🔴 LIVE | முப்பெரும் விழா 2023


முப்பெரும்விழா-கிராம மக்கள் உற்சாகம்- ரூ.50000 நன்கொடை!

கோவை தெற்கு மாவட்ட இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் கிளைகள்  தொடக்க நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஆனைமலை வட்டம் இராமச்சந்திராபுரம் மற்றும் சின்னப்பம்பாளையம் ஆகிய கிராமங்களில் புதிய கிளைகள் நிறுவப்பட்டு, தேர்வு செய்யப்பட்ட கிளை நிர்வாகிகள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். 

இராமச்சந்திராபுரம் அரண்மனையார் ஆனந்தராஜா மற்றும் ஒடையகுளம் பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவர் R.B.பூபதி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கோவைமாவட்ட ஒருங்கிணைப்பாளர் K.T.மோகன்ராஜ், இணை ஒருங்கிணைப்பாளர் M.சிவக்குமார், மாவட்ட தலைவர் குணசேகர், மாவட்ட செயலாளர் வெங்கடேஷ்குமார், இளைஞரணி செயலாளர் குணசேகரன், கொள்கைப்பரப்பு செயலாளர் R.A.கணேஷ், பொன்னாபுரம் புஷ்பராஜ், மகளிரணி அமைப்பாளர் பாக்கியலட்சுமி உள்ளிட்ட நிர்வாகிகளும், ஏராளமான பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

புதிய கிளை அமைக்கப்பட்டதை வாழ்த்தியும், ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும் முத்துமாணிக்கம், கோபாலகிருஷ்ணன், பேரூராட்சி மன்ற உறுப்பினர் மாசையன்பழனிச்சாமி உள்ளிட்டோர் விளக்கிப்பேசினர். 

இருநூறுக்கும் அதிகமானோர் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்தும், ஒருங்கிணைத்தும் வெற்றிகரமாக நடத்தி சமுதாய உறவுகளுக்கு ஊக்கமும், உற்சாகமும் அளித்தார் ஓய்வு பெற்ற காவல்துணை ஆய்வாளர் இராஜேந்திரன்.

தொடக்க விழாவில் ஜனவரி 29-ஆம் தேதி கலைவாணர் அரங்கில் நடைபெறவுள்ள முப்பெரும் விழாவில் இராமச்சந்திராபுரம் மற்றும் சின்னப்பம்பாளையம் சார்பில் சிறப்பு பேருந்து ஏற்பாடு செய்து கலந்துகொள்வதென்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், முப்பெரும் விழா நன்கொடையாக இராமச்சந்திராபுரம் கிராம சமுதாய உறவுகள் சார்பில் ரூ.50000/- (ரூபாய் ஐம்பதாயிரம் மட்டும்) வழங்கப்பட்டது.


இராஜகம்பளத்தார் சமுதாய உள்ளாட்சி தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களை மையப்படுத்தி முன்னெடுக்கப்படும் இந்த விழாவில் முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ளவும், ஒத்துழைப்பு வழங்கவும்  கட்சியினரும் தலைவர்களுமே சுணக்கமாக செயல்பட்டு வரும் நிலையில், கிராம மக்கள் தன்னெழுச்சியாக ஒன்றுகூடி முப்பெரும் விழாவிற்கு முழுவீச்சில் தயாராகிவருவதும், நன்கொடையை அள்ளிக்கொடுப்பதும் மகிழ்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் இருப்பதாக நாமக்கல் அறக்கட்டளை தலைவர் மு.பழனிச்சாமி கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும், சமுதாயத்திற்கு ஒரு எம்.எல்.ஏ., எம்.பி வேண்டும் என்று சமுதாய பொதுமக்களிடம் இருக்கும் ஆசையும், ஆர்வமும் கட்சியினரிடமும் இருக்க வேண்டும் என்றும், கட்சிகளில் பணியாற்றும் தலைவர்கள் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பினை மட்டும் பெற்றால் போதும் மக்களே தேவையான நிதிதிரட்டி வெற்றிபெறச் செய்துவிடும் நிலை தற்போது உருவாகியுள்ளதை பார்க்க முடிவதாக முன்னாள் வட்டார வளர்ச்சி அதிகாரி நாகப்பன் தெரிவிக்கின்றார்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved