🔴 LIVE | முப்பெரும் விழா 2023


விடுதலைக்களம் கட்சி இந்திய தேர்தல் ஆணையம் ஆங்கீகரம் !

விடுதலைக்களம் அமைப்பு நாமக்கல் மாவட்டம், இராசிபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு  2000-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இதன் நிறுவன தலைவராக கொ.நாகராஜன் செயல்பட்டு வருகிறார். தொட்டிய நாயக்கர் சமுதாய மேம்பாட்டிற்காக தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, தமிழகத்தின் வாழ்வாதார பிரச்சினைகளான காவிரி நீர்ப்பிரச்சினை, முல்லைப்பெரியாறு பிர்ச்சினை மற்றும் இலங்கை தமிழர் விவகாரம் உள்ளிட்ட பல முக்கிய  பிரச்சினைகளுக்காகவும் குரல் கொடுத்து வருகிறது. 

சட்டமன்றம், உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களில் குறிப்பிட்ட சில தொகுதிகளில் தங்கள் வேட்பாளர்களை சுயோட்சையாக களமிறக்கி போட்டியிட்டு வந்தநிலையில், விடுதலைக்களம் கட்சியாக அங்கீகரிக்கக்கோரி கடந்த ஆண்டு இந்தியத் தலைமைத்தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்திருந்தது. விடுதலைக்களத்தின் விண்ணப்பித்தை பரிசீலித்து கூடுதலாக சில ஆவணங்கள் கோரப்பட்டிருந்த நிலையில், தேர்தல் ஆணையம் கேட்டிருந்த ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன, இதனை ஏற்றுக்கொண்ட தேர்தல் ஆணையம் இன்று விடுதலைக்களம் கட்சிக்கு பதிவு எண் (56/120/2021-2022) வழங்கியுள்ளது.

கால்நூற்றாண்டுகாலமாக கம்பளத்தார் சமுதாயத்தில் புறக்கணிக்க முடியாத சக்தியாகவும், மறுக்கமுடியாத பணிகளையும் செய்துள்ள விடுதலைக்களம் கட்சியை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தால் பதிவு செய்யப்பட்ட கட்சியாக உயர்ந்துள்ளதற்கும்,  தேர்தல் களம் கண்டு தனிச்சின்னத்தையும், நிரந்த அங்கீகாரத்தையும் பெஉவதற்கு சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் வாழ்த்துகிறது.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved