🔴 LIVE | முப்பெரும் விழா 2023


மறக்கவில்லை.... மன்னிக்க வேண்டுகிறோம்.

மன்னிக்க வேண்டுகிறோம்....

2023-ஜனவரி'29 இல் வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் நடத்தப்படவிருக்கும் முப்பெரும்விழா-விற்கான நோக்கங்களை ஊராக, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை சந்தித்து  விளக்குவதற்கான பயணம் கடந்த 24.11.2022 அன்று தொடங்கியது.

முதற்கட்டமாக மேற்கு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட பயணம் கரூர் மாவட்டத்தில் தொடங்கி, கோவை, நாமக்கல். ஈரோடு வழியாக திருப்பூரில் நிறைவுபெற்றது. பத்துநாட்கள் நடைபெற்ற இப்பயணத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய ஒருசிலர் தவிர்த்து பெரும்பான்மையான உள்ளாட்சித் தலைவர்களையும், அரசியல் கட்சிகளின் முக்கிய தலைவர்களையும் சந்திக்க முடிந்தது. மாவட்டத்திற்கு இரண்டு நாட்கள் மட்டுமே ஒதுக்க முடிந்த நிலையில் பல தலைவர்களை ஓரே இடத்தில் அழைத்து சந்திக்க முடிந்தது, பயண நேரத்தை குறைக்க உதவியதோடு, சந்திப்பு மனநிறைவை அளிக்கும் வகையிலும் இருந்தது. சில தலைவர்களுக்கு  கூட்டத்தில் பங்கேற்க முடியாமல் போனதும், பயணத்தின் ஊடே சில தலைவர்களை சந்திக்க முடியாமல் போனதற்கும் நேரமின்மை மட்டுமே காரணம். விதிவிலக்காக சந்திப்பிற்குமுன் ஒருசில தலைவர்களை அழைத்து, சங்கத்திலிருந்து வந்திருப்பதாக கூறியபோது ஒதுங்கிக்கொண்டவர்களும், ஒளிந்துகொண்டவர்களும் இருக்கத்தான் செய்தனர் என்றாலும் காரண காரியம் இன்றி எதுவும் நடப்பதில்லை என்பதால், எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது.



ஒட்டுமொத்த பயணமும் நோக்கத்தை கொண்டு செல்வதில் வெற்றியையும், நிறைவையும் தந்தாலும், சங்கத்தின் அடித்தளமாகவும், ஆதரவாகவும் ஆண்டாண்டுகாலமாக இருந்து வரும் சங்கத்தின் பல நன்கொடையாளர்களையும், நலன் விரும்பிகளையும் சந்திக்க முடியாமல் போனது மிகுந்த மனவருத்தத்தையும், மன வேதனையையும் ஏற்படுத்தியது. அவர்கள் பெருந்தனக்காரர்கள், சுயநலமற்றவர்கள், சமுதாய நலனே சங்கத்தையும், அவர்களையும் சங்கிலியால் பிணைத்தது என்ற வகையில், அவர்களின் எண்ணத்தை, விருப்பத்தை, கனவுகளை நிறைவேற்றிடவே இப்பயணம் மேற்கொள்ளப்பட்டது என்பதால், நிலைமையை புரிந்துகொண்டு மகிழ்வார்கள், தொடர்ந்து தங்கள் ஆதரவை தருவார்கள் என்பதில் ஐயமில்லை. இருந்தபோதிலும் சந்திக்க முடியாமல் போனதற்கான எங்கள் வருத்தங்களை தெரிவித்து மன்னிக்க வேண்டுகிறோம்.

பயணத்தில் உறுதுணையாக இருந்த கரூர் தொழிலதிபர் சின்னச்சாமி, ஒன்றிய செயலாளர் கலையரசன், அரவக்குறிச்சி ஆனந்த், நாமக்கல் அறக்கட்டலை தலைவர் மு.பழனிச்சாமி, சரவணன், மனோகர், நாகப்பன், சின்ராஜ், தங்கவேல், கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.டி.மோகன்ராஜ், குணசேகர், இராஜேந்திரன், வெங்கடேஷ்குமார், பாக்கியலட்சுமி, லட்சுமி தேவராஜ், நஞ்சம்மாள், முத்துசாமி நாயக்கர், ராஜசேகர், வரதமணி, மோகங்குமார், ஈரோடு பவுல்ராஜ், தங்கராஜ், மோகன் மற்றும் திருப்பூர் சண்முகம், துரைசாமி, இரத்தினசாமி, நாகேந்திரன் உள்ளிட்டோருக்கும், அன்பும், பாசமும் காட்டி விருந்தோம்பலில் திக்குமுக்காடச்செய்த திருவாளர்கள் திருச்செங்கோடு சரவணன்,புதன்சந்தை பூபதி, நாமக்கல் பழனிச்சாமி, கொக்கராயன்பேட்டை நாகராஜன், மண்ணூர் முத்துச்சாமி, சத்தியமங்கலம் புவுல்ராஜ், பாரப்பாளையம் சண்முகம், கூலிபாளையம் சின்னுச்சாமி உள்ளிட்ட பல்வேறு சமுதாய பிரமுகர்களின் இல்லத்தரசிகளுக்கு நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.

உடன் பயணித்து, உறுதுணையாக இருந்து, உறங்காமல் கண்விழித்து, சந்திப்புகளை உடக்குடன் செய்தியாக்கி, உலகறியசெய்த கோவை மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் சிவக்குமாருக்கு சங்கத்தின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். 

இவண்,
வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved