🔴 LIVE | முப்பெரும் விழா 2023


கட்டபொம்மன் அகாடமி முதல்நாள் வகுப்பு தொடங்கியது!

கட்டபொம்மன் அகாடமி முதல்நாள் வகுப்பு தொடங்கியது!

சென்னை வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் ஏற்பாட்டில் கட்டபொம்மன் அகாடமி-மேத்தா ஐஏஎஸ் அகாடமி இணைந்து நடத்தும் கம்பளத்தார் சமுதாய மாணவ-மாணவியருக்கான குரூப் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் இன்று காலை தொடங்கியது. 

முன்னதாக அறுபதுபேர் விண்ணப்பிருந்த நிலையில், பலகட்ட நேர்காணலுக்குப்பின் 5 பெண், 5 ஆண் தேர்வர்களை அடையாளம் கண்டு நாமக்கல் தொட்டிய நாயக்கர் அறக்கட்டளை தலைவர் திரு.மு.பழனிச்சாமி மற்றும் சமூகநீதி கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளரும், ஓய்வு பெற்ற மத்திய பொதுப்பணித்துறை இயக்குநருமான திரு.பி.இராமராஜ் ஆகியோர் அடங்கிய தேர்வுக்குழுவினர் தேர்வு செய்து இலவச பயிற்சி வகுப்புக்கு பரிந்துரை செய்திருந்தனர்.

இந்தப்பரிந்துரைகள் அப்படியே ஏற்கப்பட்டு, தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு இன்று காலை அண்ணாநகரிலுள்ள மேத்தா ஐஏஎஸ் வளாகத்தில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. இன்றைய முதல்நாள் நேரடி வகுப்பில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பூபதிராஜா என்ற மாணவரும் சென்னை பூந்தமல்லியில் வசிக்கும் எட்டையபுரம் பகுதியைச் சேர்ந்த தேவி சித்ரா என்ற மாணவியும் பங்கேற்றுள்ளனர். மற்றவர்கள் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்றுள்ளனர். இன்றைய நேரடி வகுப்பில் பங்கேற்றவர்களுக்கு வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் பொதுச்செயலாளர் செந்தில்குமார் இராமராஜ் நேரடியாக சென்று வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.

வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் இந்த முயற்சிக்கு சிறிதாகவோ, பெரிதாகவோ அவரவர் சக்திக்கு ஏற்ப நன்கொடை வழங்கி சமுதாய முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருந்துவரும் நன்கொடையாளர்கள் அனைவருக்கும் இன்றைய நாள் அர்ப்பணிக்கப்படுகிறது.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved