🔴 LIVE | முப்பெரும் விழா 2023


இணையதள முகவரிகளில் WWW என்பது கட்டாயம் தேவையா?

இணையதள முகவரிகளில் ‘WWW’ என்பது கட்டாயம் தேவையா? 

இணையதள முகவரிகளில் தள முகவரிக்கு முன் ‘www’ என்பது இருக்கும்.  ஏன் ‘www’ என்று மட்டும் சேர்க்கிறார்கள்?  அதற்கு மாற்றாக ‘abc’ என்றோ ‘xyz’ என்றோ இருந்தால் என்ன என்று சிந்தித்திருக்கிறீர்களா?  அப்படியானால் உங்களுக்கான பதிவு தான் இது!

இணையதள முகவரிகளை அமைப்பதில் நாம் விரும்பும் பெயருடன் இரண்டு ஒட்டுகள் எப்போதும் சேர்ந்து இருப்பதைப் பார்த்திருப்பீர்கள்.  அவை 1) உயர் நிலைத் திரளம்(‘Top Level Domain’) 2) துணைத்திரளம் (‘Sub Domain’) ஆகிய இரண்டும் ஆகும்.  இவற்றைப் பற்றித் தெரிந்து கொண்டால் உங்களுடைய சிந்தனைக்கு விடை கிடைத்து விடும்.

உயர் நிலைத் திரளம் (‘Top Level Domain’)

இணையதளங்கள் ‘.com’, ‘.org’, ‘.co.in’, ‘.edu’ என்பன போன்ற பல பின்னொட்டுகளுடன் இருப்பது உங்களுக்குத் தெரியும்  அவற்றைத் தாம் உயர்நிலைத் திரளம் என்று சொல்கிறோம்.  இவற்றுள் ஏதேனும் ஓர் உயர்நிலைத் திரளத்தைக் கொண்டு தான் இணையதளங்கள் எல்லாவற்றின் பெயரும் முடியும்.

துணைத் திரளம் (‘Sub Domain’)

இணையதளத்தின் பெயருக்கு முன்னால் ‘www’ என்று பார்க்கிறீர்கள் அல்லவா?  அது தான் துணைத் திரளம் ஆகும்.  இந்த ‘www’ என்பது போலப் பல துணைத் திரளங்களை ‘1234’, ‘abc’, ‘xyz’, என நாம் வைத்துக் கொள்ளலாம்.  ‘www’ என்பதைத் தான் வைத்துக் கொள்ள வேண்டும் என்னும் கட்டாயம் இல்லை.  அதே போல் ஏதாவது ஒரு துணைத் திரளத்தைக் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்னும் கட்டாயமும் இல்லை.  நீங்கள் தமிழ் என்று ஓர் இணையத்தளம் உருவாக்க விரும்பினால் ‘www.thamizh.com’ என்று தான் அமைக்க வேண்டும் என்பதில்லை; வெறுமனே ‘thamizh.com’ என்றும் வைத்துக்கொள்ளலாம். (DNS - Domain Name system) என்பதில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு இருக்கும். உதாரணமாக DNS ல் www மட்டும் configure செய்யப்பட்டு இருந்தால், நீங்கள் கண்டிப்பாக www சேர்க்க வேண்டும், இல்லையெனில் உங்களால் அந்த website i open செய்ய முடியாது. E.x DNS இல் www இல்லாமல் configure செய்யப்பட்டு இருந்தால், web browser இல் www இல்லாமல் மட்டுமே open செய்ய முடியும்).

உங்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கக்கூடிய இணையத்தளங்களாகிய ‘twitter’, ‘wordpress’ ஆகியன துணைத்திரளம் இன்றி தாம் இருக்கின்றன.  (ஒருமுறை தான் உலவியில் தட்டச்சிட்டுப் பாருங்களேன்!) தொட்டியநாயக்கர் தளத்தையே ‘www’ இன்றி ஒருமுறை உலவியில் திறக்க முயலுங்கள்!  பிறகு ஏன் ‘www’ என்னும் துணைத்திரளத்தைப் பெரும்பாலானோர் பயன்படுத்துகிறார்கள் என்கிறீர்களா?  வைய விரி வலை (‘World wide web’) என்பதன் சுருக்கமாகிய ‘www’ என்பது உலகம் முழுவதும் அறியப்பட்ட ஒன்று! அவ்வளவு தான்!  அதனால் வேறு பயன் எதுவுமில்லை என்கின்றனர் கணிப்பொறி வல்லுநர்கள். 

நன்றி: Muthukkutti

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved