🔴 LIVE | முப்பெரும் விழா 2023


எல்லா சாலைகளிலும் கம்பளத்தார்கள் தலைநகர் சென்னை கலைவாணர் அரங்கை நோக்கி!

வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் சார்பில் தோழமை அமைப்புகளின் ஆதரவோடும், ஒத்துழைப்போடும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முப்பெரும் விழாவில் கலந்துகொள்வதற்காக தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும், வெளிநாட்டு வாழ் கம்பளத்தார்களும் சென்னை நோக்கி புறப்பட்டுள்ளனர்.



நாளை (29.01.2023) மாலை 3 மணிக்கு தொடங்கும் முப்பெரும்விழாவிற்கு நேற்று (27.01.2023) வெள்ளிக்கிழமை  காலை புறப்பட்ட காரமடை, சின்னதொட்டிபாளையம், பெரிய தோட்டிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த  ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என குடும்பத்துடன் நாற்பதுக்கும் மேற்பட்ட சமுதாய உறவுகள் இரவு சென்னை, செங்குன்றத்தில் அமைந்துள்ள சமுதாய நலச்சங்க கட்டிடத்திற்கு வந்து சேர்ந்தனர். முப்பெரும் விழாவிற்கு முதல்வரவாக வந்து சேர்ந்த சமுதாய உறவுகளை மண்டல பொறுப்பாளர் குருசங்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் வரவேற்று, இரவு தங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்தனர்.


இதுதவிர இன்று காலை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சமுதாய உறவுகள் ஆர்வத்துடன் சென்னையை நோக்கி புறப்பட்டு விட்டதாக தகவல்கள் தெரிவித்தவண்ணம் உள்ளனர். 


இதற்கிடையே நேற்று முன்னிரவு நடைபெற்ற நிகழ்வில் வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், வீரபாண்டிய கட்டபொம்மன் அகாடமி ஆகிய பெயர் பொறிக்கப்பட்ட பெயர்ப்பலகையை நாமக்கல் தொட்டிய நாயக்கர் சமுதாய அறக்கட்டளை தலைவர் மு.பழனிச்சாமி பதித்துவைத்தார்.

இந்த நிகழ்ச்சியின் போது சங்கத்தின் பொருளாளர் எஸ்.இராமராஜு, மண்டல் பொறுப்பாளர் குருசங்கர், தங்கவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved