🔴 LIVE | முப்பெரும் விழா 2023


உரிமைபெற்ற இராஜகம்பளத்தார்! உதவிக்கரம் நீட்டியோருக்கு நன்றி தெரிவித்தனர்!

திருச்செங்கோடு அருள்மிகு ஆறுமுகசாமி திருக்கோவில் தைப்பூச தேர்த்திருவிழாவில் இராஜகம்பளத்தார் சமுதாயம் மண்டபக்கட்டளை உரிமை பெறுவதற்கு உறுதுணையாக இருந்த நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளார் மதுரா செந்தில் மற்றும் அர்த்தநாரீசுவரர் கோவில் உதவி ஆணையாளர் மு.இரமணிகாந்தன் பி.ஏ.,பி.எல் ஆகியோருக்கு திருச்செங்கோடு இராஜகம்பளத்தார் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக இக்கோவில் தேரோட்டம் 51 ஆண்டுகளாக நடைபெறாமல் தடைபட்டிருந்த நிலையில், 2021-இல் புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட திராவிட முன்னேற்றக் கழக அரசு பல நூறு கோவிகளில் தடைபட்டிருந்த புணரைப்பு பணிகள் மற்றும் கோவில் தோரோட்டங்களை விரைந்து நடத்த இந்துசமய அறநிலையத்துறையை முடிக்கிவிட்டிருந்தது. அதனடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கையின் விளைவாக ஆறுமுகசாமி கோவில் தேரோட்டமும் நடத்த தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.


இந்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்திக்கொண்ட திருச்செங்கோடு வாழ் கம்பளத்தார் சமுதாயத்தினர் மண்டபக்கட்டளை பெறும் முயற்சியில் களமிறங்கினர். திருச்செங்கோடு ஒன்றியத்தில் இரண்டு ஊராட்சி மன்றத்தலைவர்கள், இரண்டு ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மட்டுமே இருந்தநிலையில், தங்கள் முழுபலத்தையும் பிரயோகித்து இந்த வாய்ப்பினை பெற்றுள்ளனர். இராஜகம்பளத்தாரின் இந்த முயற்சியை அறிந்த பிற சமுதாயத்தினரும் மண்பக்கட்டளை உரிமை தங்களுக்கும் வேண்டுமென்று கோரிக்கை வைத்தனர்.

அனைத்து சமுதாய மக்களின் கோரிக்கையையும் கனிவோடு பரிசீலித்த அருள்மிகு அர்த்தநாரீசுவரர் கோவில் உதவி ஆணையாளர் மு.இரமணிகாந்தன், இக்கோரிக்கையை உயர் அதிகாரிகள் மற்றும் தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றார். அதிகார்கள் மட்டத்திலும், அரசியல் மட்டத்திலும் தொடர்ந்து லாபி செய்த கம்பளத்தார் மண்டபக்கட்டளை உரிமையை கைவசமாக்கினர். இராஜகம்பளத்தார் முன்னெடுத்த இம்முயற்சியின் பலனாக மேலும் எட்டு சமூகங்களுக்கு மண்டபக்கட்டளை உரிமை புதிதாக வழங்கப்பட்டது. இதனால் தைப்பூச தேரோட்டவிழாவில் மண்டபக்கட்டளை பெற்ற சமுதாயங்களின் எண்ணிக்கை 21-ஆக உயர்ந்துள்ளது. புதிதாக சேர்க்கப்பட்ட சமூகங்களில் இராஜகம்பளத்து தொட்டிய நாயக்கர் சமுதாயம் முதலிடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பெருமைமிகுந்த அர்த்தநாரீசுவரர் கோவில் தைப்பூசகோவில் தேரோட்ட மண்டபக்கட்டளை உரிமை வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ள இராஜகம்பளத்தார் சமுதாயத்தினர் உதவி ஆணையாளர் மு.இரமணிகாந்தன் மற்றும் மாவட்ட செயலாளர் மதுரா செந்தில் ஆகியோரை சந்தித்து பொன்னாடை அணிவித்து நன்றி தெரிவித்துக்கொண்டனர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved