🔴 LIVE | முப்பெரும் விழா 2023


TRB தேர்வு முடிவுக்கு எதிரான வழக்கு இன்று விசாரணை?

2020-2021 ஆம் ஆண்டு முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர் நிலை -1 / கணினிப்

பயிற்றுநர் நிலை-1, நேரடி நியமனத்திற்கான அறிவிக்கை (Notification) எண். 01/2021 ஆசிரியர் தேர்வு

வாரியத்தால் 09.09.2021 அன்று வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து 12.02.2022 முதல் 20.02.2022

வரை கணினி வழித்தேர்வுைகள் (Computer Based Examination) நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள்

04.07.2022 அன்று இவ்வாரியத்தால் வெளியிடப்பட்டன.

இதனைத் தொடர்ந்து மொத்தமுள்ள 17 பாடங்களுக்கு 1:2 விகிதத்தில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வானவர்கள் பட்டியலை கடந்த ஞாயிற்றுக்கிழமை (28.08.2022) அன்று வெளியிட்டது. மதிப்பெண் தரவரிசைப்பட்டியல் வெளியிடாமலும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலுக்கான 20 விழுக்காடு இடஒதுக்கீட்டில் மூன்று வகையாக பிரித்து வெளியிட்டபடியாலும் தேர்வு எழுதியவர்களுக்கு பலவித குழப்பங்கள் ஏற்பட்டது. மேலும், போதிய கால அவகாசம் வழங்காமல் அவசர அவசரமாக சான்றிதழ் சரிபார்ப்பை உடனடியாக இன்றுமுதல் தொடங்கியுள்ளது.

17 பாடப்பிரிவுகளில் மொத்தம் எட்டாயிரத்து தொள்ளாயிரத்து இருபத்தி ஒன்பது தேர்வர்கள் சான்றிதழ் சரிபார்ப்பிற்காக தேர்வு செய்யப்பட்டவர்கள். மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் வன்னியருக்கு 10.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இது உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிராக அமைந்துள்ளது. ஏற்கனவே, கடந்த மார்ச் மாதம் வன்னியர் 10.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் 8/2021 -ஐ உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ள நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் முடிவு, உச்சநீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் அமைதுள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் முடிவை எதிர்த்து சமூகநீதி கூட்டமைப்பு சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக உள்ளதால் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் முடிவு மாற்றியமைக்கப்படும் என்று சமூகநீதி கூட்டமைப்பினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved