🔴 LIVE | முப்பெரும் விழா 2023


வரலாறு காணாத வெயிலின் கொடுமை- வெப்ப அலை எச்சரிக்கை!

வரலாறு காணாத வெயில் என்று சொல்லுமளவிற்கு 122 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த வருடம் பிப்ரவரி மாதம் வெயிலின் தாக்கம் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. பொதுவாக கோடை காலம் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் தொடங்குவது தான் வழக்கம். ஆனால் வரலாற்றிலேயே இந்த ஆண்டுதான் வெப்பமான பிப்ரவரி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கான அதிகபட்ச வெப்பநிலை 29.54 டிகிரியாக பதிவாகியுள்ளது. இதற்கு முன்பு கடந்த 2016 ஆம் ஆண்டு வெப்பம் 29.48 டிகிரியாக பதிவானது. கடந்த 2006 ஆம் ஆண்டு 29.31 டிகிரி, 2017 ஆம் ஆண்டு 29.24 டிகிரி,2009 ஆம் ஆண்டு 29 புள்ளி 23 டிகிரி என வெப்பம் பதிவாகி இருந்தது. ஆனால் இந்த வருடம் பிப்ரவரி மாதம் அதிகபட்ச வெப்பநிலை 29.54 டிகிரி ஆக பதிவாகியுள்ளது. 

குறிப்பாக குஜராத், மஹாராஷ்டிரா, கோவா, இமாச்சலப்பிரதேசம், உத்திரகாண்ட், ஹரியானா போன்ற மேற்கு, வடமேற்கு மாநிலங்களில் வழக்கத்தைவிட 5 முதல் 10 டிகிரி செல்சியஸ் வரை அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது. தலைநகர் டெல்லியில் அதிகபட்சமாக 31.5 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. இதன் காரணமாக வழக்கமாக மார்ச் மாதத்திற்கு பிறகு வெளியிடப்படும் வெப்ப அலை எச்சரிக்கை இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்திலேயே விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved