🔴 LIVE | முப்பெரும் விழா 2023


மூர்த்தி சிறிது-கீர்த்தி பெரிது! மாஸ் காட்டும் தாமரைக்குளம்!

வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் ஜனவரி 29 இல் சென்னை கலைவாணர் அரங்கில் மாவீரன் கட்டபொம்மனின் 264-வது பிறந்தநாள், கட்டபொம்மன் அகாடமி, மக்களாட்சியில் இராஜகம்பளத்தார் ஆகிய நிகழ்வுகளை உள்ளடக்கிய முப்பெரும் விழா படுவிமர்சையாகக் கொண்டாட ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 


மத்திய, மாநில அமைச்சர்கள் மற்றும் பல்வேறு சமுதாய தலைவர்கள் கலந்து கொள்ளும் இந்த விழாவினை சிறப்பிக்க உள்ளநிலையில், நாமக்கல் தொட்டிய நாயக்கர் சமுதாய அறக்கட்டளை, கட்டபொம்மன் கல்வி அறக்கட்டளை போன்ற சகோதர சமுதாய அமைப்புகள் சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்திற்கு முழு  ஒத்துழைப்பை நல்கிவருகின்றன. 


இதற்கிடையே கடந்த ஜூலை 31-ஆம் தேதி தொடங்கப்பட்ட கோவைமாவட்ட இராஜகம்பள சமுதாய  நலச்சங்கம் தொடர்ந்து மாவட்டத்தின் பல பகுதிகளில் கிளைகளை தொடங்கி வருவதோடு, முப்பெரும் விழா நிதியை கிராமம் வாரியாக தனித்தனியாக வழங்கிவருகின்றன. 


முதல்கட்டமாக ஆனைமலை அருகேயுள்ள இராமச்சந்திராபுரம் கிராமத்தில் நடைபெற்ற கிளை துவக்கவிழாவோடு முப்பெரும்விழா நிதியாக ரூபாய் ஐம்பதாயிரம் வழங்கப்பட்டது. 


இதனைத்தொடந்து, கோவை மாவட்டத்தில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவு கம்பளத்தார் குடும்பங்கள் வசிக்கும் தாமரைக்குளம் கிராமத்தின் சார்பில் நேற்று (18.12.2022) முப்பெரும்விழா நன்கொடையாக ரூ.92000/- (ரூ.தொண்ணூற்று இரண்டாயிரம் மட்டும்)   ஒரே நாளில் வசூல் செய்து மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.டி.மோகன்ராஜ், இணை ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் ஆகியோரிடம் வழங்கப்பட்டது. மூர்த்தி சிறிதென்றாலும் கீர்த்தி பெரிதென்பதற்கேற்ப சொற்ப குடும்பங்களேயுள்ள தாமரைக்குளம் உறவுகள் தங்கள் தயாள குணத்தை வெளிப்படுத்தியது மாவட்ட நிர்வாகிகளுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளதோடு,  மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திட கடுமையாக உழைக்க வேண்டிய நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளது.


வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் மீதும், அதன் செயல்பாடுகள் மீதும் நம்பிக்கை கொண்டு ஏழை, எளியோர் தொடங்கி பெரும் பணக்காரர்கள் வரை நிதியுதவிகளை வாரி வழங்கி வருவதற்கு சங்கத்தின் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளதோடு, சமுதாய முன்னேற்றத்திற்காக முன்பைவிட கூடுதல் பொறுப்போடும், உற்சாகத்தோடும் தொடர்ந்து பாடுபட்டு மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவோம் என்றும் வியர்வை சிந்தி சம்பாதித்த ஒவ்வொரு வெள்ளிக்காசும் சமுதாய மேம்பாட்டிற்காக உரிய முறையில் செலவழிக்கப்படும் என்றும் உறுதியளித்தார். 


நேற்று தாமரைக்குளத்தில் நடைபெற்ற நிதிதிரட்டும் நிகழ்ச்சியில் மூத்த தலைவர் முத்துசாமி நாயக்கர், மாவட்ட செயலாளர் வெங்கடேஷ்குமார், துணைத்தலைவர் இராஜேந்திரன், சுரேஷ்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved