🔴 LIVE | முப்பெரும் விழா 2023


தேசிய இனமா இராஜகம்பளத்தார்? மூத்த பத்திரிக்கையாளர் பாராட்டு!

வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் சார்பில் ஜனவரி'29-இல் நடைபெறவுள்ள முப்பெரும்விழாவிற்கான அழைப்பிதழ் நேற்றுமுன்தினம் வெளியிடப்பட்டது. இராஜகம்ப்ளத்தார் வரலாற்றில் முதன்முறையாக கலைவாணர் அரங்கில் நடைபெறும் மிகபிரமாண்டமான முறையில் நடைபெறவுள்ள முப்பெரும்விழாவிற்கான அழைப்பிதழ் அச்சடிக்கும்பணி நடைபெற்று வரும் நிலையில், முதல்கட்டமாக வாட்ஸ் அப் மூலமாக வெளியிடப்பட்டது. இந்த முப்பெரும்விழா அழைப்பிதழ் அரசியல் கட்சிகள், சமுதாய அமைப்புகள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் தாண்டி பிற மாநிலங்களிலும் மிகுந்த கவனத்தைப்பெற்றுள்ளது.

இதனொரு பகுதியாக, முப்பெரும்விழா அழைப்பிதழை சமூகவலைதளங்களில் பார்த்த தமிழகத்தின் மிக மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் உடனடியாக இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன் அவர்களை தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்ததோடு, நேரடியாக சந்திக்க அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டு இன்று சென்னையிலுள்ள நட்சத்திர ஹோட்டலில் மூத்த பத்திரிக்கையாளரை தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன் சந்தித்துப்பேசினார். 

தனியாக சந்திப்பு இருக்குமென்று நம்பி சென்ற தலைவர் இராதாகிருஷ்ணன் அவர்களுக்கு ஆச்சரியமளிக்கும் விதமாக மூத்த பத்திரிக்கையாளரோடு ஒரு பெரும் பட்டாளமே வந்திருந்தது. இந்த பேச்சின்பொழுது முப்பெரும்விழா அழைப்பிதழ் குறித்து நிறைய கேள்விகளை முன்வைத்தனர். குறிப்பாக தெலுங்கானா, ஆந்திரா மாநிலங்களைச் சேர்ந்த அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், சமுதாய தலைவர்கள் கலந்துகொள்வது குறித்தும், இதன் பின்னனி குறித்தும் கேள்விகளை எழுப்பிய வண்ணம் இருந்தனர். குறிப்பாக தமிழகத்தில் அரசியலில் பெரிய பிரதிநிதித்துவமோ, சமுதாயத்தில் குறிப்பிடத்தக்க ஆளுமைகளோ இல்லாதநிலையில் எப்படி உங்களால் இவ்வளவு நேர்த்தியாக திட்டமிடப்பட்டுள்ளது என்ற கேள்வியும், தமிழகத்திலுள்ள தெலுங்கு மொழி பேசும் கம்பளத்தார்கள் மாவட்ட எல்லைகளையே தாண்டியவர்கள் அல்ல என்பது பட்டவர்த்தமான உண்மை, அப்படியிருக்க பிற மாநிலங்களில் உங்கள் சமுதாயத்திற்கான தொடர்பு குறித்தான கேள்விகளை முன்வைத்தனர். மேலும், வரலாற்று ஆதாரங்கள் மூலம் உறுதி செய்வதற்கான ஆதாரங்கள் குறித்தும் கேள்வி எழுப்பினர்.

பத்திரிக்கையாளர்களின் எல்லா கேள்விகளுக்கும் நிதானமாகவும், தெளிவாகவும் விளக்கமளித்த தலைவர் இராதாகிருஷ்ணன், திரட்டப்பட்ட ஆவணங்களை அவர்களின் பார்வைக்கு வைத்ததோடு, ஆந்திரா, தெலுங்கான மாநிலங்களிலுள்ள கம்பளத்தாரோடு தொடர்புடைய சமுதாய முக்கிய தலைவர்களோடும் பேசவைத்தார். அப்போது திருமணம், சடங்கு, சம்பிரதாயங்கள், கலச்சாரம், குலத்தொழில் ஆகியவை ஒரே மாதிரியாக இருப்பது குறித்து ஆச்சரியம் அடைந்தனர். எல்லா சந்தேகங்களையும் போக்கிக்கொண்டவர்கள் இறுதியாக தமிழகத்தில் வாழும் இராஜகம்பளத்தார்கள் தமிழகத்தில் மட்டுமல்ல தேசிய அளவில் மாநிலத்திற்கேற்ப வெவ்வேறு பெயர்களில் வாழக்கூடிய தேசிய இனம் என்றும், அனைவருக்குமான ஒற்றை அடையாளமாக பகவான் கிருஷ்ணர் இருப்பதையும் சுட்டிக்காட்டினர்.

இந்த சந்திப்பின் மற்றொரு ஆச்சரியமாக,கூட்டத்தின்  இறுதில் தேசியக்கட்சி ஒன்றின் தலைவரோடு அலைபேசிவாயிலாக பேசுமாறு கேட்டுக்கொண்டனர். இதற்கு சம்மதம் தெரிவித்தவுடன் உடனடியாக தொடர்புக்கு வந்த அந்தத் தலைவர் முப்பெரும்விழா-விற்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும், வரும்காலங்களில் உங்கள் சமூகத்தினர் அதிகாரத்தில் உரிய பங்கினை பெறுவதற்கு எல்லா விதத்திலும் உதவுவதாகவும் உறுதியளித்தார். 

இறுதியாக மூத்த பத்திரிக்கையாளர், இந்த அளவிற்கான அரசியல் புரிதல் கம்பளத்தார் சமுதாயத்திற்கு உண்டா? முப்பெரும்விழா நிகழ்ச்சிக்கு தலைவர்களின் ஒத்துழைப்பும், புரிதலும் எந்த அளவில் உள்ளது என்ற கேள்வியோடு, தகுதி வாய்ந்த தலைவர்களை அடையாளம் கண்டு ஊக்கப்படுத்துமாறும் கேட்டுக்கொண்டார். மேலும் இளம் தலைமுறையினரின் சிந்தனைப்போக்கில் மாற்றத்தை கொண்டுவரும் வகையில் வரலாற்றையும், புதிய கருத்துகளையும் கொண்டு சேர்த்து வெற்றிபெற வாழ்த்துகளை தெரிவித்தார். 


இந்த சந்திப்பு மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ள தலைவர் இராதாகிருஷ்ணன், புகைப்படங்கள் தற்போது வெளியிட வேண்டாம் என்றும், சந்தர்ப்பம் வரும்பொழுது வெளியிடலாம் என்று பத்திரிக்கையாளர் கூறியதாக தெரிவித்துள்ளார்.   

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved