🔴 LIVE | முப்பெரும் விழா 2023


அணியணியாய் ஆர்வமுடன் குவியும் பெண்கள்!

இன்று மாலை 3 மணியளவில் மதுரை விமானநிலையம் அருகே நடைபெறவுள்ள சமூகநீதி மாநாட்டிற்கு நேற்று மாலை முதலே பெண்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் புறப்பட்டனர். 

மத்திய, மாநில அரசுகளை சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தக்கோரி வலியுறுத்தி நடைபெறும் இம்மாநாட்டில் தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட 262 சாதிகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கவுள்ளனர். 


இம்மாநாட்டிற்கான பணிகளை கடந்த ஒருவாரமாக தொட்டிய நாயக்கர் சமுதாய தலைவரும், சமூகநீதி கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான பெ.இராமராஜ் மதுரையில் முகாமிட்டு ஒருங்கிணைத்து வந்தார். நேற்று காலையில் இருந்தே நூற்றுக்கணக்கான சமுதாய தலைவர்கள் மாநாட்டுப்பந்தலில் திரண்டு இறுதிகட்டப்பணிகளை பார்வையிட்டு,  கூட்ட ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

தொட்டியநாயக்கர் சமுதாயத்தின் சார்பில் வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் இராதாகிருஷ்ணன்  தலைமையிலான குழுவினர் நேற்று மாலை மாநாட்டு திடலை பார்வையிட்டு,  ஒருங்கிணைப்பாளருக்கு வாழ்த்து தெரிவித்தனர். 


அதேபோல் நேற்று மாலையே பிரமலைக்கள்ளர் சமுதாய மகளிர் அணியினரும் மாநாட்டு திடலை வந்தடைந்தனர். சிவகங்கை, புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி போன்ற தென்மாவட்டங்களில் இருந்து முத்தரையர்,  முக்குலத்தோர், வீரசைவர் சமுதாய பெண்களும், கரூர், நாமக்கல், சேலம், திருப்பூர், ஈரோடு, கோலை போன்ற மாவட்டங்களில் இருந்து தொட்டிய நாயக்கர், வேட்டுவக்கவுண்டர், கொங்கு செட்டியார் உள்ளிட்ட பெண்களும் பேருந்துகளில் இன்று காலையே மதுரையை வந்தடைந்ததை அடுத்து சமூகநீதி மாநாடு களைகட்டியுள்ளது.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved