🔴 LIVE | முப்பெரும் விழா 2023


உச்சநீதிமன்ற தீர்ப்பு வரலாறு காணாத அநீதி.

வறுமையில் வாடும் நீதி (Poverty of Justice). சமூகநீதிக் கூட்டமைப்பின் விளக்கம்

 தீர்ப்பு:  அரசியலமைப்புச் சட்டம் என்ன சொல்லியிருந்தாலும்  பாராளுமன்றத்திற்கு  கால மாற்றத்திற்குத்  தகுந்தாற்போல் எப்படிப்பட்ட திருத்தமும் கொண்டுவர அதிகாரமுண்டு.  இடஒதுக்கீடு கிடைக்காத ஏழைகளுக்கு  இடஒதுக்கீடு  வழங்கும் போது SC/ST/OBC மக்களின் வாய்ப்புக்கள் சிறிய அளவிற்கு பாதிக்கப்பட்டாளும் அது சமத்துவ உரிமையை முற்றிலுமாக அழிப்பதல்ல என்று 3 நீதிபதிகளும், 9 நீதிபதிகள் தீர்ப்பைக் கடைப்பிடிக்க வேண்டிய அவசியமில்லை,  அரசியலமைப்புச் சட்டம் உயிரோட்டமுள்ள சட்டம்,  காலத்திற்குத்  தகுந்தாற்போல் விளக்க வேண்டும். எனவே பொருளாதார அடிப்படையில் மட்டும் வகுப்புக்களைப்  பிரிப்பது சரியே என்று 5 நீதிபதிகளும் தீர்ப்பு வழங்கியிருக்கின்றனர்.

 5 நீதிபதிகளும்  ஒரேயொரு  சட்ட  வார்த்தையைக் கூட நீதிப்படி/ சட்டப்படி  விளக்கவில்லை.  அரசமைப்புச் சட்டத்தின் அடிநாதம் “சமவாய்ப்பு” (EQUALITY OF OPPORTUINITY). அனைவருக்கும் ஒரு வாக்கு என்பது போன்ற பல உரிமைகள் அனைவருக்கும்  சமமாக  வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் பதவிகள், கல்வி,  அரசுப்பணிகளில்  குறைவான இடங்களே இருப்பதால் அனைவருக்கும் வாய்ப்பு வழங்க முடியாது. எனவே இங்கே வகுப்பு அடிப்படையில் சமவாய்ப்பு உறுதி செய்யப்படுகின்றது.  இந்த சமவாய்ப்பை நடைமுறைப்படுத்த உருவாக்கப்பட்ட ஒரு கருவியே இடஒதுக்கீடு. எந்த வகுப்பு உரிய வாய்ப்பு  இல்லாமல்  இருக்கின்றதோ அந்த வகுப்பிற்கு மட்டுமே இடஒதுக்கீடு வழங்க முடியும். எனவே இடஒதுக்கீடு வரலாற்றுக் காரணம், புவியியல் காரணம், பொருளாதாரக் காரணம்,  அரசியல் காரணம்  என்று எந்தக் காரணத்திற்காகவும் வழங்கப்படுவதில்லை. சமவாய்ப்பு பெறாத வகுப்பிற்கு மட்டும்தான்  இடஒதுக்கீடு வழங்கமுடியும்.

வகுப்புவாரி சமவாய்ப்பை உறுதிசெய்ய (Inter class equality) எல்லா மக்களையும் இரண்டு வகுப்புக்காளாகப் பிரித்துள்ளனர். போதிய வாய்ப்புக்கள் பெற்ற வகுப்பு (Forward/General Class), போதிய வாய்ப்புக்கள் பெறாத வகுப்பு (Backward Class). இந்த இரண்டு வகுப்பிற்குள் எந்த சமூகமும் வரலாம். போதிய வாய்ப்புப் பெறாத சமூகங்களுக்குள்ளும் (Backward Classes) சமவாய்ப்பை உறுதிசெய்ய (Intra class equality) அட்டவணை வகுப்பு (SC/ST) மற்றும் இதரப் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பு(OBC) என்று இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அட்டவணை வகுப்பையும் தீண்டாமையால் பாதிக்கப்பட்ட எல்லா சமூகங்களையும் அட்டவணை சாதி வகுப்பு என்றும் பழங்குடிகளை(தனித்துவமான பழமையான சமூகக்கட்டமைப்புடன் ஒரு குறிப்பிட்ட வசிப்பிடப் பகுதியைக்கொண்ட சமூகங்கள்) அட்டவணை பழங்குடிகள் என்றும் பிரிக்கப்பட்டுள்ளனர். இதர பிற்படுத்தப்பட்டோரை 22 புள்ளிகள் கொண்ட சமூக, கல்வி மற்றும் பொருளாதார அளவீடுகளில் 11 புள்ளிகள் பெறுகின்ற சமூகங்களை  இதரபிற்படுத்தப்பட்ட  பட்டியலில் சேர்த்துள்ளனர். சாதி அமைப்பிற்குள் வராத சமூகங்களும் சேர்க்கப்பட்டுள்ளது. இதில் சாதி அளவீட்டிற்கு 3 புள்ளிகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இந்த வெளிப்படையான அளவுகோலுக்குள் வரும் சமூகங்கள்  அனைத்தும் சேர்க்கப்படும்.

போதிய வாய்ப்பை உறுதிசெய்ய சமூகங்களைச் சேர்ப்பதும் நீக்குவதும் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்க வேண்டும் என்று 9 நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர். வாய்ப்பில்லாத வகுப்பிற்கு வாய்ப்பு வழங்கவே  இடஒதுக்கீடு. பொருளாதாரம், கருப்பு, சிவப்பு என்ற எந்த அடிப்படையிலும் அதிக வாய்ப்பைப்  பெற்ற வகுப்புக்கு  இடஒதுகீடு  வழங்க முடியாது என்பதை மீறி வறுமை அடிப்படையில் தீர்ப்பு வழங்கியிருப்பது நமது நீதியும் வறுமையில் வாடுவது தெரிகிறது. நீதியின் மாண்பை காக்க இத்தீர்ப்பு உடனடியாக மாற்றப்பட வேண்டும்.

சமூகநீதி கூட்டமைப்பு

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved