🔴 LIVE | முப்பெரும் விழா 2023


புராண புருஷர்களுக்கு ஒப்பான வீரம் செரிந்த ஊமைத்துரை! - 221-வது நினைவுநாள் இன்று!

வீழ்த்த முடியா வீரத்திற்கு இராமன், அபிமன்யு, விசயன் போன்ற புராண புருஷர்களை ஒப்பிடுவதுபோல், கண்ணுக்குத்தெரிந்த வரலாற்றில் தமிழகத்தில் பல வீர பெருமக்கள் இருந்துள்ளனர். அவர்களுள் பாஞ்சாலங்குறிச்சியை ஆண்ட வீரபாண்டிய கட்டபொம்மன் மரபினரும் தமிழக வீரர்களில் சிறப்பு வாய்ந்தவர்கள்.

கட்டபொம்மனின் வீரத்தை கூரிய வாளுக்கு ஒப்பிட்டால் அவரது தம்பி ஊமைத்துரை யின் வீரம் பழுக்க காய்ச்சி உலையிலிட்டு பழுக்க வைத்த கூர்மையான வாளோடு ஒப்பிடலாம். வடக்கே துங்கபத்திரா நதிக்கரையில் பல்லாரி சீமை யில் இருந்து இடம்பெயர்ந்து பாண்டிய நாட்டில் குடிபெயர்ந்த ராஜ கம்பளத்தார் மரபினரில் கட்டபொம்மன் மரபினரும் ஒருவர்.

பாண்டிய மன்னன் ஆதரவில் இங்கு தங்கள் பாட்டன் பாஞ்சாலன் பெயரில் கோட்டை அமைத்து ஆட்சி செய்து வந்தார்கள். பல தலைமுறை ஆட்சி செய்த இவர்களில் திக்குவிசய பாண்டியர்க்கும் ஆறுமுகத்தாயுக்கும் மகனாக பிறந்தவர் வீரபாண்டிய கட்டபொம்மன். இவருக்கு அடுத்து தளவாய் குமாரசாமி மற்றும் துரை சிங்கம் என்று மூன்று மகன்கள் இருந்தனர். இதுதவிர இரு பெண்களும் இவரோடு பிறந்தவர்கள்.

தளவாய் குமாரசாமி ஊமைத்துரை அல்லது சிவத்தையா என்று அழைக்கப்பட்டார். தளவாய் குமாரசாமி கொன்னி (திக்கி பேசும்) பேசும் இயல்புடையவர், யாரிடமும் அதிகம் பேச மாட்டார். அச்சம் என்பதையே அறியாதவர். நல்ல பழக்கவழக்கங்கள் உடையவர். மெலிந்த தேகம் கொண்டவர். சிவந்த மேனியர்.

வெள்ளையர் அவரை DUMP BROTHER ஊமைச் சகோதரர் என்று அழைத்தனர். அவர் கல்வி பயிலவில்லை. தெலுங்கும் தமிழும் மட்டும் தெரியும். விற்போர், வாள் போர், கவண் எறிதலில் சிறப்பு வாய்ந்தவர்.

அவரது பட்டத்து குதிரை யின் பெயர் பாலராமு. அவர் குடிமக்கள் மெச்சும் தளபதி. அவரை சாமி என்றே அழைத்தனர். தென்னாட்டுச் சிங்கம் என்னாட்டும் பேர் படைத்து திக்கு விசயங்கள் செய்து வந்தான். இவரின் வாழ்க்கை துணை சவுந்திர வடிவு.

முதல் சுதந்திர போராட்ட போரில் வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டதும் ஊமைத்துரை யை பாளையங்கோட்டை சிறையில் ஆங்கிலேயர்கள் அடைத்தனர். பின்னர் பாளையங்கோட்டை யில் இருந்து தப்பித்து பாஞ்சாலங்குறிச்சி வந்து மறுபடியும் அழிந்த கோட்டை களை கட்டி ஆங்கிலேயர்களுக்கு எதிராக கலகம் செய்ய மக்களை தயார் செய்தார். ஆங்கிலேயர்களுக்கு எதிராக பல்வேறு தாக்குதல் செய்து வந்தார். சிவகங்கை சின்ன மருது விடம் உதவி கோரினார்.

இவர்களின் புரட்சி யை அடக்க மருது பாண்டியர்கள், ஊமைத்துரை உள்ளிட்ட பலரை ஆங்கிலேயன் கிபி 1801 நவம்பர் 16 அன்று தூக்கிலிடப்பட்டார். ஆங்கிலேயர்களிடமும் கருணையோடு பழகியவர். விருப்பாட்சி கோபால நாயக்கர், மருது பாண்டியர்கள் என பலரோடு ஆங்கிலேய எதிர்ப்பு நிலைப்பாடு அமைய தூண்டுதலாக இருந்தவர்.

ஊமைத்துரை, தமிழ்நாட்டின் வீர பெருமக்களில் முதன்மையானவர்களில் ஒருவர். அவரது நினைவை என்றும் போற்றுவோம்.

நன்றி: இராஜா வேக்கிலிவார்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved