🔴 LIVE | முப்பெரும் விழா 2023


கேட்காமல் கொடுத்தவர்களும்!.... கேட்டும் மறுத்தவர்களும்!

வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் சார்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (29.01.2023) கலைவாணர் அரங்கில் மிகபிரமாண்ட முறையில் அமைதியாக நடைபெற்று முடிந்துள்ளது. முப்பெரும்விழா அறிவிக்கப்பட்ட நாள் முதல் விழா முடியும் வரை பலவேறு சுவாரஸ்யமான தகவல்கள் நிகழ்ந்து முடிந்துள்ளன. விழாவிற்கான நிதிதிரட்டல் தொடங்கி, விழா நடைபெறுவதற்கு சரியாக இரண்டுநாட்கள் முன்பு (27.01.2023) கலைவாணர் அரங்கிற்கான அனுமதிக்காக அனுப்பப்பட்ட பைல் தலைமைச்செயலகத்திலிருந்து திருப்பி  அனுப்பப்பட்டு அனுமதி மறுக்கப்படும் சூழல்நிலை உருவானது வரை எண்ணற்ற சம்பவங்கள் உள்ளும், புறமும் நடந்தேறியுள்ளது. 


இந்த சம்பவங்களையெல்லாம் தொகுத்து நூலாக வெளியிட ஆலோசனை வழங்கப்பட்டுள்ள நிலையில், கடந்த சில தினங்களாக முப்பெரும் விழாவிற்கு வங்கியில் நேரடியாக பணம் செலுத்தியவர்களை அடையாளம் காணும்பணி நடைபெற்று வருகிறது. இதில் ஆச்சரியமளிக்கும் பல தகவல்கள் தெரியவருகின்றன. முப்பெரும்விழாவிற்கு நன்கொடை திரட்ட சங்க நிர்வாகிகளும், தோழமை அமைப்பினரும், தன்னார்வலர்களும் உள்ளாட்சி தலைவர்கள், தொழிலதிபர்கள், பொதுமக்கள் ஆகியோரை நேரடியாகவும், தொலைபேசி வாயிலாகவும் தொடர்புகொண்டு நிதி திரட்டி வந்தனர். 


இப்படியான சந்திப்புகளில் பலர் ரொக்கமாக கொடுப்பதும், GPay, PhonePe ஆகியவை மூலம் வங்கிக்கு உடனடியாக அனுப்பவும் செய்தனர். அதேபோல் பலர் ரசீது பெற்றுக்கொண்டு பின்னர் அனுப்பியவர்கள், கொடுப்பதாக வாக்குறுதியளித்து இதுவரை நிறைவேற்றாதவர்கள், விழாவுக்கு வந்து தருவதாக சொல்லி தப்பித்துக்கொண்டதாக நினைப்பவர்கள் என பலதரப்பினர்கள் இருப்பதை காணமுடிகிறது. இதில் சுவாரஸ்யமானது முகம் தெரியாதவர்கள், நேரடியாகவோ, தொலைபேசி வழியாகவோ நிதிகேட்டு அணுகமுடியாதவர்கள் தாங்களாக முன்வந்து சங்கத்தின் வங்கிக்கணக்கிற்கு நிதியை அனுப்பி வைத்துள்ளனர். தற்பொழுது அவர்களை அடையாளம் கண்டு நன்றி தெரிவிப்பதற்காக தொலைபேசியில் அழைத்தால், அவர்கள் சொல்லும் ஒற்றைச்சொல் ஒன்றுதான், நீங்க இவ்வளவு கஷ்டப்பட்டு, உங்க சொந்த வேலையையெல்லாம் விட்டுவிட்டு சமுதாயத்திற்காக செய்யறீங்க, இதுக்கு நீங்க கேட்டுத்தான் பணம் போடனும்னா, எங்களுக்கும் சாதிமேலே பற்றும், அக்கறையும் இருக்குன்னு எப்படி நிரூபிக்கிறது என்ற பதில் தான் கோரசாக கேட்கிறது.


இதில் ஒருசில வெளிநாட்டினர்களும் அடக்கம். குறிப்பாக அமெரிக்காவில் கிரீன்கார்டு பெற்று குடும்பத்தோடு அமெரிக்க குடிமக்களாக வாழும் ஒருவர் ரூபாய் ஐம்பதாயிரம் முப்பெரும்விழா நன்கொடையாக வங்கிக்கணக்கில் செலுத்தியிருந்தார். நன்றி தெரிவித்து செய்தி வெளியிடலாம் என்று கடந்த ஒருவாரமாக போட்டோ அனுப்பி வைக்குமாறு வலியுறுத்தி வருகிறோம். ஆனால் அவர் சொல்லும் செய்தி ஒன்றுதான் நீங்களாவது இதை செய்யறீங்க... தொடர்ந்து நல்லா செய்யுங்க என்பது மட்டும் தான். நம்பிக்கையோடு செல்பவர்கள் கைவிடுவதும், அறிமுகமற்றவர்கள், முகம் தெரியாதவர்கள் எங்கிருந்தோ கேட்காமலேயே கொடுப்பதும் வழக்கம்போல் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறது.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved