🔴 LIVE | முப்பெரும் விழா 2023


கட்டபொம்மன் அகாடமி நன்கொடையாளர்களின் பெயர்கள் கல்வெட்டில் பதியப்படும்!

வீ.பா.க.பொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் சென்னை செங்குன்றத்தில் 21/4 கிரவுண்ட் நிலத்தில் 12000 சதுரடியில் கட்டப்பட்டுள்ள கட்டிடம், சமுதாயத்தின் பயன்பாட்டிற்காக "கட்டபொம்மன் அகாடமி" என்ற பெயரில் ஜனவரி'29-இல் கலைவாணர் அரங்கில் நடைபெரும் முப்பெரும்விழாவில் ஒப்படைக்கப்படவுள்ளது.

2006-ஆம் ஆண்டு இச்சங்கம் பதிவு செய்யப்பட்ட நாள் முதல் இன்றுவரை நிலம் வாங்கியதில் தொடங்கி கட்டிடம் கட்டி முடியும் வரை சமுதாயத்திலுள்ள பல்வேறு தரப்பினர் தங்களால் இயன்ற நன்கொடையை வழங்கி வருகின்றனர். சமுதாயத்தில் ஏதாவது நல்ல காரியம் நடக்கட்டும் என்ற எண்ணத்தில் ஏழைகள் முதல் செல்வந்தர்கள் வரை ரூ.50-இல் தொடங்கி பல லட்சங்கள் வரை அள்ளி வழங்கியுள்ளனர். இவர்கள் செய்த உதவிகளையெல்லாம் நன்றி மறவாமல் கௌரவிக்கும் வகையில் முப்பெரும்விழா நிகழ்ச்சி தொகுப்பில் புகைப்படங்களும்,கல்வெட்டுகளில் நன்கொடையாளர்களின் பெயர்களை தரவரிசைப்படி பதிந்திட நிர்வாகம் முடிவுசெய்துள்ளது.

தற்பொழுது முப்பெரும்விழா பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவருவதால் நன்கொடையாளர்களின் புகைப்படங்களை சேகரிக்க முடியாத காரணத்தால், விழா நிறைவுபெற்றபின் இப்பணிகள் தொடங்கப்பட்டு, கல்வெட்டு திறப்பை ஒருவிழாவாக கொண்டாடிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதேபோல் முப்பெரும்விழா நன்கொடையாளர்களின் புகைப்படங்களும் சேகரிக்கப்பட்டு தரவரிசைப்படி பட்டியலிடப்பட்டு முப்பெரும்விழா மலரில் இடம்பெறச் செய்திட திட்டமிடப்பட்டுள்ளது. தவிர பிளாட்டினம் கிளப் மற்றும் பர்பிள் கிளப் நங்கொடையாளர்கள் புகைப்படங்கள் அரங்கினுள் வைக்கப்படவுள்ளது. இதன் மூலம் நன்கொடையாளர்கள் கௌரவிக்கப்படுவதோடு, நன்கொடை அளித்தவர்கள் பெயர்கள் விடுபடுவது தவிர்க்கப்படுவதோடு வெளிப்படைத்தன்மையையும் உறுதிசெய்து கொள்ளமுடியும் என்று நிர்வாகம் நம்புகிறது.

எனவே, நன்கொடையாளர்கள் நிர்வாகத் தரப்பிலிருந்து கேட்கும்பொழுது விபரங்களை தரும்படியும் அல்லது அறிவிப்பு வெளியாகும்போது நன்கொடை வழங்கிய ரசீதோடு புகைப்படத்தையும் அனுப்பி உதவலாம் என்று நிர்வாகத்தின் தரப்பில் கூறப்பட்டுள்ளது.  

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved