🔴 LIVE | முப்பெரும் விழா 2023


கம்பளத்தார் நடத்திய விழாவா? கார்ப்ரேட் நிறுவனம் நடத்திய விழாவா? வியக்கும் அதிகாரிகள் பாராட்டு.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (29.01.2023) வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் நடத்திய கம்பளத்தார்களின் முப்பெரும்விழாவிற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்தவண்ணம் உள்ளன.

அரசு நிகழ்ச்சிகள் குறிப்பாக தமிழக முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள், மிகப்பெரிய கார்ப்ரேட் நிறுவனங்கள் சார்பில் மட்டுமே கலைவாணர் அரங்கில் கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். சாதிய அமைப்புகளுக்கு கலைவாணர் அரங்கு வழங்கப்படுவதில்லை என்று இருந்துவந்த நிலையில், வீரபாண்டிய கட்டபொம்மந் நலச்சங்கம் சார்பில் முப்பெரும்விழாவிற்கு அரங்கம் கேட்டு விண்ணப்பித்தபோது, முதற்கட்ட அனுமதிக்கு சுமார் ஒருமாதகாலம் பரிசீலைனைக்கு எடுத்துக்கொண்டனர். அதன்பிறகு திடீரென அரங்க கட்டணத்தை உடனடியாக வங்கி வரவோலையாக செலுத்துமாறு உத்தரவிட்டபொழுது, சங்கத்திடம் கையிருப்பு பணம் ஏதுமில்லை. நிர்வாகத்திடம் ஒருவாரகால அவகாசம் கேட்கப்பட்டபொழுது, உங்களால் நடத்தமுடியுமா என்று அவநம்பிக்கையோடு கேட்டனர். அதேபோல் போலீஸ் தரப்பில் தடையில்லா சான்று பெறுவதற்கு விண்ணப்பித்திருந்த போது, விசாரணை நடத்திய அதிகாரி , சமீபத்தில் நடைபெற்றுமுடிந்த கட்டபொம்மன் பிறந்தநாள் நிகழ்வின்போது பல்வேறு இடங்களில் ஏற்பட்ட பிரச்சினைகளை சுட்டிக்காட்டி, மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் கூட்டம் நடத்த அனுமதி கேட்கின்றீர்கள், வருபவர்கள் அமைதியாக நடந்துகொள்வார்களா என்று சந்தேகம் எழுப்பினர்.


ஒருவழியாக எல்லா தடைகளையும் தாண்டி முப்பெரும்விழா வெற்றிகரமாக, அரசு அதிகாரிகள், காவல்துறையினரின் அச்சங்களுக்கு நேர்மாறாக மிகுந்த அமைதியோடும், கட்டுப்பாட்டோடும் நடந்து முடிந்ததற்கு நிர்வாகிகளை தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்துக்கொண்டனர். குறிப்பாக கலைவாணர் அரங்க தரப்பினர் முதல்முறையாக ஒரு சமுதாய கூட்டம் கார்ப்ரேட் பாணியில், டிஜிட்டல் முறையில் நடத்தி, பல்வேறு இடங்களில் இருந்தும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வந்திருந்தபோதும் எந்தவித இடையூறுகளோ, கூச்சல் குழப்பமோ, அசம்பாவிதமோ இன்றி நடத்தி முடித்திருப்பது எங்களுக்கு மனநிறைவையும், மகிழ்ச்சியையும் அளிப்பதாக தெரிவித்தனர். இதே கருத்தை வேறுவகையில் வெளிப்படுத்திய தென்மாவட்டத்தைச் சேர்ந்த தீயணைப்புத்துறை அதிகாரி, சிறுவயதிலிருந்தே கம்பளத்தார்களையும், அவர்கள் நடத்தும் கூட்டங்களை அறிவேன். ஆனால் நான் இதுநாள் வரை பார்த்த கம்பளத்தாருக்கும் இன்று பார்க்கும் கம்பளத்தாருக்கும் முற்றிலும் வேறுபாடு இருப்பதாக கூறினார். அதேபோல் காவல்துறையினரும் தங்கள் மகிழ்சியை வெளிப்படுத்தினர். இதேபோல் டிஜிடல் முறையில் நடைபெற்ற முதல் சாதிய அமைப்பின் கூட்டத்தை பார்த்ததாக பத்திரிக்கையாளர் ஒருவர் கருத்து தெரிவித்தார்

பல்வேறு தரப்பிலிருந்தும் தொடர்ந்து வரும் பாராட்டுக்கள் அனைத்தும் விழாவில் பங்கேற்ற உறவுகளுக்கும், நன்கொடையாளர்களுக்கும் சமர்ப்பிக்கின்றோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved