🔴 LIVE | முப்பெரும் விழா 2023


27-வயதில் தேடிவந்த அரசு வழக்கறிஞர் பதவி! சிகரங்களை தொட வாழ்த்துவோம்!

அரசு வழக்கறிஞராக கங்காதரன் மணிவாசகன் நியமனம்!

தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகம் (State Industries Promotion Corporation Of Tamilnadu-SIPCOT)  என்பது தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் ஒரு பொதுத்துறை நிறுவனமாகும். இந்நிறுவனம் தமிழகத்தில் சிறு, குறு மற்றும் உயர் தர தொழிற்சாலைகளுக்காக தொழிற்பூங்காக்களை உருவாக்கி இந்திய அளவில்  தமிழகம் அதிக தொழிற்சாலைகளைக்கொண்ட முதல் மாநிலமாக உருவாக காரணமாக இருந்துவருகிறது. இதன் மூலம் அதிகப்படியான வரி வருவாயையும், அந்நிய செலவாணியையும் ஈட்டுவதோடு, லட்சக்கணக்கான பொறியியல் மற்றும் கலை, அறிவியல் துறை மாணவர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பினை வழங்கிவதற்கு சிப்காட் நிறுவனம் மூலகாரணமாக இருந்துவருகிறது.


சிப்காட் நிறுவனம் சார்பில் தமிழகத்தில் பர்கூர், இருங்காட்டுக்கோட்டை, புதுக்கோட்டை, செய்யாறு, மானாமதுரை, இராணிப்பேட்டை, கடலூர், நிலக்கோட்டை, சிறுசேரி, கங்கைகொண்டான், ஒரகடம், திருப்பெரும்புதூர் (ஸ்ரீபெரும்புதூர்), கும்மிடிப்பூண்டி, பெருந்துறை, தூத்துக்குடி, ஓசூர் ஆகிய 16 இடங்களில் தொழிற்பூங்காக்கள் உருவாக்கப்பட்டு தொழிற்சாலைகள் இயங்கிவருகின்றன. மேலும்,  தர்மபுரி மற்றும் திருவண்ணாமலை ஆகிய இடங்களில் சிப்காட் தொழில் வளாகங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.


தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டுவரும் இந்நிறுவனம் தமிழகத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வருகிறது. தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களின் கட்டுப்பாட்டில் வரும் சிப்காட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக நிரஞ்சன்மார்டி ஐஏஎஸ் உள்ளார். 

சிப்காட் நிறுவனம் சம்மந்தமான வழக்குகளை கையாள்வதற்கென்றே தனியாக வழக்கறிஞர்களை  நியமிப்பது வழக்கம். அதன்படி மதுரை உயர்நீதிமன்றத்தில் சிப்காட் சம்மந்தமான வழக்குகளை கையாள்வதற்கான விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர்.கங்காதரன் மணிவாசகன் B.A.,LL.B., அவர்களை சிப்காட் நிறுவனம் பணியமர்த்தியுள்ளது. அருப்புக்கோட்டை ஸ்ரீ விநாயகா ப்ளு மெட்டல்ஸ் உரிமையாளர், தொழிலதிபர் M.மணிவாசகன் அவர்களின் மூத்த மகனான வழக்கறிஞர் கங்காதரன், உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் S.மாதவன் அவர்களிடம் ஜூனியராக பயிற்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இளம் வயதில் (27) அரசு நிறுவன வழக்கறிஞராக நியமனம் செய்யப்பட்டுள்ள கங்காதரன் மணிவாசகன் மென்மேலும் வழக்கறிஞர் தொழிலில் சிறந்து விளங்கவும், பல உயரங்களைத் தொடவும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved