🔴 LIVE | முப்பெரும் விழா 2023


திருக்குறளுக்கு உரை தந்த கம்பள குல அரசி!

இந்து மெய்யியல் (தத்துவம்) கொண்டு திருக்குறள் உரை எழுதிய பெருமை பெற்ற லட்சுமி அம்மாள் கம்பளத்தார் குலத்தில் தோன்றிய மருங்காபுரி அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்..

திருச்சி மருங்காபுரி பாளையம் 322 கிராமங்களை உள்ளடக்கிய பெரிய பாளையம். அந்த பாளையக்காரர் மரபில் வந்த கிருஷ்ண விஜய பூச்சைய நாயக்கரின் மனைவியர்களில் ஒருவரான லட்சுமி அம்மாள் கிபி 1929 ல் திருக்குறளுக்கு இந்து மெய்யியல் ஒப்பீடோடு உரை எழுதியுள்ளார்.

அதற்கு முன்பு எழுதிய உரைகளை விட இது எளிதாகவும், புராணங்கள், இந்து கோட்பாடு கொண்டு அழகாக திருக்குறள் உரை அமைத்து அதற்கு திருக்குறள் தீப அலங்காரம் என்று பெயர் வைத்து தனது சொந்த செலவில் திருக்குறள் பிரச்சாரம் செய்துள்ளார்.

இலக்கியங்களில் பெண்களின் பங்கு குறைவாக இருந்த காலத்தில் லட்சுமி அம்மாளின் இந்த உரை புராண தொடர்பு கொண்டு எழுதப்பட்ட விதம் அக்காலத்தில் மிகப் பெரிய வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: ராஜபாண்டியன்

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved