🔴 LIVE | முப்பெரும் விழா 2023


இரயில் நிலையங்களில் சென்ட்ரல், ஜங்சன், டெர்மினல்ஸ் வித்தியாசம் என்ன?

ரயில்வே ஸ்டேஷன்களில் ரயில் உள்ளே நுழையும் இடங்களில் பிளாட்பாரங்களில் பெரிய மஞ்சள் பலகை இருப்பதை  பார்த்திருப்போம் அதில் அந்த ஊரின் பெயர் இருக்கும்.  சில ஊர்களில் பெயருக்கு பின்னால் சந்திப்பு, சென்ட்ரல், டெர்மினல், கண்ட் உள்ளிட்ட சில வார்த்தைகள் இருக்கும்.

#சென்ட்ரல்:

இந்தியாவில் வெகு சில ரயில் நிலையங்களில் பெயருக்கு பின்னால் மட்டுமே சென்ட்ரல் என்ற வாசகம் இருக்கிறது. ஆனால் இவை அனைத்துமே இந்தியாவின் முக்கியமான ரயில் நிலையங்களாக உள்ளன. பிரிட்ரிஷ் காலத்தில் கட்டப்பட்ட பெரிய முக்கியமான ரயில் நிலையங்களுக்கு சென்டரல் என பெயரிட்டனர். அந்த பெயரே இப்பொழுதும் தொடர்கிறது. மும்பை சென்ட்ரல், கான்பூர் சென்ட்ரல், சென்னை சென்ட்ரல், மங்களூரு சென்ட்ரல், திருவனந்தபுரம் சென்டரல் ஆகிய ரயில் நிலையங்கள் தற்போது உள்ளன.

#டெர்மினல்:

டெர்மினல் என்பது இந்திய சுதந்திரத்திற்கு பின்னர் இந்திய அரசால் உருவாக்கப்பட்டது. இந்த ரயில் நிலையகளில் ரயில்கள் வர மட்டுமே முடியும். வந்த பின்பு ரயில்கள் அதை தாண்டி செல்ல முடியாது. இது தான் இறுதியான ஸ்டேஷனாக இருக்கும் இப்படியான இறுதியான ஸ்டேஷன்களுக்கு டெர்மினல் என பெயர் வைத்துள்ளனர். உதாரணமாக டில்லியில் ஆனந்த் விகார் டெர்மினல், மும்பையில் பந்த்ரா டெர்மினல் கன்னியாகுமரி டெர்மினல் ஆகிய ரயில் நிலையங்கள் உள்ளன.

#ஜங்சன்:

இது தமிழகம் மட்டுமல்ல இந்தியாவில் ஏராளமான ரயில் நிலையங்களில் பார்க்கும் வார்த்தை, ஆங்கிலத்தில் ஜங்ஷன் எனவும், தமிழில் சந்திப்பு எனவும் எழுதியிருப்பார்கள். இதற்கு அர்த்தம் அந்த ரயில் நிலையில் 2க்கும் மேற்பட்ட ரயில் பாதைகளை இணைக்கும் இடமாக இருக்கிறது என அர்த்தம். உதாரணமாக மதுரை சந்திப்பை எடுத்துக்கொள்வோம். அங்கு நெல்லை- திருவனந்தபுரம் ரயில் பாதை, நெல்லை -தென்காசி ரயில் பாதை, நெல்லை-திருச்செந்தூர் ரயில் பாதை ஆகிய வழிகளை இணைக்கிறது. இப்படியாக 2க்கு மேற்பட்ட வழிகளை இணைக்கும் ரயில் நிலையங்களை சந்திப்பு என குறிப்பிடுவார்கள்.

#கன்டோன்மென்ட்:

இந்தியாவில் சில நகரங்களில் மட்டும் கன்டோன்மென்ட் என ஒரு ரயில் நிலையம் இருக்கும். இதை ஆங்கிலத்தில் Cantt என குறிப்பிட்டிருப்பார்கள். இதற்கு அர்த்தம் அந்த ஊரில் ராணுவத்தின் கண்டோன்மென்ட் பகுதி இருக்கிறது என அர்த்தம். பெங்களூரு கண்டோன்மென்ட், ஆக்ரா கண்டோன்மென்ட் ஆகிய ரயில் நிலையங்கள் எல்லாம் இருக்கிறது.

மிடில் பெர்த் விதி: இந்திய ரயில்வே விதிகளின்படி, மிடில் பெர்த் உள்ள பயணிகள் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே அந்த பெர்த்தில் தூங்க முடியும். அதைத் தாண்டி தூங்கினால் நீங்கள் அதைத் தடுக்கலாம். அதுதான் ரயில்வே விதிமுறை. அதேபோல, காலை 6 மணிக்குப் பிறகு, மற்ற பயணிகள் கீழ் பெர்த்தில் அமரக்கூடிய வகையில் மிடில் பெர்த்தை மடக்க வேண்டும். அதாவது மேல் மற்றும் கீழ் பெர்த்களுக்கு இடையில் அமைந்துள்ள பெர்த்கள் கீழே மடிக்கப்பட வேண்டும்.

இரண்டு நிறுத்தங்கள் விதி: இரயில்வேயில் இரண்டு நிறுத்தங்கள் (Two stop) என்ற விதி உள்ளது. அதாவது, ஒரு பயணி பயணம் செய்யச் சரியான நேரத்தில் அவரது இருக்கையை அடையவில்லை என்றால், TTE உங்கள் இருக்கையை ரயிலின் அடுத்த இரண்டு நிறுத்தங்களுக்கு அல்லது அடுத்த ஒரு மணி நேரத்திற்கு வேறு எந்த பயணிகளுக்கும் ஒதுக்க முடியாது என்று இந்த விதி கூறுகிறது. அதாவது, உங்கள் போர்டிங் ஸ்டேஷனில் இருந்து அடுத்த 2 ஸ்டேஷன்கள் வரை இந்த விதி செயல்படும்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved