🔴 LIVE | முப்பெரும் விழா 2023


தலைகுளிக்க பயன்படுத்தும் ஷாம்பூவால் கேன்சர் ஆபத்தா? வெளியான அதிர்ச்சிதகவல்...

நுகர்வோர்கள் பயன்படுத்தும் சோப்பு, ஷாம்பூ உள்ளிட்ட அழகு சாதனப்பொருட்களை உற்பத்தி செய்து சந்தைப்படுத்துவதில் புகழ்பெற்ற நிறுவனம் லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் யுனிலீவர்.

இந்நிறுவன தயாரிப்பில்  Axe/Lynx, Dove, Omo/Persil, Heartbrand (Wall's) ice creams, Hellmann's, Knorr, Lipton, Lux என்ற பிராண்ட் பெயரில் வரும் பல வகையான நுகர்பொருட்கள் பிரபலமானவை.

அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு சமீபத்தில் வெளியிட்ட தகவலின்படி, யுனிலீவர் தயாரிப்பில் வெளிவரும் "டவ்" என்ற பெயரில் வெளிவரும் டிரை ஷாம்பூக்களில் "பென்சீன்" என்ற வேதிப்பொருள் பயன்படுத்துவதால் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தது, உலக அளவில் நுகர்வோர் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.  

இதனையடுத்து 2021 அக்டோபருக்கு முன் தயாரித்த டிரை ஷாம்பூக்களை அமெரிக்கா,கனடா நாட்டு சந்தையிலிருந்து தன்னிச்சையாக திரும்பப் பெருவதாக யுனிலீவர் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் இந்தியாவில் டிரை வகை ஷாம்புக்களை தயாரிக்கவோ, விற்பனை செய்யவோ இல்லை என்பதால், இந்தியாவில் எந்தவித பாதிப்பும் இல்லை என்று ஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

டிரை என்பது ஒருவகை ஹைபிரிட் ஷாம்பூ ஆகும். தண்ணீர் இன்றி தலைமுடியிலுள்ள எண்ணெய் பசையை நீக்க பயன்படுத்தப்படும் இந்த வகை ஷாம்பூக்கள், அரிசி அல்லது சோளம் ஸ்டார்ச்சிலிருந்து தயாரிக்கப்பட்டு, பவுடர் வடிவில் கேன்களில் அடைத்து விற்பனை செய்யப்படுகிறது.

உண்மையில் இவ்வகை ஷாம்பூகள் தலைமுடியை சுத்தம் செய்யாது எனவும், எண்ணெய் பசையை  உறிஞ்சிக்கொள்ளும், இதனால் தலைமுடி சுத்தமாக தோன்றும், இதை அதிகம் பயன்படுத்துவது உடல்நலனுக்கு உகந்ததல்ல என்று மருத்துவர்கள் தெரிவிகின்றனர்.

இதேபோன்று பல்வேறு காரணங்களுக்காக இந்தியாவில் இருந்தும் பல பொருள்கள் திரும்ப பெறப்பட்டுள்ளன. அவற்றில் சில இதோ...

ஆகஸ்ட் 4, 2010 அன்று ஜான்சன் & ஜான்சன் அதன் தவறான இடுப்பின் உள்வைக்கும் செயற்கை கருவியை திரும்ப பெற்றது. அதாவது, விபத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இடுப்பு பகுதிகளில் வைக்கப்படும் உலோகத்தினால. இருப்பினும், அவை இந்தியாவில் எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் இறக்குமதி செய்யப்பட்டு நோயாளிகளிடையே பரவலாகப் பயன்படுத்தப்பட்டன. அவை பொருத்தப்பட்ட நோயாளிகள் கடுமையான விளைவுகளைச் சந்தித்து நிலைமையை மோசமாக்கியபோது இந்த சர்ச்சை வெடித்தது.

நெஸ்லே இந்தியா தனது பிரபலமான நூடுல்ஸ் தயாரிப்பான ‘மேகி’யை இந்திய சந்தையில் இருந்து திரும்பப் பெற்றது மேகி பிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நடவடிக்கை 2015இல் மேகி சர்ச்சை வெடித்தது. பல மாதங்களாக மேகி தடையை எதிர்த்து சட்டப்பூர்வ மனுக்களுடன் தொடர்ந்தது. இறுதியாக, குற்றச்சாட்டுகளுக்கு எதிரான முழுமையான விசாரணைகள் மற்றும் தயாரிப்பில் அதிகப்படியான LEAD இல்லை என்று கண்டறியப்பட்ட பின்னர் தடை ரத்து செய்யப்பட்டது.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved