🔴 LIVE | முப்பெரும் விழா 2023


மேட்டூர் அணைக்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 150 பைசா இழப்பீடு!

பிரிட்டீஷ்காரர்கள் இங்கு அணைகள் கட்டியதற்கு முக்கிய காரணம் உலகைப் பங்கிட்டுக்கொள்ள ஏகாதிபத்திய நாடுகளுக்கிடையே ஏற்பட்ட போட்டியும், அதைத்தொடர்ந்து ஏற்பட்ட யுத்தங்களும் தான். காலணி நாடுகளில் புதிய வருமானங்களை உருவாக்கி மேலும் பல யுத்தங்களை நடத்தி பல நாடுகளைப்பிடிக்க வேண்டும் என்ற ஆசையும் தான்.

அப்படி உருவானதுதான் மேட்டூர் அணை. காவிரியை தடுத்து அணைகட்ட வேண்டும் என்ற திட்டத்தை முதலில் 1828 ல் ஆராய்ந்தவர் ஆர்தர் காட்டன் என்ற பொறியாளர். 1856 ல் மேஜர் லாபோர்டு என்பவர் ஒரு திட்டத்தை உருவாக்கினார். இருப்பினும்,ஆதர் காட்டன் உருவாக்கிய திட்டத்திற்கு 1910 ல் அரசு ஒப்புதல் வழங்கி 3 கோடியே 85 லட்சம் மதிப்பீட்டில் 1925 ல் அடிக்கல் நாட்டப்பட்டதே மேட்டூர் அணைத்திட்டம். 3 லட்சத்து 1000 ஏக்கர் பாசன வசதிபெறும் வகையில் மேட்டூர் அணைகட்ட 1924 ல் மைசூர்-சென்னை மாகாணங்கள் ஒப்பந்தம் போட்டன.

மேட்டூர் அணைக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தின் அளவு 16 லட்சத்து 43 ஆயிரத்து 584 ஏக்கர். காலி செய்த வீடுகளின் எணிக்கை 4146. 21 கிராமங்கள் முற்றிலுமாக காலி செய்யப்பட்டது. இழப்பீட்டுத்தொகை 29,66,284 ரூபாய். அதாவது ஏக்கருக்கு 1ரூபாய் 50 காசுகள் மட்டுமே. 1800 குடிசைகள் அமைத்து 11800 பேர் நாள்தோரும் உழைத்து உருவாக்கியதற்கு வழங்கப்பட்ட கூலி ஆண்களுக்கு 7 அணா, பெண்களுக்கு 4 அணா.( ஒரு அணா ஒரு ரூபாயில் 1/16க்கு சமம்).

நன்றி:காவிரி நீரோவியம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved