🔴 LIVE | முப்பெரும் விழா 2023


மிக்கைல் கொர்ப்பசேவ் மரணம் - உலக வல்லரசின் தலைவர் அமைதி கொண்டார்.

இந்த உலகில் இரண்டே இரண்டு வல்லரசுகள் ஒன்று அமெரிக்கா மற்றும் ரஷ்யா இது எழுதப்படாத சாசனம் இப்போது சீனாவும் எட்டி எட்டிப் பார்க்கிறது போட்டிக்கு தயாராக நிற்கிறது இந்தியாவும் களத்தில் இறங்கலாம் இறங்க முடியும் வாய்ப்பு இருக்கிறது முதலில் இத்தாலிக்கு சப்போர்ட் செய்வதை நிறுத்த வேண்டும் உலக வங்கியின் பதுக்கி வைத்திருக்கும் 

ஏறக்குறைய நூறு ஆண்டுகளுக்கு காலமாக உலக வல்லரசுகள் என்கிற அந்த பாரம்பரியம் நிலை காக்கப்பட்டு வருகிறது ரஷ்யா அமெரிக்கா என்கிற இந்த இரண்டு பேரில் யார் உலக போலீஸ்காரர் சேவையை செய்ய முடியும் என்பதற்கு பல பல ஒலிம்பிக் போட்டிகளும் நடைபெறுகின்றன ஒவ்வொரு காலகட்டத்திலும் இரண்டு நாடுகளுமே தங்கப் பதக்கங்களை வாங்கி இருக்கின்றன சில சமயங்களில் கீழே விழுந்தும் மீசையில் ஒட்டிய மண்ணை தடவிவிட்டு சாக்லேட் சாப்பிடுகிறேன் என்று சொல்லிய வரலாற்று படங்கள் பேசுகின…

இந்த உலகில் இரண்டே இரண்டு வல்லரசுகள் ஒன்று அமெரிக்கா மற்றும் சோவியத் ரஷ்யா என எழுதப்படாத சாசனம் இருந்த காலம் என்று ஒன்று உண்டு. அப்படிப்பட்ட வல்லரசு நாடுகளின் ஒன்றான சோவியத் ரஷ்யா துண்டு துண்டாக சிதறிப்போனதற்கு காரணமானவர் என்று கம்யூனிஸ்டு இயக்கங்களால் விமர்சிக்கப்படும் அந்நாட்டின் முன்னாள் அதிபர் மிக்கேல் கொர்பச்சேவ் (92) நேற்று முன்தினம் காலமானார். நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி  மரணம் அடைந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

நீண்டகால பனிப்போரை முடிவுக்குக்கொண்டுவந்து உலக அமைதிக்கு காரணமாக இருந்ததாக அமைதிக்கான நோபல் பரிசு வென்ற சோவியத் ஒன்றியத்தின் கடைசி தலைவர் கொர்பச்சேவ் , அவரின் ஆட்சியில் உலக வல்லரசுகளில் ஒன்றாக இருந்த சோவியத் யூனியன், எப்படி சிதறுண்டுபோனது என்பதில் ரஷ்யாவின் வரலாறு அடங்கியுள்ளது.

சோவியத் ஒன்றியம் சிதறுண்டு போகும்வரை,ஏறக்குறைய நூறு ஆண்டுகளுக்கு காலமாக உலக வல்லரசுகள் (அமெரிக்கா, ரஷ்யா) என்கிற அந்த பாரம்பரியம் நிலை காக்கப்பட்டு வந்திருக்கிறது. ரஷ்யா,அமெரிக்கா என்கிற இந்த இரண்டு பேரில் யார் உலக போலீஸ்காரர் சேவையைச் செய்வது அல்லது யாரால் செய்யமுடியும் என்பதை நிலைநாட்டுவதற்கு இந்த பூமிப்பந்தில் பல பல சம்பவங்கள் நடந்தேறியுள்ளன.

ஏறக்குறைய நூற்று ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ரஷ்யாவில் ஜார் மன்னர் வம்சத்தினர் ஆட்சி செய்தார்கள். ரஷ்யாவில் மக்கள் இருப்பதை மறந்து விட்டு ஆடம்பரம், அதிகாரம், உல்லாசம் என்று தான்தோன்றித்தனமாக நாட்டை ஆண்டு வந்தனர் ஜார் மன்னர் வம்சத்தினர். இதனால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளானார்கள். தின்னும் ரொட்டிக்குக் கூட நீண்ட வரிசையில் நின்று காத்துக் கிடந்தார்கள். அதுவும் பல நேரங்களில் கிடைக்காமலே போகும்.  நாட்டை காப்பாற்றும் ராணுவத்தினருக்கும் இதே பிரச்சனைதான். அவர்களுக்கும் ரொட்டியும் இல்லை, சம்பளம் இல்லை. நாட்டை காப்பாற்றும் ராணுவத்திற்கே இந்த கதி என்றால் மற்றவர்களுக்கு ஏற்பட்ட கேடு பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. 

இந்நிலையில்தான், 1917ம் ஆண்டு ரஷ்யாவில் புரட்சி வெடித்தது. ரஷ்ய புரட்சி என்றும் சோவியத் புரட்சி என்றும் சொல்லப்படுபவை மொத்தம் 3 புரட்சிகள் எனக் கூற வேண்டும். முதல் புரட்சி 1905 ஆண்டு தொடங்கியது. ஆனால் அது மிகப் பெரிய தோல்வியை சந்தித்தது. 2வது புரட்சி 1917ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மென்ஸ்விக்குகள் என சொல்லப்படும் ஒரு பிரிவினரால் நடத்தப்பட்டு ஆட்சியும் கைப்பற்றப்பட்டது. ஆனால் அது ஆறு மாதங்களில் முடிவுக்கு வந்தது.

இறுதியாக இன்று நாம் சோவியத் புரட்சி என்று சொல்லக் கூடிய 1917ம் ஆண்டு நவம்பர் மாதம் புரட்சியாளர் லெனின் தலைமையில் போல்ஷ்விக்குகளால் நடத்தப்பட்டதேயாகும். போல்ஷ்விக்குகள் என்பது பெரும்பான்மையினர் என்ற பொருள் குறிக்கும் சொல். ஜார் வம்சத்தைச் சேர்ந்த 2-ஆம் நிக்கோலஸ் மன்னர் ஆட்சிக்கு எதிராக மக்கள் எழத் தொடங்கி இருந்தனர். ஆனால் அது முழுமை பெறுவதற்கு ஏறத்தாழ 20 ஆண்டுகள் ஆகின. 

முதல் உலகப் போர் தொடங்கும் வேளையில் 2-ஆம் நிக்கோலஸ் அப்போரில் தன்னையும் இணைத்துக் கொண்டதால் ரஷ்யாவில்  ஒரு பெரிய பொருளாதார இழப்புக்கு காரணமாக இருந்தார். 1914ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் உலகப் போர் தொடங்கியது. 1916-ஆம் ஆண்டு இறுதியில் ஏறத்தாழ 18 லட்சம் ரஷ்ய வீரர்கள் இந்தப் போரில் இறந்து போய்விட்டார்கள். 20 லட்சம் வீரர்கள் எதிரிப் படையால் கைது செய்யப்பட்டிருந்தார்கள். இதன் விளைவாக இராணுவத்திற்கு மன்னர் நிக்கோலசே தலைமை ஏற்று போருக்கு சென்றார். அது பெரிய வெற்றி எதனையும் ஈட்டித் தரவில்லை. மாறாக, தேசம் சமூக,பொருளாதார குழப்பங்களுக்கு ஆளாவதற்கே வழி வகுத்தது. நிக்கோலஸின் மனைவி பெயருக்கே அரசியாக இருந்தார். சாமியார் ரஸ்புடினின் ஆட்சிதான் அப்போது நடைபெற்றது. ரஸ்புடினுக்கும் மிகக் கடுமையான எதிர்ப்பு ரஷ்யாவில் இருந்தது. அதன்விளைவாக 1917ம் ஆண்டு, ஜனவரியில் ரஸ்புடின் சாமியார் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இப்படி பல்வேறு குழப்பங்களுக்கு உள்ளான தேசம், லெனினின் புரட்சி போராட்டத்திற்கு பின்னர்தான் ஒரு நிலைக்கு வந்து சேர்ந்தது. ஆட்சியை கைப்பற்றிய லெனின் முதல் உலகப் போரில் இருந்து ரஷ்யாவை உடனடியாக விடுவித்துக் கொண்டார். முதல் உலகப் போர் ஏகாதிபத்தியங்களுக்கிடையிலான போர். நாங்கள் எங்கள் தேசத்தின் வளர்ச்சியில் கவனம் செலுத்தப் போகிறோம் என்றார் லெனின். அதற்கு பிறகு ரஷ்யா என்பது சோவியத் ஒன்றியம் என்று பெயர் மாற்றம் பெற்றது. அந்த ஒன்றியம் 75 ஆண்டுகள் நிலைத்து நின்றது.

விலாடிமிர் லெனின் கொண்டு வந்த மக்கள் புரட்சியை அக்டோபர் புரட்சி என்று அழைக்கிறார்கள். அவருடைய சீர்திருத்தக் கொள்கைகள் வழிவகுத்துக் கொடுத்தது காரல் மார்க்சின் தத்துவங்கள். அதை தன் நாட்டிற்கு ஏற்றதுபோல் மாற்றி சோசலிச ரஷ்யாவில் லெனின் உருவாகினர். கம்யூனிஸ்ட் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு யு.எஸ்.எஸ்.ஆர் என்கிற சோஷலிச நாடு தோற்றுவிக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போர் வந்தது, உலக நாடுகளின் குடிமிகளை ஒரு ஆட்டு ஆட்டி வைத்து போனது. ஜப்பானின் நாகாசாகி ஹிரோஷிமாவில் குண்டுகள் போடவில்லை என்றால் போர் தொடர்ந்து கொண்டேயிருந்திருக்கும். உலக வரலாறும் திருத்தப்பட வேண்டி வந்திருக்கும். அந்நேரத்தில் சோவியத் ரஷ்யா பக்கத்தில் இருந்த சின்னஞ்சிறு குட்டி நாடுகளை ஆசைகாட்டியும், அடங்க மறுத்த நாடுகளை வன்முறையாகயும்  வளைத்து போட்டுக்கொண்டது.

பல குட்டி தேசங்களை வளைத்துப்போட்ட பின், சோவியத் ரஷ்யா உலகின் மிகப்பெரிய நாடாக மாறிப்போனது. அப்போது அதன் நிலப்பரப்பு ஐரோப்பாவிலிருந்து ஆசிய வரை இரண்டு கண்டங்களிலும் பரந்து விரிந்து கிடந்தது. அதன் பரப்பளவு 6,592 ,800 சதுர மைல்கள், 17, 075, 400 சதுர கிலோ மீட்டர். அதாவது மலேசியாவில் போல் 51 மடங்கு பெரியது. இந்தியாவைவிட ஐந்துமடங்கு பெரியது.

1917 பின்னர் சோவியத் யூனியனில் ஒட்டுமொத்த கம்யூனிஸ்ட் ஆட்சி. நாட்டுக்குள் என்ன நடக்கிறது என்கிற விஷயம் வெளியே யாருக்கும் தெரியாது. மறைப்புச் சுவரை எழுப்பி ஒரு நாட்டையே மறைத்து வைத்திருந்தார்கள். தற்போது சீனாவைப்போல் அப்போது அதை இரும்புத்திரை நாடு என்று வர்ணித்தார்கள்.

ரஷ்யக் கூட்டமைப்பின் ரஷ்யா, பைலோருஷ்யா,ஆர்மீனியா, அஜர்பைஜான், உஸ்பெக்கிஸ்தான், துர்க்மெனிஸ்தான், கஜகஸ்தான், தஜிக்ஸ்தான், கிர்கிஸ்தான்,ஜார்ஜியா, உக்ரைன், மால்டோவியா, எஸ்டோனியா, லாட்வியா, லிட்வேனியா ஆகிய 15 மாநிலங்கள் இருந்தன. இதில் லாட்வியா, லிட்வேனியா, எஸ்டோனியா ஆகிய மூன்று மாநிலங்களும் பால்டிக் நாடுகள். பால்டிக் கடலுக்கு பக்கத்தில் இருந்தால் அவற்றை பால்டிக் நாடுகள் என்று அழைத்தார்கள். இதை ரஷ்ய சர்வாதிகாரி ஸ்டாலின் காலத்தில் ரஷ்யாவுடன் இணைந்தவை.

லெனினுக்கு பிறகு 1924இல் ஆட்சிக்கு வந்த ஸ்டாலின், கிராமிய நாடாக இருந்த ரஷ்யாவை கைத்தொழில் மயமாக்க நாடாக மாற்றிய பெருமை இவரையே சாரும். இருந்தாலும் இவருடைய அடக்குமுறையினால் பலப்பல லட்சம் பேர் மறைந்து போனார்கள். சைபீரிய வதை முகாம்களில் பல லட்சம் அரசியல் கைதிகள் மண்ணோடு மண்ணாகி போனார்கள், இன்னும் பல்லாயிரம் பேர் நாடு கடத்தப்பட்டனர். ஸ்டாலினுக்குப் பிறகு குருஷேவ் ஆட்சிக்கு வந்தார். இவர் ஒரு மிதவாதி, நாட்டில் பல பல மாற்றங்களை செய்தார். தொழிலாளர் வதை முகாம்களை ஒழித்துக் கட்டினார். சிறைக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். அவர்களுக்கு பல நூறு புனர்வாழ்வு மையங்கள் அமைத்து கொடுத்தார்.

இவருடைய காலத்தில்தான் ரஷ்யா முதன்முதலாக மனிதனை (யூரி ககாரின்)  விண்வெளிக்கு அனுப்பி வைத்து சாதனை செய்தது. இவரது ஆட்சியின்போது கியூபாவில் ரஷ்யா ஏவுகணைகள் வைக்கப்பட்டதால் அமெரிக்க அதிபர் கென்னடிக்கும் இவருக்கும் முட்டல் ஏற்பட்டது. இதைமையமாக வைத்து 1962 -இல் மூன்றாம் உலகப்போர் வரக்கூடிய சூழல் ஏற்பட்டது.

குருஷேவ்க்கு பின் பிரஷ்னீவ் ஆட்சிக்கு வந்தார். இவருடைய காலத்தில்தான் ரஷ்யப் படைகள் ஆப்கானிஸ்தானில் நுழைந்து  இயற்கை வளங்கள் சுரண்டப்பட்டது. இவர் அரசியலில் பெரிய மாற்றங்களை எதையும் செய்துவிடவில்லை.

இவருக்குப்பின் 1984 ஆம் ஆண்டு ரஷ்ய அதிபராக பதவியேற்றுக்கொண்டவர் தான் மிக்கைல் கொர்பச்சேவ். இவர் சோவியத் ஒன்றியத்தின் 8-ஆவது, கடைசி அரசுத்தலைவர். 1985 முதல் 1991 வரை சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளராகப் பதவியில் இருந்தார். 1988 முதல் 1991 வரை அரசுத் தலைவராகவும், 1988 முதல் 1989 வரை சுப்ரீம் சோவியத் தலைமைப் பீடத்தின் தலைவராகவும், 1989 முதல் 1990 வரை சுப்ரீம் சோவியத்தின் தலைவராகவும் பதவியில் இருந்தார். கருத்தியல் ரீதியாக, கொர்பச்சேவ் தொடக்கத்தில் மார்க்சியம்-லெனினிசக் கொள்கையைக் கடைப்பிடித்தாலும், பின்னர் 1990களின் முற்பகுதியில் சமூக சனநாயகத்தை நோக்கிச் சென்றார். இவரது சில சீர்திருத்தக் கொள்கைகள் பனிப்போரை முடிவுக்குக் கொண்டு வந்தன எனப்படுகிறது. இதனால் இவருக்கு 1990இல் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

கொர்பச்சோவ், ரஷ்யாவில் இசுத்தாவ்ரப்போல் பிரிவில் பிரிவல்னோயே என்ற நகரில் ரஷ்ய, உக்ரைனிய ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். ஜோசப் ஸ்டாலினின் ஆட்சியில் வளர்ந்தவர், தனது இளமைப் பருவத்தில் பொதுவுடைமைக் கட்சியில் சேருவதற்கு முன்பு ஒரு கூட்டுப் பண்ணையில் கூட்டு அறுவடை இயந்திரங்களை இயக்கும் பணியில் ஈடுபட்டார். மாஸ்கோ அரசுப் பல்கலைக்கழகத்தில் சட்டம் படிக்கும் போது, 1953 இல் சக மாணவியான ரைசா தைத்தாரென்கோவை மணந்தார். 1955 இல் சட்டப் படிப்பை முடித்து இசுத்தாவ்ரப்போலுக்குச் சென்ற அவர், கொம்சோமால் இளைஞர் அமைப்பில் சேர்ந்து பணியாற்றினார். 1953 இல் ஸ்டாலினின் இறப்பிற்குப் பிறகு, சோவியத் தலைவர் நிக்கித்தா குருசேவின் ஸ்டாலினியத்திற்கு எதிரான சீர்திருத்தங்களுக்குத் தீவிர ஆதரவாளரானார்.1970 இல் இசுத்தாவ்ரப்போல் பிராந்தியக் குழுவின் கட்சியின் முதல் செயலாளராக நியமிக்கப்பட்டார். 1978 இல், கட்சியின் மத்தியக் குழுவின் செயலாளராக நியமிக்கப்பட்டு மாஸ்கோ சென்றார்.1979 இல் கட்சியின் ஆளும் பொலிட்பிரோவில் சேர்ந்தார். சோவியத் தலைவர் லியோனீது பிரெசுனேவ் இறந்த மூன்று ஆண்டுகளுக்குள், யூரி ஆந்திரோப்பொவ், கான்சுடான்டின் செர்னென்கோ ஆகிய தலைவர்களின் சுருக்கமான ஆட்சியைத் தொடர்ந்து, பொலிட்பிரோ 1985 இல் கொர்பச்சேவை கட்சியின் பொதுச் செயலாளராகவும், நடைமுறைப்படியான அரசுத்தலைவராகவும் தேர்ந்தெடுத்தது.

சோவியத் அரசையும் அதன் சோசலிசக் கொள்கைகளையும் பாதுகாப்பதில் உறுதியாக இருந்த போதிலும், குறிப்பாக 1986 செர்னோபில் பேரழிவிற்குப் பிறகு குறிப்பிடத்தக்க சீர்திருத்தம் அவசியம் என்று கோர்பச்சேவ் நம்பினார். சோவியத்-ஆப்கான் போரில் இருந்து விலகி, அணு ஆயுதங்களைக் கட்டுப்படுத்தவும், பனிப்போரை முடிவுக்குக் கொண்டுவரவும் அமெரிக்க அரசுத்தலைவர் ரொனால்ட் ரேகனுடன் உச்சிமாநாட்டில் கலந்து கொண்டார். உள்நாட்டில், கிளாஸ்னோஸ்த் ("திறந்த தன்மை") என்ற அவரது கொள்கையானது கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், ஊடகச் சுதந்திரம் ஆகியவற்றை மேம்படுத்த அனுமதித்தது. அதே நேரத்தில் அவரது பெரெஸ்த்ரோயிக்கா ("மறுசீரமைப்பு") கொள்கை அதிகாரப் பரவலாக்கல் மூலம் பொருளாதார முடிவெடுத்து செயல்திறனை மேம்படுத்த முயன்றது. அவரது சனநாயகமயமாக்கல் நடவடிக்கைகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் காங்கிரசின் உருவாக்கம் ஆகியவை ஒரு கட்சி அரசுக்கு சவாலாக அமைந்தது.

1989-1990-இல் பல்வேறு கிழக்கு ஐரோப்பிய சோவியத் உறுப்பு நாடுகள் மார்க்சிய-லெனினிய ஆட்சியைக் கைவிட்டபோது கொர்பச்சேவ் இராணுவ ரீதியாக தலையிட மறுத்துவிட்டார். உள்நாட்டில், வளர்ந்து வந்த தேசியவாத உணர்வு சோவியத் ஒன்றியத்தை உடைக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. மார்க்சிய-லெனினியக் கடும்போக்குவாதிகள் 1991 ஆகஸ்டு மாதத்தில் கோர்பச்சேவுக்கு எதிராக நடத்திய ஆட்சிக் கவிழ்ப்பு சதி தோல்வியுற்றது. இதைத் தொடர்ந்து, கொர்பச்சேவின் விருப்பத்திற்கு எதிராக சோவியத் ஒன்றியம் கலைந்ததை அடுத்து அவர் தனது பதவியைத் துறந்தார். பதவியை விட்டு வெளியேறிய பிறகு, அவர் தனது கொர்பச்சேவ் அறக்கட்டளையைத் தொடங்கினார். ரஷ்ய அரசுத்தலைவர்கள் போரிஸ் யெல்ட்சின், விளாதிமிர் பூட்டின் ஆகியோரைக் கடுமையாக விமர்சித்தார். ரஷ்யாவின் சமூக-சனநாயக இயக்கத்திற்காக பிரச்சாரம் செய்தார்.

20-ஆம் நூற்றாண்டின் பிற்பாதியில் மிகவும் குறிப்பிடத்தக்க ஆளுமைகளில் ஒருவராகப் பரவலாகக் கருதப்பட்ட கொர்பச்சோவ் தொடர்ந்து சர்ச்சைக்குரியவராகக் காணப்பட்டார். சோவியத் ஒன்றியத்தில் புதிய அரசியல், பொருளாதார சுதந்திரங்களை அறிமுகப்படுத்தியதிலும், கிழக்கு ஐரோப்பா, மத்திய ஆசியாவில் மார்க்சிய-லெனினிய நிர்வாகங்களின் வீழ்ச்சியை சகித்துக்கொள்வதிலும், கிழக்கு, மேற்கு ஜெர்மானிய மீளிணைவிலும் முக்கிய பங்காற்றியதற்காகப் பரவலாகப் பாராட்டப்பட்டார். ஆனால் சோவியத் கலைப்பை விரைவுபடுத்தியதற்காகவும், இந்த நிகழ்வால் ரஷ்யாவின் உலகளாவிய செல்வாக்கில் சரிவைக் கொண்டு வந்து பொருளாதார சரிவைத் தூண்டியமைக்காகவும் ரஷ்யாவிலும், முன்னாள் சோவியத் நாடுகளிலும் இவர் அடிக்கடி விமரிசிக்கப்பட்டு வந்தார். பல சீர்திருத்த நடவடிக்கைகளை கொண்டு வந்து, ஆட்சியில் சில பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. கம்யூனிஸ்ட் ஆட்சி அதிகாரம் பிடியை தளர்த்தியதோடு, உலக அமைதி முயற்சியில் இறங்கினார். இதனால் ரஷ்ய மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். ரஷ்ய அதிபர்களில் மனதில் நிற்கக் கூடிய மாமனிதர் அணு ஆயுதங்களை ஒழிக்க அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்துகொண்டார் அதனால் அவருக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசு கொடுக்கப்பட்டது உலக நாடுகள் இவருடைய புகழ் ஓங்கி நின்றது நல்லபடியாக ஆறு ஆண்டுகளுக்கு ரஷ்யா உலக நடை போட்டது. எதிர்பாராத சூழ்நிலை ரஷ்யாவில் உணவுத்தட்டு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. அதனால் உள் நாட்டில் அவருக்கு எதிர்ப்பு கிளம்பத் தொடங்கின. அமெரிக்காவுடன் பேசிக்கொண்டு ரஷ்யாவை கவனிக்கவில்லை என்கிற ஆத்திரம் ஆதங்கம் வேறு. சோவியத்தின் கடைசி தலைவர் என்றும் அழைக்கப்படும் கொர்பச்சேவ்,  மறைந்த முன்னாள் அதிபர் ஸ்டாலினின் இரும்புத் திரைகளை நீக்கியதாக புகழ் பெற்ற அதே வேளையில், சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சிக்குக் காரணமாக இருந்ததாகவும் விமர்சிக்கப்பட்டார்.

உலக வல்லரசின் தலைவராக இருந்து அமைதிக்கான நோபல் பரிசு வென்றவரின் மரணம் உலக அரசியல் அரங்கிலும், பொதுச்சமூகத்திலும் பெரிய அளவில் விவாதமாக்கப்படாமலும், கவனிக்கப்படாமலும் கடந்து சென்றது கம்யூனிஸ்ட்டுகளின் கோபத்திற்கு நியாயம் கற்பிப்பதுபோல் உள்ளது.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved