🔴 LIVE | முப்பெரும் விழா 2023


சாதிவாரி கணக்கெடுப்பு! நீதிமன்றம் காட்டம்!

இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்ட சாதிகள் இணைந்து உருவாக்கியுள்ள சமூகநீதி கூட்டமைப்பு சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கு விசாரணை நேற்று நீதிபதி மகாதேவன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. 

மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இது மத்திய அரசின் கொள்கை முடிவாக இருப்பதால் நீதிமன்றம் தலையிட முடியாது என்று வாதிட்டார். கடந்த விசாரணையின் போதும் இதே வாதத்தை அரசு வழக்கறிஞர் முன்வைத்தபோது,  மக்கள் நலனுக்காக கொள்கை முடிவை மாற்றிக்கொள்ளலாமே என கருத்து தெரிவித்தனர். 

இந்நிலையில் தற்போதும் அதையே திரும்பத்திரும்ப மத்திய அரசு வழக்கறிஞர் கூறியதால் கோபமடைந்த நீதிபதிகள், 

அரசின் கொள்கை முடிவை கொண்டு வாருங்கள், கொள்கை முடிவு கொள்கை முடிவு என சொல்கிறீர்களே அது என்ன கொஞ்சம் கொண்டு வாங்க எந்த அடிப்படையில் கொள்கை முடிவு எடுத்துள்ளீர்கள்? என காட்டமாக கூறினர்.

சாதிவாதி கணக்கெடுப்பு நடத்த ஒன்றிய அரசு கூறிய அனைத்து காரணங்களும் சட்டப்படி தவறு என்றும் OBC/DNT சாதிவாதி கணக்கெடுப்பு நடத்தியே ஆக வேண்டும் என்றும் ,சீர்மரபினர் நலச்சங்க மூத்த வழக்கறிஞர்கள் குழு அழுத்தமாக தங்கள் வாதங்களை முன் வைத்துள்ளனர்.

தனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் ஒன்றிய அரசுக்கு, சாதிவாதி கணக்கெடுப்பு நடத்த ஒன்றிய அரசு வைத்துள்ள கொள்கை முடிவுகளை கொண்டு வாருங்கள் அதை பார்க்க வேண்டும் என கூறி வழக்கை மூன்று வாரத்திற்கு ஒத்தி வைத்துள்ளார்கள்.

வழக்கு எண்:14200/2020
லிஸ்ட்:1
ஐட்டம்:98

நன்றி

சீர்மரபினர் நலச்சங்கம் மற்றும் சமூகநீதிக் கூட்டமைப்பு
23.11.2022

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved