🔴 LIVE | முப்பெரும் விழா 2023


தெலுங்கானா முதல்வர் பிறந்தநாள்விழா-வுக்கு கம்பளத்தாருக்கு அழைப்பு!

தெலுங்கானா முதல்வரும், பாரதிய ராஷ்ட்ரிய சமிதி கட்சி தலைவருமான KCR என்றழைக்கப்படும் கே.சந்திரசேகரராவ் அவர்களின் 69-வது பிறந்தநாள் நேற்று தெலுங்கானா மாநிலம் முழுவதும் அக்கட்சியினரால் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. 

முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு ஹைதராபாத், பி.வி.நரசிம்மராவ் மார்க்-கில் அமைந்துள்ள த்ரில் சிட்டி கேளிக்கை விடுதியில், தெலுங்கானா மாநில கால்நடை மற்றும் திரைப்படத்துறை அமைச்சரான தலசானி சீனிவாச யாதவ் சார்பில் பிறந்தநாள் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ழ்சியில் அம்மாநில துணைமுதல்வர் உள்ளிட்ட அமைச்சரவை சகாக்கள், பாரதிய ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் முக்கிய தலைவர்கள், ஹைதராபாத் மாநகர மேயர், துணை மேயர் உள்ளிட்ட  முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வருமாறு சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்திற்கு புதனன்று இரவு அமைச்சர் அலுவலகத்திலிருந்து தீடீர் அழைப்பு விடுக்கப்பட்டது.


இதனையடுத்து வியாழனன்று இரவு சென்னையிலிருந்து புறப்பட்டு, நேற்று காலை மாண்புமிகு அமைச்சரை அவரது இல்லத்தில் சங்கத்தின் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன் மற்றும் பொதுச்செயலாளர் ஆகியோர் முப்பெரும்விழா நினைவுப்பரிசை வழங்கினர். அப்பொழுது சங்கத்தலைவரின் கைகளை இறுகிபற்றிக் கொண்ட அமைச்சர், ஓரிரு மாதங்களில் சட்டமன்ற தேர்தலை சந்திக்க இருக்கும் நிலையில், அதிகப்படியான அரசு அலுவல் காரணமாக முப்பெரும்விழாவில் கலந்துகொள்ள இருந்தது, இறுதிநேரத்தில் ரத்தாகிப்போனதற்கு மிகுந்த வருத்தத்தை தெரிவித்துக் கொண்டார்.  மேலும், முப்பெரும்விழா சிறப்பாக நடைபெற்றதாக தனது சகாக்கள் தெரிவித்ததாகவும், முப்பெரும்விழா புகைப்படங்களை பார்த்ததாகவும் , விழாவினை சிறப்பாக நடத்தியதற்கு வாழ்த்து தெரிவித்தார்.


இதனைத்தொடர்ந்து த்ரில் சிட்டி கேளிக்கை விடுதியில் அமைச்சர் ஏற்பாடு செய்திருந்த முதல்வரின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர். பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இவ்விழாவில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் கிராமிய கலைஞர்கள் முதல் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பிரபலங்கள் வரை பலர் கலந்துகொண்டனர்.  அதனைத்தொடர்ந்து துணை முதல்வர் தலைமையிலான அமைச்சர் குழுவினர், முதல்வரின் 69-வது பிறந்தநாளை குறிக்கும்வகையில் 69 கிலோ கேக் வெட்டப்பட்டது. கேக் வெட்டும் நிகழ்வு முடிந்தவுடன் இராஜகம்பள சமுதாய நலச்சங்க தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் ஆகியோரை மேடைக்கு அழைத்து தன் அருகில் நிறுத்தி புகைப்படம் எடுக்குமாறு அங்குள்ள புகைப்படக்காரர்களிடம் கூறினார். 

பிறகு நடைபெற்ற மதிய விருந்துக்குப்பின் அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக்கொண்ட நிர்வாகிகள் பிற தலைவர்களை சந்திக்க சென்றனர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved