🔴 LIVE | முப்பெரும் விழா 2023


இராணியார் வீற்றிருந்த தமுக்கம் மைதானம் - தெலுங்கு சமுதாயங்களின் அடையாளம்! உரிமைகாக்க உண்ணாவிரதப்போராட்டம்

பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மதுரையை ஆட்சி செய்த ராணி மங்கம்மாளின் கோடை கால மாளிகையாக, சுவர்கள் இல்லாமல், தூண்களால் தாங்கப்பட்ட மண்டபம் என்ற பொருள் தரும் 'தமகமு' என்ற தெலுங்கு வார்த்தையில் இருந்த பிறந்த 'தமுக்கம்' இருந்துவந்தது. இந்த மாளிகையின் உப்பரிகையிலிருந்து அரச குடும்பத்தினர் மல்யுத்தம், மிருகங்களுடனான மோதல்களை கண்டுகளித்ததாகவும் சொல்லப்படுவது உண்டு.

கடைசியாக மகாத்மா காந்தி அருங்காட்சியகம் அமைந்திருந்த தமுக்கம், நாயக்கர் வம்சம் வீழ்ந்த பிறகு, கிழக்கிந்திய கம்பெனியின் காலத்திலும், பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலும் இந்த மாளிகையில் பல பிரிட்டிஷ் அதிகாரிகள் வசித்தனர். 1871ல் நேப்பியர் பிரபு மதுரைக்கு வந்தபோது, இந்த மாளிகையை புதுப்பிக்கும் திட்டம் உருவாக்கப்பட்டது. மாவட்ட பொறியாளர், 22 ஆயிரம் ரூபாய் செலவில் இதனைப் புதுப்பித்தார் என்று ஆவணக்குறிப்புகள் உள்ளது.

1882-1886 ஆண்டு காலத்தில் மதுரையின் ஆட்சியராக இருந்த சி.எஸ். க்ரோல் (C.S. Crole) இந்த தமுக்கம் மாளிகையில் குடியேறினார். அவர் அந்த மாளிகையில் வசித்தபோது, 1883ல் தமுக்கத்திற்கு முன்னால் உள்ள 70 ஏக்கர் நிலத்தை வேலியிட்டு 'பீப்புள்ஸ் பார்க்' என்ற பூங்காவை உருவாக்கினார். இந்தப் பூங்காவை உருவாக்க மதுரையில் வசித்த நகரத்தார் சமூகத்தினரும், சில ஜமீன்தார்களும், சில பணக்காரர்களும் நிதியுதவி செய்தனர். அந்தப் பணத்தில் நிலம் வாங்கப்பட்டு, நிலத்தின் பெயர் மதுரை நகராட்சியின் பெயருக்கு மாற்றப்பட்டது.

தற்போது பிரசித்திபெற்ற தமுக்கம் மைதானத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பழைய கட்டுமானங்கள் இடிக்கப்பட்டு புதிய அரங்க கட்டுமானப்பணிகள் நடந்து வருகின்றன. இந்த இடத்திற்கு அரசியார் இராணிமங்கம்மாள் பெயரினைசூட்ட வேண்டுமென்று நாயுடு-நாயக்கர் உள்ளிட்ட தெலுங்கு மொழி பேசும் மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். இதுகுறித்து அகில இந்திய தெலுங்கு சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் நாயக்கர் ஆர்.நந்தகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

மதுரை தமுக்கம் திடலில் கட்டப்பட்டுள்ள மாநாட்டு மையத்திற்கு *ராணி மங்கம்மாள் மாநாட்டு மையம்*  என்றும், அவரின் அரண்மனைக்கு *ராணி மங்கம்மாள் அரண்மனை வளாகம்* என்றும் பெயர் சூட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தி, வருகின்ற சனிக்கிழமை 15.10.22 அன்று காலை 10.00 மணிக்கு, மதுரை பழங்காநத்தத்தில் அனைத்து நாயுடு- நாயக்கர் அமைப்புகள் மற்றும் தெலுங்கு சங்கங்களின் கூட்டமைப்புகள் சார்பில், தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், மாபெரும் அறவழி உண்ணாவிரத போராட்டம் நடைபெறவுள்ளது.

சுருதி G ரமேஷ் தலைமையில் நடைபெறும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில், அகில இந்திய தெலுங்கு சம்மேளனத்தின் நிறுவன தலைவர் பேராசிரியர் சி.எம்.கே ரெட்டி தலைமை விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கவுள்ளார். எனவே நாயக்க மன்னர்களின் அடையாளங்களை பாதுகாப்பதில், அவர்கள் வம்சாவளியில் வந்த ஒவ்வொரு தெலுங்கு சமுதாய மக்களின் கடமை என்பதை உணர்ந்து, நமது இராணியாரின் புகழை நிலைநாட்டிட பெரும் திரளாக உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று அறிக்கையின் வாயிலாக  நாயக்கர் நந்தகோபால் கேட்டுக் கொண்டுள்ளார். 

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved