🔴 LIVE | முப்பெரும் விழா 2023


கோவையில் மாமன்னர் சிலைக்கு பால்குடம் சுமந்து பெண்கள் ஊர்வலம்! கம்பளத்தாரின் கண்ணியம் காக்க வேண்டுகோள்!

பாஞ்சை பெருவேந்தன் கட்டபொம்மனாரின் 264-வது பிறந்தநாளை முன்னிட்டு கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.டி.மோகன்ராஜ்  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

இராஜகம்பளத்து உறவுகளுக்கு வணக்கம். ஒருங்கிணைந்த கோவை மாவட்ட இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் பாஞ்சை வேந்தர் வீரபாண்டிய கட்டபொம்மனாரின் 264-வது பிறந்தநாளை முன்னிட்டு நாளை (03.01.2023) காலை 9 மணி அளவில் கோவை ஈச்சனாரியில் அமைந்துள்ள மாமன்னர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படவுள்ளது.

இந்நிகழ்ச்சியில் அனைத்துக் கட்சி அரசியல் தலைவர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு சமுதாய தலைவர்களோடு, நமது சமுதாயத்தைச் சேர்ந்த ஊர்நாயக்கர்கள், பெரியோர்கள் கலந்துகொள்ள வருகைதர உள்ளனர். 

மேலும், சமுதாய நலச்சங்ககத்தின் சார்பில் கோவை கவுண்டம்பாளையம் பிரபு நகர், சின்னத்தொட்டி பாளையம்  மற்றும் ஈச்சனாரி மகளிர் அணி சார்பாக நூற்றுக்கணக்கான பெண்கள் பால்குடம் எடுத்து கட்டபொம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து சிறப்பிக்க உள்ளனர்.

அது சமயம், மாவீரனுக்கு மரியாதை செலுத்த வரும் இளைஞர்களும், பொதுமக்களும் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் எவ்வித இடையூறும் நேராமால், மிகுந்த ராணுவக்கட்டுப்பாட்டோடும், ஒழுக்கத்தோடும், சாலைவிதி, போக்குவரத்து விதிகளை கடைபிடித்து சமுதாயத்திற்கு நன்மதிப்பையும், பெருமையையும் சேர்க்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


மேலும், இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் நிர்வாகிகளும், உறுப்பினர்களும் மாவீரனுக்கு மரியாதை செலுத்தவரும் அரசியல் கட்சித் தலைவர்களையும், சமுதாய தலைவர்களையும், கட்சி, மத,இன,மொழி பேதமில்லாமல், இன்முகத்தோடு வரவேற்று உபசரித்து உரிய மரியாதையோடு, கௌரமாக வழியனுப்பி வைக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம். நலச்சங்க நிர்வாகிகள் யாரும் தலைவர்களோடு போட்டோ எடுப்பதற்கு முண்டியடிப்பதை தவிர்ப்பதோடு, சிலையைச் சுற்றி ஆக்கிரமித்து நின்று இடைஞ்சல் செய்யக்கூடாது என்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.  


விழாவிற்கான ஏற்பாடுகளை சிலைக்குழு நிர்வாகிகளோடு, இராஜ கம்பள சமுதாய நல சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர், இணைய ஒருங்கிணைப்பாளர், மாவட்ட தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள், மாவட்ட பொருளாளர்கள், அணி நிர்வாகிகள், மகளிர் அணி அமைப்பாளர் மற்றும் நிர்வாகிகள், அனைத்து கிளை நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved