🔴 LIVE | முப்பெரும் விழா 2023


MBC இடஒதுக்கீடு விவகாரம் - தமிழக அரசின் உத்தரவுக்கு சமூகநீதி கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு!

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் உள்ஒதுக்கீடு வழங்குவது குறித்து மூன்று மாதங்களில் அறிக்கை தர பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு தமிழக அரசு கடந்த 12.01.2023 (அரசாணை எண்-6) உத்தரவிட்டுள்ளது. இதை பாமக தலைவர் மருத்துவர் இராமதாசு வரவேற்றுள்ள நிலையில், வன்னியர் தவிர்த்த பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளை உள்ளடக்கிய சமூகநீதி கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து சமூகநீதி கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

1. பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் மக்கள் தொகை துல்லியமாகவோ, தோராயமாவோ முறையாக கணக்கிடப்படவில்லை. இஸ்லாமியர்களுக்கு அருந்ததியர்களுக்கு அப்படி ஒரு கணக்கெடுப்பு தெளிவாக உள்ளது. எனவே பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களில் முறையான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தாமல் எந்தச் சமூகம் எத்தனை எண்ணிக்கையில் இருக்கின்றார்கள் என்ற முடிவான கணக்கிற்கு வருவது தவறானது. அதுமட்டுமல்லாமல் ஒரு சாதிக்கு மட்டும் இடஒதுகீடு வழங்கவே முடியாது. அரசியலுக்காக மக்களை ஏமாற்றுகின்றனர். 

சமூகநீதி மீது யாருக்கும் கடுகளவும் அக்கரையில்லை. தமிழக அரசு 12.1.2023 பிறப்பித்துள்ள அரசாணை எண் 6, நீதிமன்ற அவமதிப்பாகும். சென்னை உயர்நீதிமன்றம் மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு உள்ஒதுகீடு சம்பந்தமாக ஆலோசனை வழங்க அதிகாரமில்லை என்றும் அது சம்பந்தமாக கூட்டத்தில் அலோசிக்க்க் கூடாது என்றும் தடை உத்தரவு பிறப்பித்துள்ளபோது. இப்படி ஒரு அரசாணை வெளியிட்டுள்ளத்து சட்டத்தை மதிக்காத செயல்.

2. அரசமைப்புச் சட்டத்தில் வகுப்புவாரி இட ஒதுக்கீடு தான் வழங்க முடியுமே ஒழிய ஜாதி வாரி இடஒதுக்கீடு வழங்க முடியாது. ஜாதி  பிற்படுத்தப்பட்ட வகுப்புக்களை அடையாளம் காண்பதற்கு ஒரு கருவிதான். ஜாதி அடிப்படையிலேயே இட ஒதுக்கீடு வழங்கிவிட முடியாது.

3. ஒத்த சமூக கல்வி நிலையில் இருக்கின்ற சமூகங்களைப் பிரித்து ஒரு ஜாதிக்கு மட்டும் தனி இடஒதுக்கீடு வழங்க முடியாது.

சட்ட நிலைகள் இவ்வாறு இருக்க தமிழக அரசு மீண்டும் மீண்டும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களிடையே பதட்டத்தை உருவாக்கும் வகையில் இடஒதுக்கீடு விவகாரத்தில் செயல்படுவதற்கு சமூகநீதி கூட்டமைப்பு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. 


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved