🔴 LIVE | முப்பெரும் விழா 2023


எலான் மஸ்க் கைகளில் டிவிட்டர்! அடுத்தடுத்த அதிரடிகளால் ஊழியர்கள் பீதி!

டிவிட்டர் நிறுவனத்தை உலகின் நம்பர் ஒன் பணக்காரர் எலான் மஸ்க் வாங்கினார். டிவிட்டர் நிறுவனம் சில மாதங்களுக்கு முன்பு எலான் மஸ்க் மீது தொடுத்த வழக்கின் விசாரணையில் எலான் மஸ்க் மனம் மாறி ஏப்ரல் மாதம் வாக்குறுதி அளித்தது போல் டிவிட்டர்-ஐ கைப்பற்ற விரும்புவதாக அறிவித்தார். இதைத் தொரட்ரந்து நீதிமன்றம் அக்டோபர் 28 கைப்பற்ற வேண்டும் வேண்டும் என உத்தரவிட்டிருந்த நிலையில், டிவிட்டர் நிறுவனத்தைக் கைப்பற்ற போதுமான பணத்தைத் தயாராக வைத்திருந்த நிலையில் 27 ஆம் தேதியை எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளை வாங்கினார் மொத்தமாக டிவிட்டரை கைப்பற்றினார். 

அந்நிறுவனத்தை விலைக்கு வாங்கிய உடனே தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த பராக் அகர்வால் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை எலான் மஸ்க் அதிரடியாக நீக்கினார். இந்தநிலையில் டுவிட்டர் நிர்வாகத்தில் எலான் மஸ்க் அடுத்த அதிரடியில் இறங்கியுள்ளார். அவர் ஊழியர்களை குறைக்க முடிவு செய்துள்ளார். வேலையில் இருந்து நீக்கம் செய்யப்பட வேண்டிய பணியாளர்கள் பட்டியலை அளிக்க மேலதிகாரிகளுக்கு எலான் மஸ்க் உத்தரவிட்டு உள்ளதாக நியூயார்க் டைம்ஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

டிவிட்டரை கைப்பற்றிய கையோடு முதல் வேலையாக அதன் சிஇஓ-வாக பணியாற்றிவந்த பராக் அகர்வால்-ஐ பணிநீக்கம் செய்தார். பதவிநீக்கம் செய்யப்பட்ட பராக் அகர்வால் ஐஐடி பாம்பே கல்லூரியில் பிடெக் கம்பியூட்டர் சையின்ஸ் இன்ஜினியரிங்-கும், அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் கம்பியூட்டர் சையின்ஸ் பிரிவில் Ph.D., பட்டம் பெற்றவர். டிவிட்டர் நிறுவனத்தின் சிஇஓ-வாக இவரை அறிவிக்கும் வரையில் இவருடைய பெயர் வெளியுலகிற்கு தெரியாது. 

2011 ஆம் ஆண்டு வெறும் 1000 ஊழியர்கள் மட்டுமே இருந்த போது டிவிட்டர் நிறுவனத்தில் சேர்ந்தவர், 2017ல் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக உயர்ந்தார். டிவிட்டர் நிறுவனத்தின் சிஇஓ வாகப் பராக் அகர்வால் நவம்பர் 2021ல் அறிவிக்கப்பட்டபோது, டிவிட்டரின் முதல் இந்திய சிஇஓ, அமெரிக்க நிறுவனத்தில் இளம் வயதில் சிஇஓ பதவிக்கு உயர்ந்தவர் எனப் பல பெருமைக்குச் சொந்தக்காரரானார். எலான் மஸ்க் இந்த நிலையில் ஏப்ரல் மாதம் எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தின் 9 சதவீத பங்குகளை 3 பில்லியன் டாலருக்கு வாங்கியுள்ள செய்தி பங்குச்சந்தை அறிக்கை மூலம் வெளிச்சத்திற்கு வந்தது. இதைத் தொடர்ந்து டிவிட்டர் நிர்வாகக் குழுவில் சேர எலான் மஸ்க் விரும்பி, பராக் அகர்வால் உட்படப் பல நிர்வாக அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தார்.

இப் பேச்சுவார்த்தையின் போது டிவிட்டர் வளர்ச்சி, தொழில்நுட்பம் போன்ற பல முக்கியமான விஷயத்தை எலான் மஸ்க் மற்றும் பராக் அகர்வால் விவாதித்து வந்தநிலையில், இருவருக்கும் இடையே நெருங்கிய நட்பு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் டிவிட்டரில் எலான் மஸ்க் ஆதிக்கம் அடைய கூடாது என முடிவு செய்த பராக் அகர்வால், எலான் மஸ்க்-கிற்கு நிர்வாகக் குழுவில் இடம் கொடுத்ததாலும், 14.9 சதவீத பங்குகளுக்கு மேல் வாங்கக் கூடாது என டிவிட்டர் நிறுவனம் நிபந்தனை விதித்ததாக தெரிகிறது. இதனால் எரிச்சலடைந்த  எலான் மஸ்க், டிவிட்டரில் இருக்கும் பல ஓட்டைகளைக் கண்டுபிடிக்கத்து வெளியே பேசத்துவங்கினார். 

எலான் மஸ்க்-கின் அதிரடி நடவடிகைகளால் இருவருக்குமிடையே மத்தியில் மோதலை ஏற்படுத்திய நிலையில், எலான் மஸ்க்-ன் Is Twitter dying? டிவீட் செய்து பிரச்சனை வெளியுலகத்திற்குக் கொண்டு வந்ததின் மூலம் பராக் அகர்வால் - எலான் மஸ்க் மத்தியிலான நட்புறவு முடிவுக்கு வந்தது. இதைத் தொடர்ந்து ஏப்ரல் 11, 2022ல் டிவிட்டர் நிர்வாகக் குழுவில் சேர எலான் மஸ்க் மறுப்பு தெரிவித்தார். அடுத்த சில நாட்களிலேயே எலான் மஸ்க் மொத்த டிவிட்டர் நிறுவனத்தையும், அதன் சந்தை விலையைக் காட்டிலும் அதிகப்படியான விலையான 44 பில்லியன் டாலருக்கு வாங்கும் திட்டத்தை அறிவித்தார். எலான் மஸ்க்-கின் இந்த முடிவைத் தடுக்கும் வகையில் பராக் அகர்வால் தலைமையில் டிவிட்டர் முதலீட்டாளர்கள் பேசி எலான் மஸ்க் வருவதைத் தடுக்க "poison pill" திட்டத்தை ரகசியமாக கொண்டு வந்ததார் பராக். 

இதற்கு எதிர்வினையாக, டிவிட்டர் பயன்பாட்டில் ஏகப்பட்ட போலி கணக்குகள் இருப்பதாகக்கூறி அடுத்த குண்டை வீசினார் எலான் மஸ்க். இதற்கிடையே டிவிட்டர் நிறுவனத்தின் இரகசிய தரவுகள் கசிவதாகக்கூறி பல உயர் அதிகாரிகளை களை எடுத்தார் பராக் அகர்வால். இப்படியாக எலான்- பராக் அகர்வால் மத்தியில் ஒரு நீண்ட நிழல் யுத்தம் நடந்தது வந்துள்ளது. 

டிவிட்டரின் முழுகட்டுப்பாடும் எலான் மஸ்க்-யிடம் சென்றுவிடாமல் தடுக்க கடைசிவரை பல முயற்சிகளை செய்த பராக் அகர்வால் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிவடைந்த நிலையில், டிட்டரை கைப்பற்றிய எலான் மஸ்க் முதலில் செய்த வேலை பராக் அகர்வால் மற்றும் அவருக்கு ஆதரவாக இருந்த மூத்த அதிகாரிகளைப் பணிநீக்கம் செய்தது தான்.

இதைத்தொடர்ந்து, வருகிற 1-ஆம் தேதிக்குள் டிவிட்டர் பணியாளர்களின் எண்ணிக்கையை 75 சதவீத அளவுக்கு குறைக்கப்போவதாகவும், டுவிட்டரில் தற்போது 7500 ஊழியர்கள் பணியாற்றி வரும்நிலையில், அந்த எண்ணிக்கையை 2 ஆயிரமாக குறைக்க முடிவு செய்துள்ளதாகவும், வேலையில் இருந்து நீக்கம் செய்யப்பட வேண்டிய பணியாளர்கள் பட்டியலை அளிக்க மேலதிகாரிகளுக்கு எலான் மஸ்க் உத்தரவிட்டு உள்ளதாக அமெரிக்காவின் முன்னனி ஊடகமான நியூயார்க் டைம்ஸ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அதேவேளையில், மூன்று ஆண்டுகளில் டுவிட்டரின் வருவாயை இரட்டிப்பாக்க முயற்சி எடுக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved