🔴 LIVE | முப்பெரும் விழா 2023


கம்பளத்தார் கோட்டையில் மெகா ஜவுளிப்பூங்கா! இந்தியப் பிரதமர் மோடி அறிவிப்பு!

ஜவுளித் துறையை மேம்படுத்தும் விதமாக தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், ம.பி மற்றும் உ.பி.யில் பி.எம். மித்ரா திட்டத்தின்கீழ் மெகா ஜவுளிப் பூங்காக்கள் அமைக்கப்படும் என்று இந்திய பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இராஜகம்பளத்தார் சமுதாய மக்கள் அதிகம் வசிக்கும் விருதுநகர் மாவட்டத்தில் மெகா ஜவுளிப்பூங்கா அமையவுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் S.R.பார்த்தீபன்,

1. தமிழ்நாட்டில் எதாவது ஜவுளி பூங்கா அமைக்கப்படுமா?

2. அப்படி அமைக்கப்பட்டால் எந்த மாவட்டத்தில் எத்தனை பூங்காக்கள் அமைக்கப்படும்?

3. அப்படி அமைக்கப்பட்டால் எத்தனைபேர் வேலைவாய்ப்பை பெறுவார்கள் என்ற கேள்விகளை எழுப்பியிருந்தார்.

அதற்கு பதிலளித்த ஜவுளித்துறை அமைச்சர் பியூஸ் கோயல், இந்தியாவில் மொத்தமாக 7 பெரிய ஜவுளிப் பூங்காக்கள் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது எனக் கூறினார்.

1. மேலும் நாடு முழுவதும் ரூ.4,445 கோடி மதிப்பிலால டெக்ஸ்டைல் பார்க்/ ஜவுளிப் பூங்காக்கள் அமைக்கப்படும் எனவும்,

2. இத்திட்டத்தில் தமிழ்நாடு உட்பட 13 மாநிலங்களின் ஜவுளிப் பூங்காக்களை அமைக்க 18 பரிந்துரைகள் பெற்ப்பட்டுள்ளது எனவும்,

3. ஒவ்வொரு மெகா டெக்ஸ்டைல் பூங்காவும் சுமார் 1 லட்சம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பையும், சுமார் 2 லட்சம் பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பு உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது எனவும் பதிலளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இநிநிலையில் நேற்று பிரதம அமைச்சர் தனது டிவிட்டர் பதிவில், தமிழகம் உட்பட 6 மாநிலங்களில் பி.எம்.மித்ரா திட்டத்தின் கீழ்  ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்காக்கள் ஜவுளி துறையை 5F (Farm to Fibre to Factory to Fashion to Foreign) என்ற பார்வையில் மேம்படுத்த உதவும் என்று தெரிவித்துள்ளார். இந்த ஜவுளி பூங்காக்கள், துறை சார்ந்த அதிநவீன உள்கட்டமைப்பை அமைத்துத் தரும், கோடிக்கணக்கில் முதலீடுகளை ஈர்க்க உதவும் மற்றும் அதிகளவில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் என்று கூறியுள்ளார்.

முன்னதாக, கடந்த ஆண்டு டெல்லி சென்ற முதல்வர் ஸ்டாலின் அங்கு, மத்திய வணிகம் மற்றும் ஜவுளித் துறை அமைச்சர் பியுஷ் கோயலை சந்தித்துப் பேசினார். அப்போது’ தமிழகத்தில், மதுரை – கன்னியாகுமரி நெடுஞ்சாலையில், விருதுநகர் மாவட்டம் குமாரலிங்கபுரத்தில், 1,௦52 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டு உள்ளது. அங்கு ஒருங்கிணைந்த மெகா ஜவுளிப் பூங்கா அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினார். அவரும் அதற்கான ஒப்புதலை வழங்கினார்.

இதைத் தொடர்ந்து அதே ஆண்டு ஜவுளிப் பூங்காவை அமைப்பது குறித்து மத்திய ஜவுளித்துறை திட்ட இயக்குநா் அனில்குமார், வா்த்தக ஆலோசகா் சுப்ரா ஆகியோர் தலைமையிலான குழுவினா், ஏப்.11, 12 தேதிகளில் விருதுநகா் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டனா்.

2027-2028 வரையிலான ஏழு ஆண்டுகளில், ரூ.30 கோடி நிர்வாகச் செலவுகள் உட்பட, ரூ.4,445 கோடி பட்ஜெட்டில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved