🔴 LIVE | முப்பெரும் விழா 2023


முப்பெரும்விழா! தெலுங்கானாவில் ஆர்வம்!!

முப்பெரும்விழா! தெலுங்கானாவில் ஆர்வம்!

வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய  நலச்சங்கம், சார்பில் தலைநகர் சென்னையில் கலைவாணர் அரங்கில் நடைபெறவுள்ள முப்பெரும் விழாவில் கலந்துகொள்ள தெலுங்கானா மாநிலத்திலுள்ள கம்பளத்தார் சமுதாய உறவுகள் மிகுந்த ஆர்வமாக உள்ளனர். இது குறித்து கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.டி.மோகன்ராஜ் கூறியிருப்பதாவது,


வரும் ஜனவரி'29 இல் கலைவாணர் அரங்கில் முப்பெரும்விழா கொண்டாடப்பட இருப்பது அனைவரும் அறிந்ததே. இராஜகம்பளத்தார் வரலாற்றில் தலைநகரில் நடைபெறவுள்ள இந்த விழாவில் அமைச்சர் பெருமக்களும், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும், மேயர்கள் மற்றும் தெலுங்கு சமுதாய தலைவர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர். தமிழகத்திலுள்ள சமுதாய மக்களை ஒன்றுதிரட்டும் அதேவேளையில், நமது பூர்வீக பூமியிலுள்ள சமுதாய உறவுகளையும் இந்த விழாவில் கலந்துகொள்ளச் செய்யவேண்டும் என்ற அடிப்படையில் தெலுங்கா மாநில தலைநகரான ஹைதராபாத்திலுள்ள சில உறவுகள் மூலம் நம்மவர்களை அடையாளம் கண்டு அழைப்பதற்காக நேற்று மதியம் ஹைதராபாத் வந்தடைந்தோம்.

 அதன்பிறகு நேற்றுமாலை காவாளி, மியாப்பூர், செகந்திராபாத் ஆகிய இடங்களுக்கு சென்று முக்கிய தலைவர்களை சந்தித்தோம். மிகுந்த ஆர்வத்துடன் வரவேற்றவர்கள், நமது வரலாறுகளை ஆர்வமுடன் கேட்டு தெரிந்துகொண்டனர்.


இன்று காலை 20-க்கும் மேற்பட்ட நாங்கள் தங்கியிருந்த விடுதிக்கு வந்து முப்பெரும்விழாவில் நிச்சயம் கலந்துகொள்ளவதாக வாக்குறுதி அளித்தனர். 

அதேபோல் முப்பெரும்விழா நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மகளிர் வழக்கறிஞர் மாநாட்டை ஒத்திவைத்துவிட்டு கலந்துகொள்வதை உறுதி செய்தனர் தெலுங்கான அரசின் உயர்நீதிமன்ற வழக்கறிஞரும், அகில இந்திய ஓபிசி கூட்டமைப்பின் சட்ட ஆலோசகரும், மகாசபை பொதுச்செயலாளருமான வெங்கட் மற்றும்  வழக்கறிஞர் கோவர்தன் உள்ளிட்டோர். 


தவிர, மத்திய அரசு நிறுவனமான பெல் ஊழியர் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர், பொதுச்செயலாளர் ஆகியோர் சந்தித்து முப்பெரும் விழாவிற்கு வாழ்த்து தெரிவித்தனர். 

தெலுங்கான மாநில உறவுகளின் எழுச்சியும், ஆதரவும் மகிழ்ச்சியளிப்பதாக இருந்தது.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved