🔴 LIVE | முப்பெரும் விழா 2023


ஈரோடு கிழக்கில் தொடரும் சீமானின் புளுகுமூட்டை!

நம்பவே முடியாக அப்படமான பொய்களை கொஞ்சமும் கூச்ச நாச்சமின்றி சினிமா பாணியில் பொய்களை கட்டவிழ்த்துவிட்டு தமிழகத்தில் ஒரு முட்டாள் கூட்டத்தை உருவாக்குவதில் கைதேர்ந்தவர் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். பிரச்சார மேடையென்றாலும், பத்திரிக்கையாளர் சந்திப்பு என்றாலும், பேட்டி என்றாலும் ஒவ்வொருமுறை மூக்கை நோண்டும்போதும் ஒரு பொய்யை அவிழ்த்துவிடுவார். இவர் விடும் கதைகளுக்கு முன் புராணக்கதை எழுத்தாளர்களே பிச்சை எடுக்க வேண்டும்.


தற்போது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு வாக்குக்கேட்டு பிரச்சாரம் செய்துவரும் சீமான், வழக்கம்போல் கதைகளை அளந்துவிட்டு தன் ரசிகக்குஞ்சுகளை பரவசப்படுத்தி வருகிறார். அந்தவகையில் ஈரோடு கிழக்குத்தொகுதியில் முதலியார் சமுதாய வாக்குகள் பெரும்பான்மையாக உள்ளதால், முதலியார் வாக்குகளை கவருவதற்காக பிரச்சாரக்கூட்டத்தில் புதிய கதை ஒன்றைக்கூறியுள்ளார். 



அதன்படி, விஜயநகர நாயக்கர் மன்னர்கள் செங்குந்தர் முதலியார்களிடம் தங்களுக்கு உடைகள் செய்யும்படி கேட்டதாகவும், அதற்கு அவர்கள் நாங்கள் மானத் தமிழர்கள், தெலுங்கர்களுக்கு உடை செய்ய மாட்டோம் போங்கடா என்று சொல்லிவிட்டதாகவும், வேற வழி இல்லாமல் செளராஷ்டிரா பகுதியில் இருந்து செளராஷ்டிரா நெசவாளர்களை அழைத்து வந்து நாயக்கர்கள் உடை செய்து கொண்டதாகவும்,போருக்கு முதலில் வந்ததால் முதலியார் என்றும் கதையளந்துள்ளார். மற்றொரு இடத்தில், விஜயநகர பேரரசின் காலத்தில் தான், தமிழகத்தில் சாதிய தீண்டாமை வந்தது என்றும் பேசியுள்ளார்.


சீமானின் புளுகுகளுக்கு பதிலடி கொடுத்துள்ள நெட்டிசன்கள், தெலுங்கர்களுக்கு உடை நெய்ய மறுத்த கதை உண்மையென்றால், சீமானின் சொந்த சாதியினர் நடத்தும் மளிகைக்கடைகளில் தெலுங்கர்களுக்கு பொருட்களை விற்காதே என்று சொல்ல முடியுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளனர். முதலியார்களுக்கு உள்ள மான, ரோசம் தன் சொந்த சாதிக்கு இல்லை என்று சீமான் மறைமுகமாக விமர்சிக்கின்றாரா என்றும்,  ஜவுளி ஏற்றுமதிக்கு புகழ்பெற்ற ஈரோடு மாநகரில் உள்ள தொழிலதிபர்கள் கிருஸ்தவ, முஸ்லீம் நாடுகளுக்கு விற்க வேண்டாம் எங்கிறாரா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.


மேலும், நாயக்க மன்னர் ஆட்சியில்தான் சாதி வந்ததாக கூறப்படுவதை மறுத்து பாண்டியர் காலத்தில் இருந்த சாதிய ஒடுக்குமுறைக்கு  ஆதரமாக புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலை என்ற ஊரின் சிவன்கோவிலில் உள்ள கி.பி.1228-ல் எழுதப்பட்ட கல்வெட்டு ஆதாரத்தை பதிவிட்டு, வரலாற்றை ஒழுங்காக படிக்க சீமானுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved