🔴 LIVE | முப்பெரும் விழா 2023


மதபோதகரை மொழிபோதகர் ஆக்கிய செந்தமிழ்!

கான்ஸ்டன்டைன் ஜோசப் பெச்சி-யைக் கவர்ந்த எளிய மக்களின் பேச்சுமொழி குறித்து ஆய்வு செய்தது தமிழ் மொழியைத்தான். தமிழின் உச்சரிப்பு அழகை கண்ட இவர் தமிழை கற்றுக்கொள்வதோடு, தமிழில் அன்று இருந்த இலக்கியம், இலக்கணம், அகராதி போன்றவைகளையும் கற்றுக்கொள்கிறார். இதன் பின்னர் தனக்கு ஆங்கிலப்பெயர் வேண்டாம் என்று தைரியநாதசாமி என்று மாற்றிக்கொண்டார். 

இவர் தமிழ் எழுத்தின் சிறப்பை மற்ற நாட்டவர்கள் உணர திருக்குறள், நன்னூல், ஆத்திசூடி போன்ற நூல்களை பிற ஐரோப்பிய மொழியில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டார். தமது நாட்டவர்களான இத்தாலி மக்கள் தமிழை பற்றி அறிந்துகொள்ள வேண்டும் என்று  தமிழ் - லத்தீன் அகராதியை முதன் முதலில்  உருவாக்கினார்.அதில் 1000 தமிழ்ச் சொற்களுக்கு லத்தீன் விளக்கம் அளிக்கப்பட்டது. இதுவே முதல் தமிழ் அகரமுதலி என்றும் வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்பு 4400 சொற்களைக் கொண்ட தமிழ்-போத்துக்கீய அகராதியை உருவாக்கினார். அதன் பிறகு தொண்ணூல் விளக்கம் என்ற நூலை வெளியிட்டார். அதில், எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம், யாப்பதிகாரம், அணியதிகாரம் என்று 5 வகை படுத்தி வழங்கியது இவரது சாதனை. மேலும், புராண தமிழ் இலக்கிய இலக்கணங்கள் எல்லாமும் கவிதை வடிவில் இருந்து வந்தது. இதற்கு காரணம் அன்றைய காலத்தில் அறிவு புலமை மக்களுக்கு அதிகம். ஆகவே கவிதையை புரிந்துகொள்ளும் மக்கள் வாழ்ந்தார்கள். இன்றைய காலத்தில் திருக்குறளுக்கு விளக்கம் இருந்தால் தான் படிக்க முடியும் என்ற நிலையை உணர்ந்த இவர் அவற்றை மக்கள் இலகுவாக படிப்பதற்கு தமிழ் இலக்கியங்களை  உரைநடையாக மாற்றினார். 

இதெல்லாம் விட இவர் செய்த மிகப்பெரிய விஷயம் என்ன தெரியுமா?

அக்காலத்தில் சுவடிகளில் மெய்யெழுத்துகளுக்கு புள்ளி வைக்காமலே எழுதுவது வழக்கம்.

புள்ளிக்குப் ஈடாக நீண்ட கோடிருக்கும். மேலும் குறில், நெடில் விளக்க என்று "ர" சேர்த்தேழுதுவது வழக்கம்.

உதாரணத்திற்கு "ஆ" என எழுத "அர" என 2 எழுத்துக்கள் எழுதுவார்கள் (அ:அர, எ:எர). ஆடு என்று இப்படித்தான் நாம் இன்று எழுதுகிறோம். ஆனால் அக்காலத்தில் ஆடு என்று எழுதுவதற்கு அர..டு என்றுதான் எழுதுவார்கள். இதை மாற்றி ஆடு என்று நெடில் உரையை கொடுத்தவர் இவர் தான். அதனால் தான் இன்றும் கூட நமக்கு எழுத்து சுருங்கி வருகிறது, இல்லையென்றால் நெடில் உள்ள வார்த்தைக்கு இரண்டு தனி தனி வார்த்தைகளை நாம் எழுதவேண்டும்.

தமிழுக்காக தொண்டாற்றிய தைரியநாதசாமி சமஸ்கிருதப்பெயராக இருப்பதால் வீரமாமுனிவர் என்று மாற்றிக்கொண்டார்.

1822-இல், முதன் முதலாக இவருடைய சரித்திரத்தைத் தமிழில் எழுதி வெளியிட்ட வித்துவான் முத்துசாமி பிள்ளை, இவருடைய நடையுடை பாவனைகளை, அந்நூலில் கீழ்வருமாறு எழுதியிருக்கிறார்.

இந்தத் தேசத்தில் வந்தநாள் முதலாகப் புலால் மாமிசங்களை நிவர்த்தித்து, இரண்டு தமிழ்த் தவசிப் பிள்ளைகளைப் பரிசுத்த அன்னபாகஞ் செய்யச் சொல்லித் தினமொரு பொழுது மாத்திரம் போசனம் பண்ணிக்கொண்டிருப்பார். தமது மடத்திலிருக்கும் பொழுது, கோபிச் சந்தனம் நெற்றியிலிட்டுக் கொண்டு, தலைக்குச் சூரியகாந்திப் பட்டுக் குல்லாவும், அரைக்கு நீர்க்காவிச் சோமனுந் திருநெல்வேலிக் கம்பிச் சோமன் போர்வை முக்காடுமிட்டுக் காலிற் பாதகுறடும் போட்டுக் கொண்டிருப்பார். இவர் வெளியிற் சாரி போகும் போது பூங்காவி அங்கியும் நடுக்கட்டும், வெள்ளைப்பாகையும் , இளங்காவி யுத்தரிய முக்காடும், கையினிற் காவி யுருமாலையும், காதில் முத்துக் கடுக்கனும், கெம்பொட்டுக் கடுக்கனும், விரலிற்றம்பாக்கு மோதிரமும், கையிற் றண்டுக் கோலும், காலிற் சோடுடனும் வந்து, பல்லக்கு மெத்தையின் மேலிட்டிருக்கும் புலித்தோலாசனத்தின் மேலெழுந்தருளியிருந்து, உபய வெண்சாமரை வீசவும், இரண்டு மயிற்றோகைக்கொத் திரட்டவும், தங்கக் கலசம் வைத்த காவிப்பட்டுக் குடைபிடிக்கவுஞ் சாரிபோவார். இவரிறங்கும் இடங்களிலும் புலித்தோலாசனத்தின் மேலுட்காருவார்.

முத்துசாமிப் பிள்ளை வீரமாமுனிவரின் வாழ்க்கை வரலாற்றை 1822-இல் எழுதி, அந்நூலை அவரே ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து 1840-இல் வெளியிட்டார். அவர் 1840-இல் இறந்த பிறகு அவரது தமிழ் வரலாற்றை 1843-இல் அப்பாவுபிள்ளை பதிப்பித்தார். எனவே, வீரமாமுனிவர் வரலாறு பற்றி அச்சான முதல் நூல் இதுவே. ஆனால், இதற்கு முன்னரே சாமிநாத பிள்ளை என்பவர் முனிவரின் வரலாற்றை 1798-இல் எழுதியதாகவும், அது அச்சேறாமல் இருந்ததாகவும் அதைத் தாம் பயன்படுத்தியதாகவும் முத்துசாமிப் பிள்ளையே தம் வரலாற்றில் கூறியுள்ளார்.

வீரமாமுனிவரின் வரலாற்றை எழுதிய முத்துசாமிப் பிள்ளையின் நூலில் முனிவரின் வாழ்க்கைமுறை பற்றிய பல தவறான செய்திகள் அடங்கியிருப்பதை வீரமாமுனிவர் தொண்டும் புலமையும் என்னும் ஆய்வுநூலில் ச. இராசமாணிக்கம் சுட்டிக்காட்டியுள்ளார். முனிவர் பற்றிய தவறான செய்திகள் எழுந்ததற்கு முக்கிய காரணம் தத்துவ போதகர் என்று சிறப்புப்பெயர் பெற்ற இராபர்ட் தெ நோபிலி என்னும் மறைபரப்பாளர் பற்றிய செய்திகளை வீரமாமுனிவருக்கு ஏற்றியுரைத்ததே என்று இராசமாணிக்கம் ஆய்வினடிப்படையில் நிறுவியுள்ளார். தத்துவ போதகர் 1606-இல் மதுரை வந்து ஐம்பது ஆண்டுகளாக உழைத்தபின் 1656 சனவரி 16-ஆம் நாள் மயிலாப்பூரில் உயிர்துறந்தார். அவருக்குத்தான் தத்துவ போதகர் என்ற பெயர் இருந்தது.

வீரமாமுனிவரையும் தத்துவ போதகரையும் பிரித்தறியாமல் எழுந்த குழப்பத்தை இராசமாணிக்கம் பின்வருமாறு விவரிக்கிறார்.

வீரமாமுனிவரே தமிழ் நாட்டில் செல்வாக்கோடு வழங்கி வருவதாலும், தத்துவ போதகர் யார் என்றுகூடப் பொதுமக்கள் அறியாததாலும், தத்துவபோதகர் ஆற்றிய தொண்டு முதலிய எல்லாம் வீரமாமுனிவர் மீது ஏற்றிக் கூறுவதோடு வீரமாமுனிவரையும் தத்துவ போதகர் என்று அழைக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. சைவ உணவையே கையாண்டது, அன்றாட நோன்பு இருந்தது, உயர்ந்த ஆடைகளையே அணிந்தது, பூணூல் போட்டது, கொடியுடைய கோல் ஏந்திச் சென்றது, பல்லக்கில் சென்றது, வடமொழியிலும் தெலுங்கிலும் தமிழில்போல் பாண்டித்தியம் பெற்றது, முதல் முதலாகத் தமிழிலும் தெலுங்கிலும் உரைநடை நூல்கள்.இயற்றியது, இவைபோன்ற பலவற்றைக் கையாண்டவர் தத்துவ போதகர். இவற்றை எல்லாம் வீரமாமுனிவர் செய்ததாக முத்துச்சாமிப் பிள்ளையும் அவரைப் பின்பற்றிய பல ஆசிரியர்களும் கூறுவது உண்மைக்குப் புறம்பானது...கொடியுடைய கோலோ, பூணூலோ வீரமாமுனிவர் மேற்கொள்ளவில்லை. அவற்றை அணிந்தவர் தத்துவ போதகரே. தத்துவ போதகர் வேறு, வீரமாமுனிவர் வேறு. ஆகவே வீரமாமுனிவரைத் தத்துவ போதகர் என்று அழைப்பதோ, தத்துவ போதகர் படத்தை வீரமாமுனிவரின் உருவமாகக் காட்டுவதோ பொருத்தமற்றது.

மறை பரப்பு முயற்சிக்காக முதலில் தமிழைக் கற்றுக்கொண்ட இவர், தமிழில் வியத்தகு புலமை பெற்று இலக்கணம், இலக்கியம், அகராதி படைத்து தமிழுக்குச் செழுமையூட்டினார். தமது பெயரினை தைரியநாதசாமி என்று முதலில் மாற்றிக் கொண்டார். பின்னர், அப்பெயர் வடமொழி என்பதாலும், நன்கு தமிழ் கற்றதாலும், தமது இயற்பெயரின் பொருளைத் தழுவிச் செந்தமிழில் வீரமாமுனிவர் என மாற்றிக் கொண்டார்.

வீரமாமுனிவருக்கு சென்னை கடற்கரையில் அண்ணா சிலை நிறுவிப் போற்றினார். வரலாறு தெரியாதவனால் வரலாறு படைக்க முடியாது!

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved