🔴 LIVE | முப்பெரும் விழா 2023


மனைவி தாங்க கவுன்சிலர்.... ஆனா விபரத்தை நான் சொல்றேன் கேட்டுக்குங்க...

நாடாளுமன்றம். சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் நீண்டநாட்களாக நிறைவேற்றப்படாமல் முடங்கிக்கிடந்தாலும், தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் மகளிருக்கு 50 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதனால் தமிழகத்திலுள்ள மாநகராட்சிகள் தொடங்கி கிராம ஊராட்சி வரை மேயர், நகரமன்ற தலைவர், பேரூராட்சி தலைவர், ஊராட்சி மன்றத் தலைவர் உள்ளிட்ட பதவிகளில் சரிபாதி பெண்கள் தலைவர்கள் உள்ளனர். 

பெண்களுக்கு அதிகாரமளிக்கும் வகையில் இந்த இடஒதுக்கீடு வழங்கப்பட்டிருந்தாலும், பெயரளவில் மட்டுமே அவர்கள் செயல்படுவதாகவும், கணவர்களே முழு ஆதிக்கம் செலுத்துவதாக நீண்ட நாட்களாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இதுதொடர்பாக கடந்த மார்ச் மாதம் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி வெளியிட்ட அறிக்கை ஒன்றில் உள்ளாட்சியில் மகளிருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் எனபது அவர்களுக்கு மட்டுமல்ல அடுத்த தலைமுறை பெண்களுக்கும் சேர்த்ததே. எனவே தந்தை, சகோதரர், கணவன் என யாரையும் உங்கள் பொறுப்பில் செயல்பட அனுமதிக்காதீர் என்று வேண்டுகோள் வைத்திருந்தார்.

கனிமொழி வைத்த வேண்டுகோள் ஆறுமாதம் கடந்துள்ள நிலையில், டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளிதழ் இன்று வெளியிட்டுள்ள ஆய்வில் சென்னை மாநகராட்சி பெண் உறுப்பினர்களின் கைப்பேசி எண்ணில் தொடர்புகொண்டால், பெரும்பாலும் தொலைபேசியை எடுப்பதே ஆண்களாக உள்ளனர். தொலைபேசியை எடுத்த சில உறுப்பினர்களும், வார்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து கேட்டால், உடனடியாக  இணைப்பை கணவரிடம் கொடுத்து விடுகின்றனர் அல்லது கணவரிடம் கேட்குமாறு சொல்வதாக கூறியுள்ளது. அதேபோல் தொலைபேசியை எடுக்கும் ஆண்களிடம் கவுன்சிலரிடம் பேச வேண்டுமென்று கூறினால், என்ன தகவல் வேண்டும், நானே சொல்கிறேன் என்ற பதிலையே அளிக்கின்றனர் என்றும் ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இராஜீவ் காலத்தில் கொண்டுவரப்பட்ட பஞ்சாயத்துராஜ் சட்டம் மத்திய, மாநில அரசுகளிடம் குவிந்துள்ள அதிகாரங்களை கிராம ஊராட்சி வரை பகிர்ந்தளிக்க வேண்டும் என்ற நோக்கில் கொண்டுவரப்பட்டது. தமிழகத்தில் உள்ளாட்சி பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்களில் அதிகப்படியானோர் பட்டதாரிகளாக இருந்தபோதிலும், பெயரளவில் மட்டுமே பதவி வகிப்பதும், ஆண்கள் பெண்களுக்கு எதுவும் தெரியாது என்ற பழமைவாத எண்ணங்களில் இருப்பது, பெண் ஆளுமைகள் உருவாவதற்கு பெறும் முட்டுக்கட்டையாக உள்ளது. இந்த நிலை மாற வேண்டும் என்பதே அரசின் விருப்பமாகவும் உள்ளது. மற்ற மாநிலங்களில் குறிப்பாக சமீபத்தில் மத்தியப்பிரதேசத்தில் தேர்வு செய்யப்பட்ட மகளிர் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பதிலாக அவர்கள் கணவர்களே பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டதுபோல் அல்லாம,ல் தமிழகம் ஓரளவு பாலின சமத்துவத்தை நோக்கி நகர்வது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved