🔴 LIVE | முப்பெரும் விழா 2023


மாவீரன் கட்டபொம்மனுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்- மாவட்ட ஆட்சியர்

பாஞ்சாலங்குறிச்சி கோட்டையில் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி.


ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் கடைசி வெள்ளிகிழமை அன்று, இந்திய விடுதலைப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் குல தெய்வமான, வீரசக்க தேவி ஆலய விழா பாஞ்சாலங்குறிச்சியில் நடைபெற்றுவருகிறது. அன்றைய தினமே வீரபாண்டிய கட்டபொம்மனுக்கும் அரசு சார்பில் விழா கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால் கொரோனா தாக்கத்தையடுத்து,இந்த ஆண்டு அருள்மிகு வீர சக்கதேவி ஆலய ஆண்டு விழா ரத்து செய்யப்பட்டது.


விழாவின் கடைசி நாளன இன்று, மிக எளிய முறையில், ஒரு சில நிர்வாகிகள் மட்டும் கலந்துகொண்ட, அருள்மிகு வீரசக்கதேவி ஆலய 64வது ஆண்டு விழா, காலை 4 மணிக்கு கணபதி ஹோம பூஜையுடன் ஆரம்பிக்கப்பட்டது. கும்பபூஜையும் அதனைத் தொடர்ந்து அபிஷேக அலங்கார பூஜைகளும் நடைபெற்றன.


அதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக மாவட்ட ஆட்சியாளர் திரு.சந்திப்நந்தூரி அவர்கள் காலை 10 மணி அளவில் கட்டபொம்மன் நினைவு கோட்டைக்கு வருகை தந்தார். மாவட்ட ஆட்சியரை ஆலயக்கமிட்டியினர் வரவேற்றனர். அதன்பிறகு கட்டபொம்மன் சிலைக்கு மாவட்ட ஆட்சியாளர் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்பொழுது வீரபாண்டிய கட்டபொம்மனின் நேரடி வாரிசுதாரர் திரு.வீமராஜா (எ) ஜெகவீர பாண்டிய சுப்பிரமணிய கட்டபொம்முதுரை அவர்களும் உடனிருந்தார்.


விழாவுக்காண பாதுகாப்பு ஏற்பாடுகளை, மணியாச்சி காவல்துறை துணை கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் 500க்கு மேற்பட்டோர் காவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும், பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலயக்குழு தலைவர். மு.முருகபூபதிMJF, செயலாளர். ஆ.செந்தில்குமார், பொருளாளர் ர.சுப்புராஜ் செளந்தர் உள்ளிட்ட நிர்வாகிகள் சிறப்பான முறையில் செய்திருந்தனர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved