🔴 LIVE | முப்பெரும் விழா 2023


உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக யு.யு.லலித் பதவியேற்றார்! - வாழ்த்துகள்

உச்சநீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட உதய் உமேஷ் லலித்  இன்று காலை பதவி ஏற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு  பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற எளிய விழாவில் பதிவியேற்றுக் கொண்ட யு.யு.லலித், இரண்டரை மாதங்கள் (74  நாட்கள்) மட்டுமே தலைமை நீதிபதியாக பணியாற்றி நவம்பர் 8 ஆம் தேதி ஓய்வு பெற உள்ளார். முன்னதாக நேற்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த என்.வி. ரமணா ஓய்வு பெற்ற நிலையில், யு.யு.லலித் இன்று பதவியேற்றுக்கொண்டார்.

மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் 1957-இல் வழக்கறிஞர் குடும்பத்தில் பிறந்த  யு.யு.லலித், 1983ல் வழக்கறிஞராக பணியை தொடங்கியவர், 2004ல் உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞராக அங்கீகரிக்கப்பட்டார்.  2ஜி வழக்கில், சிபிஐ சார்பில் வாதாட கூடுதலாக நியமிக்கப்பட்டவர் யு.யு.லலித், பாலிவுட் நடிகர் சல்மான்கான் வன உயிரினங்களை வேட்டையாடிய வழக்கு, சொராபுதீன் ஷேக் என்கவுன்டர் வழக்கு உள்ளிட்ட பல பிரபலமான வழக்குகளில் ஆஜராகியுள்ளார். இவரது தாத்தா ரங்கநாத் லலித் சுதந்திர இந்தியாவிற்கு முன்பே வழக்கறிஞராக இருந்தவர். இவரது தந்தை யு.ஆர்.லலித் மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில் கூடுதல் நீதிபதியாகவும், உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 2014 ஆகஸ்ட் 13ல் நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட யு.யு லலித், பத்மநாபசுவாமி கோயிலை நிர்வகிக்கும் உரிமை, திருவிதாங்கூர் அரச குடும்பத்தினருக்கு உண்டு என்று தீர்ப்பு வழங்கியவ.ர் முத்தலாக் வழக்கில் தீர்ப்பு வழங்கிய 5 நீதிபதிகள் அமர்வில் யு.யு.லலித்தும் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 2022 நவம்பர் 8ல் 65 வயது பூர்த்தியான பின் யு.யு லலித் ஓய்வு பெறுகிறார்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved