🔴 LIVE | முப்பெரும் விழா 2023


10 விழுக்காடு இடஒதுக்கீடு வரலாற்று மோசடி! கடும் கண்டனம்!

சமூகநீதிக்கு மீண்டும் ஒரு ஆபத்து!

ஏன் 10% முன்னேறிய வகுப்பு EWS இடஒதுக்கீடு 

வரலாறு சந்திக்காத மாபெரும் மோசடி?.

இப்படி ஒரு இடஒதுக்கீடு வழங்க கிஞ்சித்தும் காரணம் கிடையாது. எந்தக் கணக்கெடுப்பும் கிடையாது. எந்தப் புள்ளிவிபரங்களும் கிடையாது.

இடஒதுக்கீடு வறுமை ஒழிப்புத்திட்டமல்ல. இது வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம். மிகக் குறைந்த பிரதிநிதித்துவம் கொண்ட வகுப்பிற்கு மட்டுமே இடஒதுகீடு வழங்க முடியும். இந்தியாவில் 60% பிற்படுத்தப்பட்டோர் (மண்டல் 52% என்று கணக்கிட்டிருந்தாலும் அவர் மற்ற மதத்தில் 44%ம் மட்டுமே OBC என்று கணக்கிட்டுள்ளார். அது மிகக்குறைவு எனவே ஓபிசி மக்கள் 60% என்பது சரியாக இருக்கும்), 25% SC/ST மக்கள் போக மீதம் இருக்கும் 20%ம் மட்டுமே முன்னேறிய வகுப்பினர். இந்த 20% முன்னேறிய வகுப்பினர் 

1. உயர் அறிவியல் துறையில் 100%

2. அரசு செயலாளர் பதவிகளில் 95%

3. உச்சநீதிமன்றத்தில் 90%

4. மற்ற எல்லா பதவிகளிலும் 60%

 (புள்ளிவிபரங்கள் சராசரி மற்றும் பழைய புள்ளிவிபரங்களிலிருந்து அனுமானிக்கப்பட்டது. தவறாகச் சித்தரிக்கும் நோக்கமல்ல. உண்மையான புள்ளிவிபரம் இதைவிட மிக மோசமான உண்மைகளைச் சொல்லலாம்) 

இப்படி போதுமான அளவிற்கும் அதிகமான பிரதிநிதித்துவத்துடன் இருக்கும் முன்னேறிய வகுப்பிற்கு எப்படி இடஒதுகீடு வழங்க முடியும்?. அதில் ஒருபடி மேலாக, அதில் உள்ள ஏழைகளின் மக்கள் தொகை 4% மட்டுமே அவர்களுக்கு அரசமைப்புச்சட்டத்தில் 10%ம் இடஒதுக்கீடு வழங்குவது என்பது எந்த விதத்தில் ஏற்புடையது?. தமிழகத்தில் 4%ம் முன்னேறிய வகுப்பில் 1%ம் மக்களே ஏழைகள் அவர்களுக்கு எப்படி 10%ம் இடஒதுக்கீடு வழங்க முடியும். 

எனவே இது அரசமைப்புச்சட்டத்தின் மீது தொடுக்கப்பட்டுள்ள மாபெரும் தாக்குதல். வரலாறு காணாத மோசடி. அரசு உடனடியாக 103வது அரசமைப்புச்சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும். வாய்ப்புக்கள் மறுக்கப்பட்டுவரும் வகுப்புக்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். பொதுவெளியில் இருப்பவர்கள் வெறுப்பு விருப்பின்றி நடுநிலையோடு யோசிக்க வேண்டும். அனைவருக்குமான நியாயமான வலுவான சமதர்ம இந்தியாவைக் கட்டி எழுப்ப வேண்டும். 

சமூகநீதிக் கூட்டமைப்பு

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved