🔴 LIVE | முப்பெரும் விழா 2023


கட்டபொம்மன் சிலை திறந்த தமிழக முதல்வருக்கு குவியும் நன்றி அறிவிப்பு!

கம்பளத்தாரின் அரைநூற்றாண்டுகால கோரிக்கையான மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு தலைநகர் சென்னையில் சிலை என்பது இன்று தமிழக முதல்வரால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனால் உற்சாகமிகுந்த தலைவர்கள் பலர் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கோவை மாவட்ட திமுக பிரமுகர் ஈச்சனாரி மகாலிங்கம் வெளியிட்டுள்ள நன்றி அறிவிப்பு செய்தியில், வீரத்தின் விளைநிலம். மண்ணின் மானம் காக்க தூக்குக்கயிற்றை முத்தமிட்ட மாவீரன், தாய் மண்ணில் விடுதலைக்காக மாற்றானிடம் மண்டியிடாமல் கடைசி வரை போராடிய பாஞ்சை பெருவேந்தன் , மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களுக்கு சென்னையிலே சிலை. ஆம், அந்த மாமன்னனின் வீர வரலாற்றையும், தியாக வரலாற்றையும், நிலைகுலையாமல் இறுதிவரை போராடிய போர் குணத்தையும் எதிர்கால சந்ததியினர் அறிந்து கொள்ளும் விதமாக, விடுதலைப் போராட்ட வீரரை பெருமைப்படுத்த வேண்டும் என்பதற்காக முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் சேதமடைந்த பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை கம்பீரமாக கட்டி கொடுத்தார். அது இன்றும் சாட்சியாக உள்ளது.


மேலும் மாமன்னன் வீரபாண்டிய கட்டபொம்மனின் வம்சாவளியினருக்கு இலவச வீடுகளை கட்டி கொடுத்ததோடு அல்லாமல், அவருடைய வாரிசுகளுக்கு மாதம் தோறும் உதவித்தொகை வழங்கவும் ஆணை பிறப்பித்தவர் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள். அதுமட்டுமல்ல வீரபாண்டிய கட்டபொம்மன்  சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை மிகவும் பிற்படுத்தப் பட்டியலில் சேர்த்ததோடு, இந்த சமுதாயம் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழ் வாங்குவதற்கு மிகவும் கடினமாக இருந்த நடைமுறைகளை தளர்த்தி, மிக எளிதாக சான்றிதழ் கிடைப்பதற்கும் ஆணை பிறப்பித்தவர் தலைவர் கலைஞர். அதேபோல் வீரபாண்டிய கட்டபொம்மன் பெயரில் அன்றைய பிரதமர் வாஜ்பாய் தலைமையில் தபால்தலை வெளியிடுவதற்கு உறுதுணையாக இருந்தவர் தலைவர் கலைஞர். தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் என்பதுபோல், மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கும், அவர் சார்ந்த சமுதாயத்திற்கும் பல்வேறு சலுகைகள் தலைவர் கலைஞர் அவர்கள் செய்திருந்தாலும், இந்த சமுதாயத்தினர் அரைநூற்றாண்டு கோரிக்கை சென்னையிலே மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு சிலை வைக்க வேண்டும் என்பதுதான். நம்மிடையே இன்று தலைவர் கலைஞர் இல்லை.ஆனாலும் தலைவர் கலைஞர் இருந்தால் மாமன்னனுக்கு என்ன சிறப்பு செய்திருப்பாரோ அதையே தான் நம்முடைய மாண்புமிகு முதல்வர் தளபதி அவர்கள் தலைநகர் சென்னையில் மாவீரர்கள் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு சிலை அமைத்திருக்கிறார்கள். இந்த சமுதாயத்தின் அரை நூற்றாண்டு கோரிக்கையை நிறைவேற்றிய மாண்புமிகு முதல்வர் தளபதி அவர்களுக்கு கோடான கோடி நன்றி. தொண்டைக் குழியில் ஜீவன் உள்ளவரை மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனின் வம்சாவளியினர் உங்களுக்கு காலமெல்லாம் நன்றியோடு இருப்போம் என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல் சிலைதிறப்பிற்கு தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து பாஞ்சாலங்குறிச்சி ஆலயக்குழு சார்பிலும், திமுக பிரமுகர் மலைராஜன் உள்ளிட்ட பலர் நாளிதழ்களில் விளம்பரம் செய்துள்ளனர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved