🔴 LIVE | முப்பெரும் விழா 2023


இராஜகம்பள மகாஜன சங்க மு.தலைவர் ஐயா.வையப்பநாயக்கரின் 46-வது குருபூஜை!

இராஜகம்பள மகாஜன சங்கத்தின் முன்னாள் தலைவரும், கர்ம வீரர் காமராஜர் அவர்களின் நெருங்கிய நண்பருமான ஐயா.வையப்ப நாயக்கர் அவர்களின் 46-வது குருபூஜை இன்று அனுசரிக்கப்படுகிறது. 1950 களில் இராஜகம்பள மகாஜன சங்கம் பதிவு செய்யப்பட்டதில் இருந்து, தனது இறுதிக்காலம் வரை மகாஜன சங்கத்தில் தலைவராக இருந்து சமுதாயத்திற்காக அரும்பங்காற்றியவர் ஐயா.வையப்ப நாயக்கர். 


இராமநாதபுரம் முடிமன்னார்கோட்டையில் பிறந்த ஐயா. வையப்ப நாயக்கர் அவர்கள் மறைந்த தமிழக முதல்வர் காமராஜரிடம் தனக்கிருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி தொட்டிய நாயக்கர் சமுதாயத்தை MBC பட்டியலில் இணைத்தார். அப்போது எம்பிசி வகுப்பினருக்கு தனி இடஒதுக்கீடு இல்லையென்றாலும், பின்னாளில் 1989-இல் கலைஞர் மு.கருணாநிதி தலைமையிலான திமுக அரசு புதிய சாதித்தொகுப்பை உருவாக்கி எம்பிசி வகுப்பினருக்கு 20% இடஒதுக்கீடு வழங்கினார். வையப்ப நாயக்கர் அவர்களால் 50-களின் மத்தியில் போடப்பட்ட விதை 30-35 ஆண்டுகள் கழித்து பலன் கொடுக்கத் தொடங்கியது. 



ஆம், தொட்டிய நாயக்கர் சமுதாயம் சார்பாக இடஒதுக்கீடு கேட்டு கோரிக்கையோ, போராட்டமோ இல்லாமல் இடஒதுக்கீடு பெறுவதற்கு ஏற்கனவே ஐயா.வையப்ப நாயக்கரால் பெறப்பட்ட  எம்பிசி என்பதை மறுக்கமுடியாது. தமிழகம் முழுவதுமுள்ள எண்ணற்ற பெரியோர்களை மகாஜன சங்கத்தில் இணைத்து மாநிலம் முழுவதும் சுற்றிவந்த சமுதாயக் கட்டமைப்பை உருவாகியதில் இவரின் பங்கு மகத்தானது. அன்னாரின் நினைவு நாளில் அவரது தியாகத்தை போற்றி வணங்குவோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved