🔴 LIVE | முப்பெரும் விழா 2023


உறங்காமல் உழைக்கும் நிர்வாகிகள்! உற்சாகமாக வரவேற்கும் உறவுகள்!

வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனாரின் 264-வது பிறந்தநாள் விழா, மக்களாட்சியில் இராஜகம்பளத்தார் மலர் வெளியீடு மற்றும் வீரபாண்டிய கட்டபொம்மன் அகாடமி தொடக்கம் ஆகிய நிகழ்வுகளை ஒன்றிணைத்து வரும் ஜனவரி'29 ஆம் தேதி முப்பெரும்விழாவாக தலைநகர் சென்னையில் அமைந்துள்ள கலைவாணர் அரங்கில் கொண்டாடப்படவுள்ளது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மேயர், துணைமேயர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் சமுதாய தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.


முப்பெரும் விழாவினை வெற்றிகரமாக நடத்திட கோவை மாவட்ட இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தினர் கடுமையாக உழைத்து வருகின்றனர். கடந்த ஜூலை 31-ஆம் தேதி மாவட்ட அளவில் தொடக்கவிழா நடந்து முடிந்தவுடன், ஆங்காங்கே கிராமங்களில் கிளைகள் வேர்விடத்தொடங்கின. இதனைத்தொடர்ந்து முப்பெரும் விழா அறிவிப்பு வெளியானவுடன் நிர்வாகிகளும், உறவுகளும் உற்சாகமாக உள்ளனர். மாவட்ட நிர்வாகிகள் வார விடுமுறை நாட்களில் கிராமங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த நிலையில், உற்சாகம் மிகுந்த உறவுகள் வேலை நாட்களிலேயே மாவட்ட நிர்வாகிகளை அழைத்து நிதியுதவி அளிக்கத்தொடங்கியுள்ளனர். 


திடீர் அழைப்பாக நேற்று மாலை வக்கம்பாளையம் கிராமத்திலிருந்து வந்த அழைப்பை ஏற்று அங்கு விரைந்த மாவட்ட நிர்வாகிகளிடம் ஊராட்சி மன்றத் தலைவர் வி.என்.ரவி ரூ.10000/-, ஊர்பண்ணாடி வி.என்.ரங்கராம் ரூ.5000/-, நடுத்திண்ணை எம்.சிவராஜ் ரூ.5000/-, திமுக ஒன்றிய துணைச்செயலாளர் திருநாவுக்கரசு ரூ.5000/-, இராஜகம்பள நலச்சங்கத்தின் மகளிரணி துணை அமைப்பாளர் ஜெயந்தி செல்வராஜ் ரூ.5000/-, ஆனந்தராஜ் ரூ.2000/-, மென்பொறியாளர் சீனிவாசன் முத்துசாமி ரூ.2000/- என மொத்தம் ரூ.34000/- வழங்கப்பட்டது. இந்த சந்திப்புகள் முடிவதற்கு இரவு நெடுநேரம் ஆகிவிட்டபடியால் நிர்வாகிகள் வேறு உறவுகளை சந்திக்க முடியாமல் திரும்ப வேண்டிய சூழல் ஏற்பட்டது.


மாவட்ட நிர்வாகிகள் அடுத்தடுத்து வேறு கிராமங்களுக்கு செல்ல  வேண்டியிருப்பதால் மீதமுள்ள உறவுகளை கிளை நிர்வாகிகள் அவரவர் இல்லங்களில் சென்று சந்திக்குமாறு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.டி.மோகன்ராஜ் அறிவுரை வழங்கியுள்ளார்.

நேற்றைய பயணத்தில் இணை ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார், தெற்கு மாவட்ட தலைவர் குணசேகர், துணைத்தலைவர் இராஜேந்திரன், மாவட்டசெயலாளர் வெங்கடேஷ்குமார், இளைஞரணி செயலாளர் குணசேகரன், மூத்த தலைவர்கள் முத்துசாமி நாயக்கர், இராமச்சந்திராபுரம் அய்யாசாமி ஆகியோர்பங்கேற்றனர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved