🔴 LIVE | முப்பெரும் விழா 2023


கட்டபொம்மன் அகாடமியை நேரடியாக பார்வையிட அமைச்சர் விருப்பம்!

கட்டபொம்மன் அகாடமியை நேரடியாக பார்வையிட அமைச்சர் விருப்பம்!

சென்னை, வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் சார்பில் ஜனவரி 29-ஆம் தேதி முப்பெரும்விழாவில் திறந்து வைக்கப்பட்ட வீரபாண்டிய கட்டபொம்மன் அகாடமியை நேரடியாக பார்வையிட விரும்புவதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் விருப்பம் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

ஏற்கனவே கலைவாணர் அரங்கில் வீடியோ கான்பரன்சிங் மூலம் அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்ட நிலையில், செங்குன்றத்தில் அமைந்துள்ள கட்டிடத்தை நேரடியாக பார்வையிட விரும்புவதாக கம்பளத்தார் சமுதாயத்தை சேர்ந்த  தலைவர் ஒருவரிடம் அமைச்சர் தெரிவித்துள்ளார். மாண்புமிகு அமைச்சர் தற்போது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்காக முகாமிட்டுள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை முடிந்து சென்னை திரும்பியவுடன் சங்கக்கட்டிடத்திற்கு வருகை தரும் விருப்பத்தை கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த அந்தத் தலைவரிடம் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் கூறிய இந்த தகவலை தொலைபேசி மூலம் இன்று நிர்வாகத்தோடு பகிர்ந்து கொண்ட அந்த தலைவர், அவரை வரவேற்க தயாராக இருக்கும்படி கேட்டுக்கொண்டார். மேலும், முப்பெரும்விழா இவ்வளவு சிறப்பாக நடத்தப்படுமென்று தான் நினைக்கவில்லை என்றும், இதில் தனக்கு ஏற்கனவே அறிமுகமான கோவை, ஈரோடு, இராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர், கரூர், நாமக்கல், திருப்பூர், சென்னை, நெல்லூர் போன்ற பல்வேறு பகுதிகளில் வாழும் கம்பளத்தார் சமுதாய தலைவர்களை ஒரே இடத்தில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது ஒரு அறிய நிகழ்வு என்றும், நிகழ்சியில் கலந்துகொண்டது தனக்கு முழு மனநிறைவைத் தந்ததாகவும், முப்பெரும்விழா ஏற்பாட்டாளர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டதாக அந்த தலைவர் தெரிவித்துள்ளார்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved