித்த கோவை மாவட்ட இராஜகம்பள சமுதாய ஒருங்கிணைப்பாளர் கே.டி.மோகன்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,


கடந்த (31.07.2022) ஞாயிற்றுக்கிழமை கோவை மாவட்ட இராஜகம்பள சமுதாய  நலச்சங்கம் மற்றும் கிளை அமைப்புகள் துவக்கவிழா ஈச்சனாரி விவேகா திருமண மண்டபத்தில் மாச்சேகவுண்டன்பாளையம் துரை.சிவசாமி தலைமையில் சீரும் சிறப்புமாக நடைபெற்றது. 

இதனைத்தொடர்ந்து கோவை தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் வசந்தராஜன் அவர்களை சந்தித்து கோவை தெற்கு மாவட்ட விவசாய அணி தலைவர், ஓபிசி துணைத்தலைவர் மற்றும் மாவட்ட, ஒன்றிய பொறுப்பாளர்களாக கம்பளத்தார் சமுதாயத்தினருக்கு உரிய பிரதிநிதித்துவமும், முக்கியத்துவமும் வழங்கப்பட்டுள்ளதற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும், கோவை மாவட்டத்தில் கம்பளத்தாரின் பலநூற்றாண்டுகால வரலாறு, கொங்கு மண்டல கம்பளத்தார் ஜமீன்கள், வாழ்வியல், நிலவுடமை, அரசியல் பங்களிப்பு குறித்து அவரிடம் பொதுச்செயலாளர் செந்தில்குமார், ஒருங்கிணைப்பாளர் கே.டி.மோகன்ராஜ் ஆகியோர் விளக்கினர்.

அப்போது பேசிய வசந்தராஜன் கம்பளத்தார் சமுதாயத்தோடு தனக்கு நெருங்கிய நட்பு நீண்டகாலமாக இருந்து வருவதாகவும், ஆனால் இம்மாதிரியான வரலாற்று பின்னனி தெரியவில்லை என்றார். மேலும், தற்பொழுது தங்கள் கட்சியில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ள தர்மபிரகாஷ், குணசேகரன், நேதாஜி ஆகியோரின் குடும்பங்களுக்கே தனித்த அடையாளமும், வரலாறும் இருப்பதை சுட்டிக்காட்டியவுடன், நிச்சயம் உரிய வாய்ப்புகளை உங்கள் சமுதாயத்திற்கு பெற்றுக்கொடுப்பேன் என்றும், விரைவில் அதை நீங்கள் உணரலாம் என்றும் வாக்குறுதி அளித்தார். 

சுமார் நாற்பத்தைந்து நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பின்போது மாவட்ட தலைவர், மாவட்ட செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளுக்கு சமுதாய தலைவர்கள் பொன்னாடை  அணிவித்தனர். இந்த சந்திப்பின்போதுபொன்னாபுரம் பாபு, கு.க.பாளையம் குணகேகரன், போளியம்பட்டி குணசேகர், முத்துராஜ், வடிவேல், ராஜ்குமார், சண்முகம்குமார், நேதாஜி உள்ளிட்ட பல சமுதாய உறவுகள் உடனிருந்தனர். ஒன்று படுவோம், நமக்கான அரசியலை வென்றெடுப்போம், இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved