🔴 LIVE | முப்பெரும் விழா 2023


மாவீரர்களுக்கு மரியாதை செய்து சுதந்திர தினத்தைக்கொண்டாடிய கம்பளத்தார்கள்!

நாட்டின் 75-வது சுதந்திரநாளை நாடெங்கும் எழுச்சியுடன் கொண்ட்டாடி வரும் நிலையில், இந்திய சுதந்திரத்திற்காக எண்ணற்ற உயிர்த்தியாகங்களை செய்த கம்பளத்தார் சமுதாயத்தினர் மாநிலம் முழுவதும் பல இடங்களிலும்அமைந்துள்ள மாவீரன் கட்டபொம்மனார் சிலைக்கும், தளி எத்திலப்ப நாயக்கர், விருப்பாச்சி கோபால நாயக்கர், ஊமைத்துரை உள்ளிட்ட மாவீரர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


 75 வது சுதந்திரதின விழாவை முன்னிட்டு அரசு சார்பில் தூத்துக்குடி மாவட்டம், ஆதனூரிலுள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் வாரிசுதாரர்களுக்கு மாலை அனுவித்து மரியாதை செலுத்தப்பட்டது.


பாளையங்கோட்டையில் அமைந்துள்ள மாவீரன் கட்டபொம்மன் சிலைக்கு நெல்லை மாவட்ட இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் பாளை.மாரிச்சாமி உள்ளிட்டோர் ஆளுயர மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


கோவை மாவட்டம் ஈச்சனாரியில் அமைந்துள்ள கட்டபொம்மன் சிலைக்கு இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் ஈச்சனாரி மகாலிங்கம், இணை ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார், மண்ணூர் மகாலிங்கம், குள்ளக்காபாளையம் குணசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


மதுரையில் அமைந்துள்ள மாவீரன் சிலைக்கு பண்பாட்டுக்கழக மாநில இளைஞரணி செயலாளர் பூப்பாண்டி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


திருப்பூர் மாவட்டம் பாரப்பாளையத்தில் அமைந்துள்ள கட்டபொம்மன் சிலைக்கு பண்பாட்டுக்கழக அவைத்தலைவர் பி.எஸ்.மணி, பொதுச்செயலாளர் இராமகிருஷ்ணன், மாவட்ட தலைவர் ரஞ்சித் உள்ளிட்டோர் தேசியக்கொடியேற்றி 75-வது சுதந்திரதினத்தை கொண்டாடினர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தளி எத்திலப்ப நாயக்கர் நினைவிடத்தில் சாமிநாதன், ராஜ்கண்ணன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.


கயத்தாரிலுள்ள மாவீரன் மணிமண்டபத்தில் பண்பாட்டுக்கழகத்தின் மாநிலத்தலைவர் ஆர்.வரதராஜன், கௌரவ ஆலோசகர் நல்லாசிரியர் சங்கரவேலு உள்ளிட்டோர் தேசியக்கொடியேற்றி மரியாதை செய்தனர். முன்னதாக பாஞ்சாலங்குறிச்சி கோட்டையிலுள்ள மாவீரன் சிலைக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்தார்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved