🔴 LIVE | முப்பெரும் விழா 2023


மாதசம்பளதாரர்களை சுரண்டாதே! வலுக்கும் கோரிக்கை!

பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும் 103-வது அரசியலமைப்பு சட்ட திருத்தம் செல்லும் என்று கடந்த வாரம் உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பின் மூலம் கடந்த 70 ஆண்டுகாலமாக இடஒதுக்கீடு அளவு 50% மேல் போகக்கூடாது என்று உச்சநீதிமன்றம் விதித்து வந்த நிபந்தனையை தானே மீறிக்கொண்டது. முற்பட்ட சாதியினர் குறிப்பாக தங்களுக்கு தாங்களே நீதி வழங்கிக் கொண்டதுபோல், இந்த வரம்பு ஒன்றும் புனிதமானது அல்ல, தேவை ஏற்பட்டால் மாற்றிக்கொள்ளலாம் என்று சொல்லியதை அடுத்து, உடனடியாக ஜார்க்கண்ட் மாநிலம் இடஒதுக்கீடு அளவை 77% உயர்த்திக்கொண்டுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தின் வழியில் பல்வேறு மாநிலங்களிலும் இடஒதுக்கீட்டின் அளவை உயர்த்திக்கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முற்பட்ட வகுப்பினரில் இடஒதுக்கீடு பெற தகுதியான வருமான வரம்பு 8 லட்சம், அதாவது மாதசம்பளம் 67 ஆயிரம் வரை பெருபவர்கள் ஏழைகள் என்று அறிவித்துள்ளது. அதேவேளையில் வருடம் 2.5 லட்சம், அதாவது மாதம் 21-ஆயிரம் ரூபாய் அல்லது அதற்குமேல் சம்பளம் பெருபவர்கள் பணக்காரர்கள் என்று வருமான வரி விதிக்கப்பட்டு வருகிறது. இது இரண்டு விதமான அளவுகோல்களாக இருப்பதாக விமர்சனம் எழுந்துள்ள நிலையில், தற்போது வருமன வரம்பை 8 லட்சமாக உயர்த்தக்கோரி போராட்டத்தை அறிவித்துள்ளது தந்தை பெரியார் திராவிடர் கழகம்.

அரசு சாலை வரி வாங்கிக்கொண்டு சுங்கக்கட்டணமும் வசூலிக்கிறது. தரமான கல்வி, நன்கொடை, மருத்துவம், வீட்டு வாடகை, மின்சாரக்கட்டணம், குடிநீர், போக்குவரத்து போன்ற அடிப்படை தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள ஒரு குடும்பம் ரூபாய் 50 ஆயிரம் வரை செலவு செய்யவேண்டியுள்ளது. ஆனால் அரசு 21 ஆயிரத்திற்கு மேல் சம்பளம் வாங்குபவர்களுக்கு வருமான வரி விதிக்கிறது. அதாவது தங்கள் அடிப்படை தேவைகளையும் நிறைவேற்றிக்கொண்டு, அரசுக்கு வருமான வரியுல் செலுத்த வேண்டியுள்ளது, இப்படி மாத சம்பளதாரர்களிடம் சுரண்டும் அரசு, தனியார் நிறுவனங்களுக்கு கோடிக்கணக்கில் வரி விலக்கும், வங்கிக்கடனை ரத்து செய்தும் அழிச்சாட்டியம் செய்து வருகிறது. 

எனவே அடுத்து வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் வருமான வரி வரம்பை 12 லட்சமாக உயர்த்த வேண்டும் மத்திய அரசுக்கு வேண்டுகோள் வைக்கின்றோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved